kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதாமின் பாவம் தேவனுக்கு முன்பே தெரியுமா?


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: ஆதாமின் பாவம் தேவனுக்கு முன்பே தெரியுமா?


வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் பெரும்பாலும் அடையாள மொழியில் எழுதப்பட்ட ஒரு புத்தகம். நீங்கள் குறிப்பிட்ட வெளி. 21:8 க்கு சற்றே மேலே 21:4ஐ வாசித்து பாருங்களே, "இனி மரணம் இல்லை" என்று இருக்கும். அதாவது மரணம் இல்லை என்று சொன்ன பிறகு, இரண்டாம மரணத்தில் பங்கடைவார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கும் படியாக கேட்டு கொள்கிறேன். இந்த வசனத்தில் சொல்லப்பட்டவை எல்லாம், systems. இதை பற்றி விவாதம் செய்ய தனி தலைப்பு துவங்கலாம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

anbu57 wrote:

நிச்சயமாக சகோ.ஆத்துமா அவர்களே!
ஆனால் பாவிகளான மனிதர்களுக்கு தேவன் பின்வரும் ஆக்கினையை நியமித்தது ஏனோ?
வெளி. 21:8 பயப்படுகிறவர்களும் .. கொலைபாதகரும் விபசாரக்காரரும் ... பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.



அன்பு அவர்களே! இப்போதுதான் விஷயத்துக்கே வந்துள்ளீர்கள். ஆக "எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையை இழந்துபோனார்கள்" அந்த "பாவத்தின் சம்பளம் மரணம்". ஒரு மனிதன் செய்த பாவத்தினால் முழு மனுக்குல‌மே மரணம் என்ற தீர்ப்புக்குள் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இந்தப் பெரும் பிரச்சனையைத் தீர்க்க தேவன் 'மனஸ்தாபப்பட்டு' புலம்பிக்கொண்டிருக்காமல் அவரது 'ஒரே பேறான' குமாரனை "உலகத்தின் பாவத்தை" சுமந்து தீர்க்க வந்த தேவாட்டுக்குட்டியாக அனுப்பி முழு உலகத்தையும் உயிர்த்தெழுதலுக்குத் தகுதியாக்கி "அதன் பின்" நீதியைக் கற்றுக்கொடுத்து (ஏசா26:9) அவர்களை நித்திய ஜீவனுக்குத் தகுதியாக்குகிறார்.






எனவே இப்போது உள்ள ஜனங்கள் அறியாமையில், இருட்டில், பாவத்தில் இருக்க வேண்டும் என்பது தேவ திட்டத்தின் ஒரு சிறு பகுதியே. உயிர்த்தெழுந்து நித்திய, நித்தியமாக வாழப்போகும் மனிதனுக்கு "அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இலேசான உபத்திரவம்"தான் உயிர்த்தெழுவதற்கு முந்தைய இந்தக் காலம்.





"எல்லோரும் இரட்சிக்கப்படவும்(மரணத்திலிருந்து, பின்பு) சத்தியத்தை அறியும் அறிவை அடையவும் தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்" இந்த அவரது சித்தம் வரப்போகும் பூமிக்குரிய அவரது "இராஜ்ஜியத்தில்' பூரணமாக நிறைவேரும். வேதம் முழுக்க இதைத்தான் திரும்பத் திரும்ப வாசிக்கிறோம்.





புதிய ஏற்பாட்டு "சபை" என்கிற "சிறு மந்தை" மாத்திரம் (உலகத்தோற்றத்துக்கு முன்பாக முன்குறிக்கப்பட்டவர்கள்) அவருடனே கூட பாடுபடுபவர்கள் அவருடனே "ஆளுகையும்" செய்வார்கள். எனவே "சபை"யையும், உலகத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.





நீங்கள் நினப்பது போல தவறு செய்வதற்கான எல்லா சூழல்களையும் உருவாக்கிவிட்டு அதில் தவறுபவர்களை "தண்டித்து" தன் ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் தேவன் அல்ல வேதம் சொல்லும் தேவன்.

