"ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி மரபினர். அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மை மிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி." 1 பேதுரு. 2:9
நாம் இந்த ஒளியினத்துக்கு அழைகப்பட்டதின் நோக்கமே இந்த ஒளியை பிரகாசமாக பிரதிபலிக்க வேண்டும் என்பதர்காகத்தான். ஒருவேளை அவ்வாறு நாம் பிரகாசிக்காவிட்டால் நம்மை அழைத்த அழைப்புக்கு தகுதியற்றவர்களாகிவிடுவோம். மேலும் அந்தப் பொக்கிஷம் நம்மிலிருந்து எடுக்கப்பட்டு நாம் மீண்டும் இருளில் சஞ்சரிப்பவர்களாகிவிடுவோம்.
இப்படியிருக்க சத்திய வெளிச்சத்தைப் பெற்ற நாம் அவருக்க்ய் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்தவர்களாக இருந்தால், அந்தகாரத்தினின்று மீட்ட அவருக்கு நாம் என்ன செய்வதின் மூலம் மகிமையைக் கொண்டு வர முடியும்?
என்னுடைய சுற்றத்தாருக்கும், என் அயலாருக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவிப்பவனாக இருக்கிறேனா?
பக்தன் பாடுவதைப்போல் கீழ்க்கண்டவாறு உறுதியிட்டு என்னால் கூற முடியுமா?
" எல்லாம் இயேசுவுக்கே, எல்லாம் இயேசுவுக்கே என்னை கிரயத்துக்கு மீட்டுக் கொண்டாரே என் எல்லா எண்ணங்கள், வார்த்தைகள், கிரியைகள் என்நாளும், எக்காலமும் அவருக்கே, என் இயேசுவுக்கே."