கிறிஸ்துவின் பள்ளியில் நாம் ஒரு விசுவாசமுள்ள மாணவனாக இருப்போமேயானால் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நம் இருதயத்திலே பாவத்தை முற்றிலும் வெறுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
ஆனால் பாவிகளை நாம் வெறுக்க முடியாது. தேவ அன்பு நம்மிலே பூரணப்பட்டதாக இங்கே காணப்படவேண்டும்.
நம் மேல் அவதூரானவைகளைப் பேசி நம்மை நிந்திக்கிறவர்களிடம் கசப்பான மனப்பான்மையைக் காட்டாமல் நம் இரட்சகரும், போதகரும் நமக்குக் கற்பித்தபடி " உன் பகைஞனிடம் அன்பு கூறுவாயாக" என்ற பாடத்தை நம் இருதயத்திலே கொண்டு சகலத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும், நம்மை வெறுக்கிறவர்களுக்காகவும் ஜெபிக்கவே கடமைப் பட்டிருக்கிறோமே அல்லாமல் தீமைக்குத் தீமை செய்யாமல் அவர்களை ஆசீர்வதிக்கவே போதிக்கப்பட்டிருக்கிறோம்.