 

 

 

'பாவத்தின் சம்பளம் மரணம்' என்றால் முதல் மரணம் மட்டும்தான். ஒருமுறை செத்தவனை மறுபடியும் எழுப்பி இன்னொருமுறை 'இரண்டாம் மரணத்தில்' சாகடிப்பதில் என்ன லாஜிக் இருக்கமுடியும்?




-- Edited by soulsolution on Wednesday 7th of October 2009 04:41:41 PM

-- Edited by soulsolution on Wednesday 7th of October 2009 04:46:03 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//ஒருமுறை செத்தவனை மறுபடியும் எழுப்பி இன்னொருமுறை 'இரண்டாம் மரணத்தில்' சாகடிப்பதில் என்ன லாஜிக் இருக்கமுடியும்?//

பிறவாத ஒரு மனிதனை உலகில் பிறக்கச் செய்து, வேதனைகளை அனுபவிக்க வைத்து, இறுதியில் மரணத்தையும் கொடுப்பதில் என்ன லாஜிக் உள்ளதோ, அதே லாஜிக் தான் ஒருமுறை செத்தவனை மறுபடியும் எழுப்பி இன்னொருமுறை 'இரண்டாம் மரணத்தில்' சாகடிப்பதிலும் இருக்கும்.

பிரசங்கி 4:2,3 இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப் பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன். இவ்விருதிறத்தருடைய நிலைமையைப் பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி.

இப்படியாக விசேஷ தேவஞானத்தைப் பெற்ற சாலொமோன் கூறுகிறார்.
இவ்வுலகில் பிறவாதவர்கள், பிறந்தவர்கள், மரித்தவர்கள் எனும் 3 திறத்தாரில் பிறவாதவர்களின் நிலைதான் சிறந்தது என சாலொமோன் கூறியிருக்க, பிறவாத மனிதனை பிறக்கச் செய்வதில் என்ன லாஜிக் இருக்கமுடியும்?

bereans wrote:
//வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் பெரும்பாலும் அடையாள மொழியில் எழுதப்பட்ட ஒரு புத்தகம். நீங்கள் குறிப்பிட்ட வெளி. 21:8 க்கு சற்றே மேலே 21:4ஐ வாசித்து பாருங்களே, "இனி மரணம் இல்லை" என்று இருக்கும். அதாவது மரணம் இல்லை என்று சொன்ன பிறகு, இரண்டாம மரணத்தில் பங்கடைவார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கும் படியாக கேட்டு கொள்கிறேன்//

வெளிப்படுத்தின விசேஷத்தின் காரியங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். பின்வரும் வசனங்கள் கூறுவதற்கு தற்போது பதில் தருவீர்களா?

மத்தேயு 5:22 ... தன் சகோதரனை மூடனே என்று சொல்கிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
மத்தேயு 5:29 ... உன் சரீரம் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 13:42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

soulsolution wrote:
//"எல்லோரும் இரட்சிக்கப்படவும்(மரணத்திலிருந்து, பின்பு) சத்தியத்தை அறியும் அறிவை அடையவும் தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்" இந்த அவரது சித்தம் வரப்போகும் பூமிக்குரிய அவரது "இராஜ்ஜியத்தில்' பூரணமாக நிறைவேரும். வேதம் முழுக்க இதைத்தான் திரும்பத் திரும்ப வாசிக்கிறோம்.//

மத்தேயு 10:22 முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். (முடிவுபரியந்தம் நிலைத்திராதவனின் கதி என்ன?)

மாற்கு 8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான். (இவனிடம், "எல்லோரும் இரட்சிக்கப்படவும்(மரணத்திலிருந்து, பின்பு) சத்தியத்தை அறியும் அறிவை அடையவும் வேண்டும்” எனும் தேவசித்தம் எவ்வாறு நிறைவேறும்?)

யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான் ... (அவ்வாறெனில் உட்பிரவேசியாதவனின் கதி என்ன?)

