" அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக்கொடிகள் கனி தராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப்போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும், நான் ஆண்டவரில் களிகூர்வேன்; என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்." ஆபகூக், 3:17,18
தேவாதி தேவன் ஏன் இந்த உலகத்தில் தீமையை அனுமத்தித்திருக்கிறார் என்று பார்ப்போமேயானால், தீமை செய்பவர்கள் கசப்பான அனுபவங்களின் மூலமாக நீதியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலவற்றை இயற்கையின் வெகுமதியாக அனுமதித்திருக்கிறார்.
நாம் இன்னுமொரு காரியத்தையும் காண்கிறோம் அது பரிசுத்தவான்களுக்கு எதிரான பொல்லாங்கனின் ஊழியம். இத்தகைய அனுவங்களின் மூலமாக அவர்களைப் பண்படுத்தி, புடமிட்டு, ஆயத்தமாக்கி, எல்லாவற்றையும் மேற்கொள்ளக்கூடியவர்கள் என நிரூபிக்கப்பட்டு, தேவன் உண்மையுள்ளவர்களுக்கென்று ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிற அந்த அற்புதமான இடத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவே.