"பரம அழைப்புக்குப் பங்குள்ளவரகளாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கை பண்ணுகிற அப்போஸ்தலரும், பிரதான ஆசாரியருமாகிய கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள். " (எபிரெயர், 3:1)
கிறிஸ்துவின் சரீரத்தில் இணைக்கப்பட அழைக்கப்பட்ட யாவரும் இந்த உலகத்தின் பெலவீனக்களைக் குறித்து அறிந்திருப்பது தேவ சித்தமாக உள்ளது.
ஏனென்றால், பிதாவின் இராஜ்யத்திலே உயர்த்தப்பட்டு பரிசுத்த ஆசாரியராக உலகத்தை நியாயந்தீர்க்கும் போது மிருதுவாகவும், இரக்கமுள்ளவர்களாகவும், உதார மனதுடையவர்களாகவும் உலகத்தை நியாயந்தீர்க்க வேண்டும்.
பாவத்தினின்று விடுதலையாகி பூரணராக வந்த நம் இரட்சகரும் விழுந்து போன மனிதனின் பெலவீனங்களை அறிந்து உயர்த்தப்பட்டபோது உண்மையுள்ள பிரதான ஆசாரியராக இருக்கிறார்.
ஆதலால் அவருடன் இணைக்கப்பட்டு ஆசாரியராகவும், ஆட்சி செய்கிறவர்களுமாயிருப்பவர்கள், பாடுகளை அனுபவிக்க பிரதான ஆசாரியரைப்போலவே இருக்க வேண்டும். ( எபிரெயர், 4:14 -16 ; 2: 17,18 )