" யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாகவே வைத்திருக்கிறேன். அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிற படியால் நான் அசைக்கப்படுவதில்லை" ( சங்கீதம், 16:8)
தன் சித்தத்தை பிதாவின் சித்தத்திற்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்த எந்த மனுஷனும் ஏமாற்றத்தைக் காணமாட்டான். வாழ்க்கையில் எல்லா காரியங்களிலும் தெய்வீக வழி நடத்துதல் உண்டென்று விசுவாசித்து,
"தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்"
என்று அப்போஸ்தலன் சொன்ன வார்த்தைகளை நினைவில் கொள்வான். தன் இருதயத்திலே பெரும் முன்னேற்றம் அடைந்ததற்கு இது சாட்சியாக இருக்கும்.
இப்பிரபஞ்சத்தின் தேவனையும் அவன் உலக வழிகளையும், நம் மாமிச சிந்தனைகளையும் மேற்கொண்டு சந்தோஷத்துடன் சகலத்திலும் தேவனை முன்வைத்து அவர் காட்டும் வழிகளில் நடக்க இவையாவும் நம்மை உற்சாகப்படுத்தும். ( சங்கீதம், 119:26-32; 59:61 )