" என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது." சங்கீதம், 23:5
பாத்திரம் நிரம்புவதும், வழிவதும் இரட்டிப்பான முக்கியத்துவம் வாய்ந்தது. அது மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் இரண்டு விதத்திலும் நிரம்பி வழிகின்றதாக இருக்கின்றது. தேவனுடைய சந்தோஷத்தில் களிகூறுகிறவர்கள், அந்தத் துன்பத்தின் பாத்திரத்திலும் பருகவேண்டும். அவரோடு துன்பப்பட்டால், அவரோடே ஆளுகை செய்வோம். தற்காலத்தில் காணப்படும் இந்தத் துன்பங்களைக் குறித்துக் கவலைப்படாமல், நமக்கு வெளியாக்கப்பட்ட அந்த மகிமையைக்குறித்துப் பூரிபடைவோம். எனவேதான் துன்பத்திலும் மகிழ்ந்திருக்கக் கற்றுக்கொண்டுள்ளோம். துன்பம் நம்மை எவ்வளவு வருத்துகின்றதோ அதைக்காட்டிலும் நாம் சந்தோஷத்தால் நிரப்பப்படுவோம். எனவே அப்போஸ்தலர்களோடு நாமும் சேர்ந்து களிகூறுங்கள், மீண்டும் களிகூறுங்கள் என்று சொல்வோமா?!