"நானே வழியும் சத்யமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னையன்றி ஒருவரும் பிதாவிடதுக்கு வரான்" என்று இயேசு சொன்ன வார்த்தையின் அடிப்படையில் கிறிஸ்த்தவர்கள் "இயேசு ஒருவரே நித்யத்துக்கு வழி" என்று போதிக்கும் போது,
"இயேசு ஒரேவர் மட்டும்தான் வழியா?"
இயேசுவின் உதவி இல்லாமல் வேறு யாரும் இறைவனை அடைய முடியாதா என்ற கேள்வி அனேகமாக எல்லா பிறமத சகோதரர்கள் மத்தியிலும் எழுவது இயற்க்கை!
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இறை மார்க்கத்தை போதித்து வரும் இந்து மதத்தின்மூலம் இறைவனை அடைய வழி இல்லையா? இறைமார்க்கத்தில் சரியாக நடந்து முக்தியடைந்த வள்ளலார், ரமண மகரிஷி, ராமலிங்க அடிகளார் போன்றவர்கள் இறைவனை அடையவில்லையா?
இயேசு ஒருவர்தான் வழி என்றால் இவர்களால் எப்படி இறைவனை அடைய முடிந்ததுபோன்ற பல்வேறு கேள்விகள் எழ வாய்ப்புள்ளது!
இதற்க்கான பதிலை சற்று ஆராய்வது நலம் என்று கருதுகிறேன்.
இந்து மார்க்கத்தின் முக்கிய கொள்கை "கர்மா" ஆகும். ஒருவர் செய்த கர்மா என்னும் பாவபுண்ணியம் அவரை பல பிறப்புகளில் தொடர்ந்து வரும் என்றும் அந்த கர்மாவின் நிலை முற்று பெரும்போதே ஒருவன் இறைவனை அடைய வாய்ப்பு உருவாகிறது என்றும் விளக்குகிறது!
வள்ளலார் அவர்களின் வெளிப்பாடுபடி, பாவம் செய்தவர்கள் சுழற்ச்சி முறையில் பூமியில் மறுபிறவி எடுக்கின்றனர் என்றும், என்று ஒருவர் முற்றிலுமாக "மாயா" நிலைகளில் அதாவது உலக பற்றிலிருந்து தன்னை விடுவித்து கொள்கிறாரோ அன்று அவர் உன்னத நிலயை அடைகிறார் என்றும் குறிப்பிடுகிறார்.
இந்து தத்துவங்கள் அனைத்து உண்மைகளே! ஆனால் இன்றைய பாவம நிறைந்த உலகில் ஒருவரால் முற்றிலுமாக உலக மாயா நிலைகளிலிருந்து விடுபட்டு பாவமே இல்லாமல் வாழ முடியுமா? என்பதுதான் இங்கு கேள்வி!
நீங்கள் பாவமே செய்யாத பரிசுத்தராக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் இறைவனடி சேரவழி உள்ளது இதை நான் மறுப்பதற்கில்லை! ஆனால் உலகில் பாவம் செய்யாத எவரும் இல்லை "எல்லோரும் பாவம் செய்து ஏகமாய் கேட்டுப்போனோம்" "நீதிமான் ஒருவராகிலும் இல்லை" என்றே வேத வாக்கியம் சொல்கிறது!
இயேசு பூமிக்கு வந்து பாவத்துக்காக மரித்ததும் பரிசுத்தமாக வாழும்பரிசுத்தருக்காக அல்ல! பாவத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் பாவிகளுக்காகத்தான் என்பதை அவரே "நீதிமான்களை அல்ல பாவிகளை இரட்சிக்கவேவந்தேன்" என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்.
நீங்கள் உங்கள் நெஞ்சை தொட்டு நன்றாக யோசித்து "நான் ஒரு பாவமும் செய்யாத நீதிமான்! எனக்கு எந்த பாவத்துக்கும் மன்னிப்பு தேவையில்லை" என்று சொல்லமுடியுமானால் உங்களுக்கு இயேசு தரும் பாவமன்னிப்பு தேவையில்லை
ஆனால் அப்படி வாழமுடியாதவர்கள் தங்களில் ஜன்ம பாவ/கர்மங்களிலிருந்து விடுதலை அடைந்தால்தான் மட்டுமே இறைவனடி சேரமுடியும். அப்படி பாவத்தில் இருந்து மீள முடியாமல் உழன்று கொண்டிருக்கும் மனித ஜென்மத்துக்கு, அவர்களும் இறைவனை அடைய ஒரு சலுகை வழியினைதான் இயேசு ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளார்!
