நீ உன்னை ஞானி என்றெண்ணாதே. தேவனுக்குப் பயந்து தீமையை விட்டு விலகு. (நீதிமொழிகள், 3:7)
தேவனுடைய பிள்ளைகளுக்கு தற்பெருமையானது தீங்கு விளைவிக்கக்கூடிய ஓர் காரியம்.
இது உண்மையான ஆவிக்குரிய வளர்ச்சிக்குத் தடையாக இருந்து இருதயத்தின் சீர்திருத்தலைக் குலைத்து அனேகருக்குப் பிரயோஜனமாக இராதபடி செய்து தேவ ஊழியத்திற்குத் தடையாக இருக்கும்.
தேவ வசனத்தின்படி " தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்."
ஒருவருடைய தன்னம்பிக்கையைக் காட்டிலும் தெய்வீக ஞானம் தன் பெலவீனங்களையும் பூரணமற்ற நிலைமையையும் உணரச்செய்து தேவன் பேரிலே அதிகமாகச் சார்ந்து பயத்துடன் அவரைச் சேவிக்கும்படி செய்யும். அத்தோடு கூட நாம் விழுந்துபோன நிலையிலிருந்து பலப்படுத்தி தீமைக்கு விலகியிருக்க நம்மை பலப்படுத்தும். ( ரோமர், 1: 19 - 23)