ரோமர் 9:27 இஸ்ரவேலரின் இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் ... (அவ்வாறெனில் மற்றவர்களின் கதி என்ன?)



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தங்களின் இந்த கேள்விகளுக்கு பதில் நரகம் என்கிற தலைப்பில் தந்திருக்கிறேன். தலைப்புவாரியாகவே நாம் பதிவுகளை பதியலாம் என்பதால் தான். நன்றி.

http://www.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=31251141



-- Edited by bereans on Thursday 8th of October 2009 08:39:47 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

புதிய ஏற்பாட்டு "சபை" என்கிற "சிறு மந்தை" மாத்திரம் (உலகத்தோற்றத்துக்கு முன்பாக முன்குறிக்கப்பட்டவர்கள்) அவருடனே கூட பாடுபடுபவர்கள் அவருடனே "ஆளுகையும்" செய்வார்கள். எனவே "சபை"யையும், உலகத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். என்று எழுதியும் அதை உணராமல் கீழ்கண்ட வசனங்களை பதித்திருக்கிறீகள்! ///மத்தேயு 5:22 ... தன் சகோதரனை மூடனே என்று சொல்கிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான். மத்தேயு 5:29 ... உன் சரீரம் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். மத்தேயு 13:42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். மத்தேயு 10:22 முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். (முடிவுபரியந்தம் நிலைத்திராதவனின் கதி என்ன?) மாற்கு 8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான். (இவனிடம், "எல்லோரும் இரட்சிக்கப்படவும்(மரணத்திலிருந்து, பின்பு) சத்தியத்தை அறியும் அறிவை அடையவும் வேண்டும்” எனும் தேவசித்தம் எவ்வாறு நிறைவேறும்?) யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான் ... (அவ்வாறெனில் உட்பிரவேசியாதவனின் கதி என்ன?) ரோமர் 9:27 இஸ்ரவேலரின் இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் ... (அவ்வாறெனில் மற்றவர்களின் கதி என்ன?)//


'எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்' என்றால் 'பாவத்தின் சம்பளம் மரணமல்ல எரி நரகம்' என்று மாற்றி எழுதவேண்டும். மூல பாஷையில் 'எரிநரகம்' என்ற ஒரு வார்த்தையே இல்லை. அது Gehanna' என்றழைக்கப்படும் எருசலேமிற்குத் தெற்கே உள்ள 'இன்னோம் குமாரனின் பள்ளத்தாககு'(அங்குதான் எருசலேமின் குப்பைகள், செத்த மிருகங்களின் உடல்கள் போடப்படும், ஒருபுறம் எரியும், இன்னொருபுறம் புழுக்கள் நிறைந்து நாறும்) ஆகும்.
கெஹன்னாவுக்கு ஏதுவாயிருப்பான் என்று 'இரண்டாம் மரணத்தைக் குறிப்பதற்காக கர்த்தராகிய கிறிஸ்து குறிப்பிட்ட அந்த பதம் நமது மொழிபெயர்ப்பாளர்களிடம் சிக்கி 'எரிநரகம்' ஆகிவிட்டது. ஆமாம் அதென்ன 'எரிநரகம்' அப்படியென்றால் 'எரியாத நரகம்' வேறு உள்ளதா? 'அக்கினிச்சூளையில் போட்டால் செத்துதானே போவார்கள்' அழுகையும், பற்கடிப்புன் எத்தனை செகெண்டுகள் இருக்கும்?

உட்பிரவேசியாதவன் கதி? என்று கேட்டுள்ளீர்கள். நான் திரும்ப அதையே கேட்ட்கிறேன், நானே வாசல் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். இயேசுகிறிஸ்து வந்து 2000 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்கு முன் வாழ்ந்த பல கோடி ஜனங்களின் கதி? (பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் உட்பட) நீங்கள்தான் சொல்லவேண்டும்?


