இன்றையத் துன்புறுத்துதல், இதற்கு முன்பிருந்த எல்லாக்காலங்களைக்காட்டிலும் அதிகமாகப் பண்படுத்தப்பட்டதாக இருக்கிறது.
இன்றைய விசுவாசிகள் அன்றுபோல் கல்லெறிந்து கொல்லப்படுவதில்லை, அல்லது அவர்கள் மீது அம்பு மழை எய்யப்படுவதில்லை, அல்லது சிரச்சேதமும் செய்யப்படுவதில்லை.
ஆனாலும் இன்றைக்கும் கூட பொல்லாதவர்கள் விசுவாசிகள் மீது கொடூரமான வார்த்தைகளைக்கொண்ட அம்பு மழையைப் பொழிகிறார்கள். அவர்களுடைய உண்மையின் நிமித்தமாக பழிவாங்கப்பட்டு, நிந்திக்கப்பட்டு, ஐக்கியத்துக்குப் புறம்பாக்கப்படுகிறார்கள், இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் இவ்வாறாக சிரச்சேதம் அடைகிறார்கள்.
இத்தகைய எல்லாக் காரியங்களும் அனேக ஸ்தேவான்களை உருவாக்கி பின்பற்றத் தூண்டுகின்றன.
அவர்களுடைய சாட்சிகள் அன்று ஸ்தேவானின் முகத்தை பிரகாசிக்கச் செய்தது போல் பிரகாசிக்கப்படட்டும்.
அவர்கள் கண்கள் அன்று ஸ்தேவான் பிதாவையும், அவரது வலதுப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த இயேசு கிறிஸ்துவை பரிந்து பேசுகிறவராகவும், விடுவிக்கிறவராகவும் கண்டது போல் காணட்டும்.
ஸ்தேவானைப்போல அவர்களுடைய வார்த்தைகள் கிருபை பொருந்தினதாகவும், வல்லமை உள்ளதாகவும், தூய ஆவியினாலே நிரம்பப்பட்டதாகவும் இருக்கட்டும்.