" அன்பார்ந்தவர்களே, இத்தகைய வாக்குறுதிகளைப்பெற்றுள்ள நாம் உடலிலும் உள்ளத்திலும் மாசு எதுவுமின்றி நம்மையே தூய்மைப் படுத்துவோம். கடவுளுக்கு அஞ்சித் தூயவாழ்வில் நிறைவடைவோம்." 2 கொரிந்தியர், 7:1
இராஜரீக ஆசாரியக்கூட்டத்திற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் கீழ்க்கண்ட மாமிசத்தின் கிரியைகளான, வன்மம், வஞ்சனை, மாய்மாலம், பொறாமை, தீங்காய் பேசுதல் போன்றவைகளுக்கு தங்களை விலக்கிக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்? நாம் உறுதியாக சொல்லமுடியும் இந்த இராஜரீக ஆசாரிய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்த ஆரம்ப நாட்களில் மேற்சொன்ன எல்லா பெலவீனத்திலும் ஏதோ ஒன்றிரண்டு நம்மை மேற்கொள்ள முயற்சித்திருக்கும். நாம் அதி ஜாக்கிரதை உள்ளவர்களாக இருந்தால்தான் இவைகளில் வெற்றி சிறப்போம்.
நாம் நமது ஒவ்வொரு வாக்கு, கிரியை, சிந்தனையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவ்வாறு ஆராய்வதின் மூலம் நாம் மென்மேலும் சுத்திகரிக்கப்ப்ட்டு நம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாவோம்.