ஒரு சிறிய உதாரணம்.
அரசு வேலைக்கு வயதுவரம்பு 35ஆக இருக்கும் போது ஊனமுற்றோருக்கு அதுசலுகை அடிப்படையில் 40-45ஆக உயர்த்தப்படுகிறது அனால் அவர் எனக்கு சலுகை எதுவும் தேவையில்லை நான் பொது பிரிவின் அடிப்படையிலேயே போட்டியிடுகிறேன் என்றால் யாரும் அவரை மறுப்பதில்லை அனால் வேலையில் சேர்வதற்க்கான தகுதி இழந்துவிடுவார்!
அதுபோல் பாவத்தால் ஊனமுற்றோர் ஒருவர், "நான் பாவி" என்று ஒத்துக்கொண்டு இயேசுவின் அண்டை வரும் போது, அவர் பாவங்கள் மன்னிக்கப்படவும், அவர் இறைவனைத் சேரவும் இயேசு தன்னிடம் உள்ள அதிகாரத்தால் அவருக்கு அனுமதி அளிக்கிறார் அந்த அதிகாரத்தை அவர் தன்னுடைய உயிரையும் இரத்தத்தையும் செலுத்தி பெற்றிருக்கிறார்!
மேலும் இயேசு அளிக்கும் மன்னிப்பு மூலம் ஒருவர் இறைவனை சென்று அடைவதில்லை! மாறாக மரித்தபின் "பரலோகம்" என்னும் ஓர் தனிப்பட்ட இடத்துக்கு அழைத்துசெல்லப்பட்டு நித்யமாக அங்கு வாழ்கின்றனர். அந்த இடம் எங்குள்ளது என்பது குறித்து அநேகர் அனேக வியாதமாக கூறியிருந்தாலும் அது இந்த உலகத்தில் கூட இருக்கலாம்! எனவேதான் இயேசு "என்பிதாவிடத்தில் அனேக வாசஸ்தலங்கள் உண்டு அவைகளில் ஒற்றை உங்களுக்கு ஆயத்தப்படுத்த போகிறேன்" என்று சொன்னார்.
இயேசு சொன்ன பரலோகம் என்பது வேறு, இந்து முறைப்படி இறைவனின் திருவடிகளை அடைவது என்பதுவேறு!
எனவே தெரிவு உங்களுடையது (THE CHOICE IS YOUR'S)
நான் எந்த பாவமும் செய்யவில்லை எனக்கு எந்த சலுகையும் வேண்டாம் பொதுவழியில் (GENERAL CATAGORY) இறைவனிடம் நியாயதீர்ப்புக்கு வருகிறேன் என்று நீங்கள் கருதினால் தாராளமாக செய்யலாம்! அனால் இந்து புராணப்படி ஒரே ஒரு பொய் சொன்ன தருமன், தான் மரித்த பிறகு அந்த ஒரே பொய்க்காக சிறிதுநேரம் நரகத்தை போய் பார்க்க வேண்டி வந்தது என்பதை மறக்க வேண்டாம்! (நாம் எத்தனை பொய்கள் சொல்லியிருப்போம், என்னென்ன வஞ்ச எண்ணங்கள், பொறாமைகள்,ஏமாற்று வேலை திருட்டுகள் விபச்சார பாவங்கள், நம்மில் நிறைந்துள்ளதுஅப்படியிருக்க நாம் நரகத்தில் நித்யமாக தங்கவேண்டிய நிலைதான் ஏற்ப்படும்என்றே நான் கருதுகிறேன்)
இல்லை "என்னால் முடியவில்லை நான் பாவி, இயேசுவின் சலுகை வழியில் பாவமன்னிப்பை பெற்று பரலோகம் போக விரும்புகிறேன்" என்று நினைத்தால் "வருத்தப்படு பாரம் (பாவம்) சுமக்கிரவர்களே வாருங்கம் என்னிடத்தில் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று விரித்த கையை மூடாமல் ஏக்கத்தோடு அழைத்து "என்னிடத்தில் வரும் எவரையும் நான் புறம்பேதள்ளுவதில்லை" என்று இனிய வாக்கு வழங்கியுள்ள இறைமைந்தர் இயேசு நிச்சயம் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவார்!