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

anbu57 wrote:
//பாவிகளான மனிதர்களுக்கு தேவன் பின்வரும் ஆக்கினையை நியமித்தது ஏனோ?
வெளி. 21:8 பயப்படுகிறவர்களும் .. கொலைபாதகரும் விபசாரக்காரரும் ... பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.//

bereans wrote:
//வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் பெரும்பாலும் அடையாள மொழியில் எழுதப்பட்ட ஒரு புத்தகம். நீங்கள் குறிப்பிட்ட வெளி. 21:8 க்கு சற்றே மேலே 21:4ஐ வாசித்து பாருங்களே, "இனி மரணம் இல்லை" என்று இருக்கும். அதாவது மரணம் இல்லை என்று சொன்ன பிறகு, இரண்டாம மரணத்தில் பங்கடைவார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கும் படியாக கேட்டு கொள்கிறேன். இந்த வசனத்தில் சொல்லப்பட்டவை எல்லாம், systems. இதை பற்றி விவாதம் செய்ய தனி தலைப்பு துவங்கலாம்.//

anbu57 wrote:
//வெளிப்படுத்தின விசேஷத்தின் காரியங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். பின்வரும் வசனங்கள் கூறுவதற்கு தற்போது பதில் தருவீர்களா?

மத்தேயு 5:22 ... தன் சகோதரனை மூடனே என்று சொல்கிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
மத்தேயு 5:29 ... உன் சரீரம் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 13:42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.//


தேவன் பாவிகளுக்கு ஆக்கினையை நியமித்துள்ளார் என்பதைக் காட்டவே வெளி. 21:8-ஐ மேற்கோள் காட்டியிருந்தேன். ஆனால் வெளி. புத்தகம் அடையாள மொழியில் எழுதப்பட்டுள்ளதாக சகோ.பெரியன்ஸ் கூறியாதால், மத்தேயு 5:22,29; 13:42 வசனங்களை மேற்கோள் காட்டினேன்.

அதாவது பாவிகளுக்கு ஆக்கினை (அல்லது தண்டனை) நியமிக்கப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டவே அவ்வசனங்களை மேற்கோள் காட்டினேனேயன்றி, எரி நகரம் என்றால் என்ன, அங்கு எப்படிப்பட்ட வேதனை இருக்கும் என்பதை விவாதிக்க அல்ல.

சகோ.soulsolution பின்வருமாறு எழுதியிருந்தார்:
//ஒரு பிறந்த குழந்தையை கொண்டு போய் மோசமான சேரிப்பகுதியில் விட்டால் அது முழுக்க முழுக்க சேரிக்குழந்தையாகத்தான் வளரும். அதுபோலவே 'இப்பிரபஞ்சத்தின் தேவனாக' ஒருவனை நியமித்து அவனுக்கு அதிகாரமும் கொடுத்துவிட்டு ஜனங்கள் பாவமில்லாமல் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்குமளவு தேவன் முட்டாளில்லை.//

அதாவது பாவ உலகில் விடப்பட்ட மனிதன் பாவியாகத்தான் இருப்பான் என்கிறார் soulsolution. அவரது கூற்றின்படி பார்த்தால் மனிதன் பாவஞ்செய்வதற்கு அவன் பொறுப்பல்ல என்றாகிறது. அவ்வறெனில் அவனுக்கு ஏன் தேவன் ஆக்கினையை நியமித்தார் என்பதுதான் என் கேள்வி. தேவன் ஆக்கினையை நியமித்துள்ளதற்கு ஆதாரமாகத்தான் வெளி. 21:8; மத்தேயு 5:22,29; 13:42 வசனங்களை மேற்கோள் காட்டியிருந்தேன்.

சொல்லுங்கள் சகோ.soulsolution அவர்களே!
மனிதன் பாவம் செய்ததற்கு/செய்வதற்கு அவன் பொறுப்பா இல்லையா?
பொறுப்பில்லை எனில் அவனுக்கு ஆக்கினயை நியமித்தது சரியா?

