" முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்றது திட உணவு, அவர்கள் நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப்பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள்." எபிரேயர், 5:14
தேவனிடத்தில் உண்மையும், நேர்மையுமான விசுவாசத்தை உடையவர்கள் அவருடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள்வாரகள்.
இதைக்கொண்டு அடிப்படை போதனைகளும், கொள்கைகளும் நிலைநாட்டப்பட்டன. இசைவாய் இணைக்கப்ப்ட்ட பெரும்பாலான கட்டிடத்தின் மேற்பகுதி பொன்னினாலும், வெள்ளியினாலும், விலையுயர்ந்த கற்களினாலும் ஏற்கனவே நிறுவப்பட்டு அந்த வேலை உறுதியாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.
உண்மை பயத்தோடும், பக்தியோடும் தேவனைப்பற்றிக்கொண்டு, சத்தியத்திற்கும், தவறுக்கும் உள்ள வேறுபாட்டைக் கணிக்கத்தெரிந்த இவர்கள் தேவனுடைய வழியில் செயலாற்றும் திறமைக் கொண்டவர்கள்.
நாம் எதை நம்புகிறோம், ஏன் நம்புகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, உறுதியோடு தான் நம்புகிற விசுவாசத்தை அறிக்கையிடுகிறவர்கள்.