" அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும்." எபேசியர், 4:15
கிருபையில் வளருவது என்றால் என்ன?
தேவனுடைய ஆதரவில் தனிப்பட்ட முறையில் அவரோடு நெருங்கி அவருடைய அன்பின் ஐக்கியத்திலும், ஆவியிலும் வளருவதேயாகும்.
இவ்வாறு அவருடைய கிருபையில் வளரும் பொழுது, அவரைப்பற்றி அறிகிற அறிவிலும் வளராதிருப்பது என்பது ஒரு இயலாத காரியம். இந்த குறிக்கோளுக்காகவே நம்மை ஒருமுகப்படுத்தி, தேவனைப்பற்றி அறிகிற அறிவிலே நாம் பூரணப்படுத்தப்பட்டு, அவருடைய ஆதரவிலே கட்டி எழுப்பப்ப்டுகிறோம்.
தேவ திட்டத்தின்படி அவரோடு நெருங்கிய ஐக்கியமுள்ளவர்களாகி, இணந்து செயல்படும் சிலாக்கியத்துக்கு பாத்தியதை உள்ளவர்களாகி அவருடைய திட்டத்தை நிறைவேற்றுபவர்களாகிறோம்.
எனவே, நாம் தேவனுடைய வழியை நேசித்து, அவருக்குக் கீழ்படிந்து, அவருடைய ஆதரவில் வளர வாஞ்சித்தால், ஜீவனுள்ள அவருடைய வேத வசனங்களை அனுதினமும் வாசித்து, தியானித்து, அவரப்பற்றி அறிகிற அறிவிலே வளருபவர்களாகக் காணப்படுவோம்.