ஆதாம் பாவம் செய்வான் என்று தேவனுக்கு முன்பே தெரியுமா தெரியாதா? என்பதுதான் சகோ.ராஜ் எழுப்பிய கேள்வி. தெரியும் என்கிறார் சகோ.பெரியன்ஸ். நீங்களோ ஒருபடி மேலே சென்று, பாவ உலகில் விடப்பட்ட மனிதன் பாவம் செய்யமாட்டான் என எதிர்பார்க்குமளவு தேவன் முட்டாளல்ல என்கிறீர்கள். அதாவது மனிதன் நிச்சயமாக பாவம் செய்வான் என தேவன் எதிர்பார்த்திருந்ததாகக் கூறுகிறீர்கள். அதாவது பாவம் செய்தேயாக வேண்டிய ஒரு சூழ்நிலையில்தான் மனிதன் விடப்பட்டான் என்கிறீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் விடப்பட்ட அவன் பாவஞ்செய்கையில் அவனுக்கு ஆக்கினையை நியமிக்கலாமா?

இன்னும் 2 கேள்விகள்:
1. பாவஞ்செய்தேயாக வேண்டிய உலகில் வாழ்வோரில் ஒரு பிரிவினர் மட்டும் எப்படி கிறிஸ்துவைப் போல் வாழ்ந்து ’சிறு மந்தை’ யாக முடியும்?
2. புதிய ஏற்பாட்டு சபையாருக்கு பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டுள்ளதால் சிறு மந்தையாக சாத்தியம் உள்ளது என நீங்கள் கூறக்கூடும். அவ்வாறெனில் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளில் பலர் தேவனால் நீதிமான்கள் என சாட்சி பெற்றது எவ்வாறு?
இயேசுவை அறியாமலும் பரிசுத்தஆவியைப் பெறாமலுமிருந்த கொர்நேலியு (புதிய ஏற்பாட்டு விசுவாசி) நீதிமானாயிருந்தது எவ்வாறு?





__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"...இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" யோவான்1:29



"உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்". யோவான்3:17




"எப்படியெனில் மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்பட்டும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு, நான் இதற்குப் பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்படுத்தி, அதை செவ்வையாய் நிறுத்துவேன்"... உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது" அப்15:16-18.


போன்ற வசனங்களை கருத்தில் கொண்டால். "அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே", "உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற", போன்ற வசனங்கள் எதைக் குறிக்கின்றது. மேலும் "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும்", Ransom for ALL, என்று மற்ற இடங்களில் வாசிக்கிறோம்.





'பாவத்தின் சம்பளம் மரணம்' என்பதால் ஒரு மனிதன் பாவங்களுக்கான சம்பளமாகிய மரணத்துக்கு பாத்திரவானாகிறான். ஆனால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக அந்த மனிதனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதால் அவன் உயிர்த்தெழுகிறான். ஒருவனுடைய பாவங்களை முற்றிலும் மன்னித்து அவனை உயிரோடு எழுப்பி என்ன நியாயத்தீர்ப்பு செய்யமுடியும்? உயிர்த்தெழுதலின் அவசியம்தான் என்ன? இதைத்தான் ஏசாயா26:9 ல் "உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் நடக்கும் போது பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக்கற்றுக் கொள்வார்கள்" பின் பூமி கர்த்தரை அறிகிற அறிவால் நிறைந்திருக்கும். அந்த Fairest, Favorable Condition னிலும் ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவ்னுக்குத் தகுதியடையாதவர்கள் 'இரண்டாம்' மரணத்தில் பங்கடைவார்கள்.





மத்தேயு 5:22 ... தன் சகோதரனை மூடனே என்று சொல்கிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான். மத்தேயு 5:29 ... உன் சரீரம் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். மத்தேயு 13:42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.//





போன்ற வசனங்கள் ராஜ்ஜியத்தில் எதிர்பார்க்கும் Standard. மத்தேயு 13:41 ஐயும் சேர்த்து வாசியுங்கள் 42ல் உள்ள "அவர்களை" என்றால் அவருடைய இராஜ்ஜியத்தில் இருக்கிற சகல இடறல்களையும், அக்கிரமஞ்செய்கிறவர்கள் என்பது விளங்கும். இப்போது அவருடைய இராஜ்ஜியம் இல்லவே இல்லை என்று உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்.








