வேதபுத்தகம் என்பது தேவஆவியானவரால் பல்வேறு காலகட்டங்களில் தேவதாசர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு எழுதப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
தேவன் எழுதிக்கொடுத்த ஒரு புத்தகத்தை தேவஆவியானவரின் துணையின்றி சரியான அருத்தம் கொண்டு ஆராய்வது இயன்றதல்ல என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் எழுதிக்கொடுத்தான் பொருளை அவர் ஒருவரே அறிவார். வேறு எந்த மனிதனும் அறியமாட்டன்!
ஆவியானவர் தேவனுடைய ஆழங்களை அறிந்திருக்கிறார் என்று 1 கொரிந்தியர் 2:10 சொல்லும் பவுல் தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான் என்று தொடர்ந்து எழுதுகிறார்
"பிதா அனுப்பபோகிற சத்யஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்கு போதிதித்து"
என்று இயேசு குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் போதிப்பதர்க்கே பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்பட்டார். அவரின் துணையில்லாமல் மனித மூளையால் வேதவசனங்களை எவ்வளவுதான் ஆராய்ந்து அருத்தம் கொண்டாலும் தவறான பொருளுக்கே வழிவகுக்கும்
முதலில் ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்று பின்னர் வேதத்தை வாசித்து பொருள் அறிவதே சால சிறந்தது என்பது எனது கருத்து.
-- Edited by RAAJ on Wednesday 20th of May 2009 01:35:55 PM
பரிசுத்த ஆவி இல்லாமல் ஒருவனும் வேதத்தின் ஆழங்களையும் இரகசியங்களையும் புரிந்துக்கொள்ள முடியாது என்பது உண்மையே. ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்பவர் ஒரு ஆள்தத்துவமாக வந்து ஒரு ஆசரியரை போல் உங்களிடத்தில் சொல்லி தருவதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு சதுரங்க விளையாட்டு வீரர் அந்த விளையாட்டில் முழு ஈடுபாடுன் என்னேரமும் அந்த விளையாட்டையே சிந்தித்துக்கொண்டிருக்கும் போது தான் அவனுக்கு பல யுக்திகள் அந்த விளையாட்டில் தெரிய வருகிறது (அதாவது அந்த Game SPIRIT)ல். அப்படியே, தேவ ஆவி நிறைந்த ஒரு மனிதன் தேவனின் வார்த்தைகளை அந்த தேவனின் ஆவியிலே தான் புரிந்துக்கொள்ள முடியும். அந்த ஆவி என்றால், தேவன் அந்த வார்த்தைகளை தந்த அதே நோக்குடன், அதே சிந்தையில் வாசித்தால் மாத்திரமே அது சாத்தியமாகும்.
தனக்கு எல்லாமே தெரிந்து விட்டது என்று இருமாப்புடன் இருக்கும் எந்த ஒரு மனுஷனுக்கும் தேவன் தண்ணீரை தருவதில்லை, மாறாக தாகம் (தேடுபவனுக்கே, பிரயாசிப்பவனுக்கே, தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவனுக்கே) தண்ணீர் (சத்தியம், தேவ சிந்தை (ஆவி)) தருகிறார். "கிறிஸ்துவின் சிந்தை உங்களிடம் இருப்பதாக" என்றால், கிறிஸ்துவின் ஆவி உங்களோடு இருப்பதாக என்பது தான்.
செஸ் விளையாட்டு அறிவுடன் தேவ வார்த்தைகளை அறியும் அறிவை ஒப்பிடுவது சரியல்ல என்றே நான் கருதுகிறேன்.
எல்லா மனிதர்களுக்கும் சுய அறிவும் என்னும் பகுத்தறிவு ஓன்று உள்ளது. நமது அறிவை வைத்து தொடர்ந்து ஒற்றை யோசித்து அதன்படி முடிவெடுத்து செயல்படும் நிலை ஓன்று உள்ளது அதுதான் செஸ் விளையாட்டில் பொருந்தும். அங்கு "நீ இப்படி காயை நகர்த்து" என்று யாரும் போதிப்பது கிடையாது. ஒரு முறை நகர்த்தி தவறு நேர்ந்தால் இன்னொருமுறை அறிவை பயன்படுத்தி சரியாக நகர்த்த முயற்சிக்கலாம்.
ஆனால் இங்கு தேவனின் வார்த்தைகள் அப்படிபட்டதல்ல.
தங்களின் உதாரணத்தின் மூலமே, செஸ் விளையாட்டு போல நீங்கள் உங்கள் அறிவால வேதத்தை ஆராய முற்ப்படுகிறீர்கள் என்பது என்னால் அறிய முடிகிறது
வேதம் மிக தெளிவாக, தேவன் அனுப்பும் ஒருவர் உங்களுக்கு "போதித்து.......... நினைப்பூட்டுவார்" என்று சொல்கிறது. அப்படியிருக்கு மனித ஆவியால் அறிவால் வேதத்தை ஆராய்ந்து நிதானிப்பது சரியான கருத்தை தராது என்றே நான் கருதுகிறேன்.
"தேவன் வெளிச்சம் உண்டாக கடவது என்றார் வெளிச்சம் உண்டாயிற்று" சூரியன் சந்திரன் எல்லாம் படைக்கும் முன்னே எந்த சோர்ஸ்ஸும் இல்லாமல் வெளிச்சம் உண்டாயிற்று. அதன் பின் சூரியன் படைக்கப்பட்டது.
நம் அறிவை வைத்து பார்க்கும் போது சூரியன் வருவதால்தான் வெளிச்சம் வருகிறது போல் தெரிகிறது. சூரியன் இல்லாத வெளிச்சத்தை அறிவியலால் நம்ப முடியாது. அதுபோல் அறிவுக்கு எட்டியதெல்லாம் தேவனின் வழிப்படி உண்மையல்ல. அதனுள் இருக்கும் ஆழங்களை ஆண்டவர் ஒருவருக்குள் வந்து வெளிப்படுத்தினால் மட்டுமே அறியமுடியும் என்று நான் கருதுகிறேன்.
நம் அறிவை வைத்தும் தொடர்ந்து தியானித்தும் ஒரு வசனத்துக்கான பொருளை அறிய முடியும். ஆனால் அது எத்தனை சதவீதம் உண்மை என்பது யாருக்கும் தெரியாது.
ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாடங்களை போதித்து உணர்த்த ஒரு வாத்தியார் இருப்பது போல, நமக்கு அருளப்பட்ட மிகப்பெரிய வேத புத்தகத்தை போதித்து உணர்த்துவதற்கு ஆவியானவர் என்னும் ஆள்தத்துவம் உள்ள ஒரு ஆசான் அனுப்பப்பட்டார்! அவரே ஆவியானவர்! தேவஆவியின் ஒரு பகுதியான அவர், ஒரு மனிதனை போல நம்முள் வந்து பேசி வேதத்தை விவரித்து உணர்த்த முடியும். அவரை அறியாதவர்கள் அவரை உணர முடியாது.
பத்தாம் வகுப்பு புத்தகத்தை வாத்தியாரே இல்லாமலும் ஒருவர் படிக்க முடியும் ஆனால் அவர் அதை முழுமையாக பொருளுணர்ந்து படிப்பது கடினம்.
உலக புத்தகமே இப்படி புரிவதற்கு கடினமாக இருக்கும்போது ஆண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த ஆண்டவரின் வேதம் அவர் ஆவியானவரின் துணையின்றி, அறிவால் எவ்வளவுதான் ஆராய்ந்தாலும் அறிய முடியாது என்பதே எனது கருத்து!