Anbu Wrote:


இன்னும் 2 கேள்விகள்:

1. பாவஞ்செய்தேயாக வேண்டிய உலகில் வாழ்வோரில் ஒரு பிரிவினர் மட்டும் எப்படி கிறிஸ்துவைப் போல் வாழ்ந்து ’சிறு மந்தை’ யாக முடியும்?



2. புதிய ஏற்பாட்டு சபையாருக்கு பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டுள்ளதால் சிறு மந்தையாக சாத்தியம் உள்ளது என நீங்கள் கூறக்கூடும். அவ்வாறெனில் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளில் பலர் தேவனால் நீதிமான்கள் என சாட்சி பெற்றது எவ்வாறு? இயேசுவை அறியாமலும் பரிசுத்தஆவியைப் பெறாமலுமிருந்த கொர்நேலியு (புதிய ஏற்பாட்டு விசுவாசி) நீதிமானாயிருந்தது எவ்வாறு?









1."...நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும்... யோவான்15:19,

நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல" யோவான்17:14,16. ன்படி "சிறு மந்தை" என்பது உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஆகும்.




2.வெறும் 'நீதிமானாக' மட்டும் இருப்பது போதாது. ஆபிரகாமுக்கு அவனுடைய விசுவாசம் 'நீதியாக' எண்ணப்பட்டது. 'முடிவுப்பரியந்தம் நிலைநிற்கிற' அனுபவம் வேறு. 'அதற்கு "கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசம்" வேண்டும். இந்த பழையஏற்பாட்டு நீதிமான்கள் எல்லோரும் விசுவாசத்தினால் 'நற்சாட்சி பெற்றும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை(நித்திய ஜீவன் மற்றும் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள்) அடையாமற்போனார்கள் எபி11:39




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Member

Status: Offline
Posts: 9
Date:

I am a new member and i am posting some answers for this question which i answered in another forum. I seen that second page not related with the topic itself.


Brother  wrote :"பூமியில் மனிதனை படைத்தற்க்கு தேவன் மனஸ்தாபபட்டார்"


மற்றும் 

"சவுலை ராஜாவாக்கியது எனக்கு விசனமாயிருக்கிறது"

போன்ற தேவனின்  வார்த்தைகள் அவர் எதிர்பார்க்காதது எதோ  நடந்துவிட்டத்தையே    உணர்த்துகிறது .
 
நமக்கு தெரிந்தது  நமது திட்டப்படி எல்லாம்  நடக்கும்போது நாம் சந்தொசப்படுவேமே  தவிர அதற்காக விசனப்பட மாட்டோம்  எனவே இங்கு தேவன் மனஸ்தாபபடுகிறார் என்றால்  எதோ எதிர்பாராது அல்லது பிடிக்காதது நடந்துவிட்டது என்றுதான் பொருளாகும்.

To brother ,
1. Everybody knows that after marriage woman should go to her husband house. But on that day are we celebrating? or weeping?

2. Consider for a patient doctors given time as he will die within six months on that day of his dying because we know it already are we celebrating?

3. An artist already knows what he is going to paint, but after painting he enjoys himself with the painting. He never thinks because i know it already there is no need to enjoy.

4. Pregnant women know that after some months they are going to give birth to a baby.

   Because they knew this are they keep quiet on that day?

5. God is nothing but ananda, bliss, full of happiness. He can keep himself in this state but out of love god identifies HIM with human beings and shares HIS emotions (before and after Christ)

6. Actually if we know already the bad future of a loving person our love will increase many fold so that our sorrow also will increase many fold. Because of HIS uncontrollable sorrow God uttered these words. 
 
Brother Anbu wrote :

//God knows about everything before anything is going to happen in future. HE knows about all things and about all  persons life (it is known as unmanifest view of God). HE knows about fall of angel (satan) and fall of adam before the incidents.//


In this regard I opine that, "God has the power to know all future things which are going to happen, but He uses that power only for the things that he wishes to know. In all other things, he doesn't use His power to know them.

To brothr anbu,

For me the word "God knows everything" is enough but because you ask i will tell in detail

1. Everybody knows Satan and adam fell down because of free will

2. That means before falling they done everything as per God's plan. They are always keep in touch with God through their thoughts, emotions and will.

3. That means they received energy from God always so God knows about his flow of energy

4. When they want different experience of their own, the flow of energy from god gets disturbed that is the initial stage of falling. As per Jesus parable it is the time the younger son asks for his share with his father. Although father knows he is going to fall, he given his share to allow him to exercise his own experience. It is the time our vehicles fuel indicator shows 'reserve' state  

5. Fall of satan or adam is not like a man who fell down on road.

6. It is the process which takes its effects to ripe more number of years (I don't know may be thousand or lakhs) After  the initial sensing itself god acted and done necessary actions, 

The following are other information 

1. Satan (Angel) is one of the creations in the 1st set, 1.e he is the morning star and many things should come out of him for further sets.

2. Because he is 1st set and he fell down, he cannot be saved. Only the effects other creatures going to face because of him only be modified. It is like beyond repair state of our machineries.

3. The below passages are "believe it or not" type if want to take it take it otherwise leave it    However questions can be asked.

 Actually the book of Genesis is the summary of million years. Before 1st verse and second verse millions of years passed. The things which happened between verses are revealed by some Christian mystics and they given information about this. One of the mystic given like this.. 

1. God created adam as man and woman with enormous power like angel and not in a material body as we are (gen 1.27)

2. Adam done whatever god says and after some time he want to know his own experience.    Now satan also in this world with great power so God felt the possibility of adam to combine with satan and become enemy to God. Out of love for humanity god taken the following precaution steps

3. God given him sleep (and the woman inside him separated from him so his power reduced by 50%)

4. God convert his angelic body into material body

5. Out of his body he taken rib and made woman from that. So adam power (again) reduced by (another) 50%

6. Then he allowed adam and eve to stay in Eden. 

If God didn't taken the above steps then with his enormous power adam combined with more enormous power of satan and they become enemy to God and his plans.

If somebody don’t want to go out of bible then eliminate the sentences given in bracket and read it.



__________________


Executive

Status: Offline
Posts: 425
Date:

sandosh wrote:

//1. Everybody knows that after marriage woman should go to her husband house. But on that day are we celebrating? or weeping?

2. Consider for a patient doctors given time as he will die within six months on that day of his dying because we know it already are we celebrating?

3. An artist already knows what he is going to paint, but after painting he enjoys himself with the painting. He never thinks because i know it already there is no need to enjoy.

4. Pregnant women know that after some months they are going to give birth to a baby.

Because they knew this are they keep quiet on that day?

5. God is nothing but ananda, bliss, full of happiness. He can keep himself in this state but out of love god identifies HIM with human beings and shares HIS emotions (before and after Christ)

6. Actually if we know already the bad future of a loving person our love will increase many fold so that our sorrow also will increase many fold. Because of HIS uncontrollable sorrow God uttered these words.//

Your arguement is baseless, Bro.Sandosh!

Don't compare human things (which may or may not happen) with God's plan (which God Himself will make it to happen 100% certain).

Consider your illustrations. Can any pregnant woman be 100% sure that the baby will born safely?

Can any artist be 100% sure that his painting will be finished successfully without any interruption?

Give your arguements only on the basis of Bible verses and not on the basis of matchless illustrations.


-- Edited by anbu57 on Wednesday 27th of January 2010 09:41:38 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 9
Date:

ANBU57 WROTE :

\\Give your arguements only on the basis of Bible verses and not on the basis of matchless illustrations.\\

யோபு : 22

13. நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?

14. அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.

15. அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?

16. காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.

17. தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.

18. ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.


__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard