kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதாமின் பாவம் தேவனுக்கு முன்பே தெரியுமா?


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
ஆதாமின் பாவம் தேவனுக்கு முன்பே தெரியுமா?


ஆதாம் பாவம் செய்வான் என்று தேவனுக்கு முன்பே தெரியுமா தெரியாதா?

தெரியாது என்றார்:
தான் உருவாக்கும் மனிதன் என்ன செய்வான் என்பது கூட தெரியாமல் இருக்கும் அளவுக்கு தேவனின் வல்லமை குறுகியதா?

தெரியும் என்றால்:-
ஆதாம் பாவம் செய்வான் என்று தெரிந்து ஆண்டவர் அவனை ஏன் அவனை படைத்தார்?

அல்லது அப்படிபட்ட ஒரு மனிதனை ஆண்டவர் ஏன் உருவாக்கினார்?
 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்புள்ள சகோதரரே,

     தங்களின் அருமையான கேள்விக்கு இதோ பதில். சர்வவல்லமையுள்ள யேகோவா தேவனுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்கிறாது வேதம். அவர் அனந்த ஞானம் கொண்டவர். அவருக்கு ஆதாம் பாவம் செய்வான் என்பது நிச்சயமாகவே தெரியும். அதற்காக தான் அதன் பரிகாரமாக இயேசு கிறிஸ்து என்னும் இரட்ச்சகரை ஏற்படுத்தி வைத்திருந்தார். சரி தெரிந்தும் ஏன் படைக்க வேண்டும்? முதலாவது மனிதனை படைத்தது தேவ அன்பின் வெளிப்பாடு. மனிதன் ஒருவனை தவிர தேவனின் சாயலிலும், ரூபத்திலும் படைக்கப்பட்டவர்கள் அல்லது படைக்கப்பட்டது வேற் ஒன்றும் இல்லை. மனிதனை ஒரு ரோபோவாக படைக்காமல், அவனை தேவ சாயல் (அதாவது தேவன் போல் ஆளுகையுள்ள குனம்) மற்றும் தேவ ரூபத்தில் (அதாவது ஞானம், வல்லமை, அன்பு, நீதி) படைத்தார். தேவ சித்தமோ அவன் இந்த பூமியை ஆண்டுக்கொண்டு என்றென்றும் இந்த பூமியில் வாழ்வதே, ஆனால் அதற்காக அவன் ஒரு சின்ன சோதனையில் விடப்பட்டான். இந்த சோதனையில் அவன் விழுந்துபோனதால் தேவ சித்தம் நிறைவேறாமல் போய் விடும் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காக தான் இந்த மாபெரும் இரட்சிப்பின் திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக மனிதன் இரட்சிக்கப்பட்டு அவன் எந்த நோக்கத்திற்காக தேவனால் படைக்கப்பட்டானோ, அது நிறைவேறும்.

சரி, தேவன் ஏன் இப்படி ஒரு காரியத்தை அனுமதிக்க‌ வேண்டும்? மனிதன் தன் சுயத்தை சாராமல், அவனை படைத்த தேவனை அறிந்துக்கொள்ளவே, தேவன் மனிதனை கடந்த சுமார் 6000 ஆண்டுகளாக பாவத்தின் விலைவான அந்த மரணத்தை அனுமதித்து, அந்த மரணத்திற்கு காரணங்களான, சாபங்கள், நோய்கள், வியாதிகள் தீமைகள், எல்லாவற்றையும் அனுமதித்தார். மனிதன் இதன் மூலம் தான் சுயமாக சிந்தித்து செய்த பாவத்தையும் அதன் விலைவுகளையும் தெரிந்துக்கொள்ளட்டும் என்று மாத்திரமே.

ஒரு ரகசையத்தை உங்களுக்கு சொல்லுகிறேன் சகோதரரே, நம் தேவன் மிகவும் Possessive nature  உள்ள தேவன், அவரின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனை சும்மா சாத்தானின் கைகளில் விட்டுக்கொடுக்க அவர் வல்லமை குறைந்த தேவன் அல்ல என்பதை இதன் மூலம் மீண்டும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மனிதனுக்கு தீமையின் இந்த அனுபவம் கிடைத்து விட்டால், அவன் மீண்டும் இந்த பூமியில் வரும் போது இதை செய்ய நினைப்பானா?!! தேவ சித்தம் நிறைவேற நாம் அவரின் சித்தத்தின்படி நடக்க முயற்சிப்போமே.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அனைத்தும் அறிந்ததவர்தான் தேவன். அவர் அறியாததோ அவர் control க்கு அப்பாற்பட்டதோ ஒன்றும் இல்லை.அப்படி ஏதாவது ஒன்று இருந்தால் அவர் 'தேவன்' என்று அழைக்கப்பட தகுதியற்றவராகிவிடுவார். நாம் நமது அற்ப அறிவை வைத்துக்கொண்டு அநாதி தேவனின் மகிமையை உணரமுடியாது. நாம் ஏதோ தேவன் சாத்தானின் சக்தியிலிருந்து மனிதனைக் காப்பாற்றும் முயற்சியில் போராடிக்கொண்டிருப்பது போலவும் அதற்கு 'நம்' துணை அவருக்கு அவசியம் போலவும் கற்பனை செய்துகொண்டு நம்மை உயர்த்திக் கொண்டிருக்கிறோம். சத்துருவான சாத்தான் 'ஆதிமுதல்' மனுஷ கொலைபாதகனாக இருக்கிறான். தீமை செய்யவே படைக்கப்பட்ட சிருஷ்டிதான் இந்த villain. உலகத்தில் நடந்த, நடக்கின்ற, நடக்கப்போகின்ற எல்லா காரியங்களும் தேவனுக்கு 100% தெரியும். தேவனுடைய அனுமதியோடுதான் சாத்தான் ஏதேனுக்குள் வந்திருக்க முடியும். தேவன் ஒரு உன்னத நோக்கத்தோடுதான் தீமையை அனுமதித்திருக்கிறார். 'சகலமும் நன்மைக்கேதுவாகமட்டுமே நடக்கிறது! தொட்டிலை ஆட்டுவது அவரே என்றாலும் பிள்ளையை கிள்ளிவிட அவர் 'வேரொரு' நபரை பணித்திருக்கிறார். பிள்ளைக்கு 'வலி' என்றொரு விஷயத்தை உணர்த்தவாகக்கூட இருக்கலாமே.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:

அனைத்தும் அறிந்ததவர்தான் தேவன். அவர் அறியாததோ அவர் control க்கு அப்பாற்பட்டதோ ஒன்றும் இல்லை.அப்படி ஏதாவது ஒன்று இருந்தால் அவர் 'தேவன்' என்று அழைக்கப்பட தகுதியற்றவராகிவிடுவார்.  . உலகத்தில் நடந்த, நடக்கின்ற, நடக்கப்போகின்ற எல்லா காரியங்களும் தேவனுக்கு 100% தெரியும். தேவனுடைய அனுமதியோடுதான் சாத்தான் ஏதேனுக்குள் வந்திருக்க முடியும். தேவன் ஒரு உன்னத நோக்கத்தோடுதான் தீமையை அனுமதித்திருக்கிறார். 'சகலமும் நன்மைக்கேதுவாகமட்டுமே நடக்கிறது! தொட்டிலை ஆட்டுவது அவரே என்றாலும் பிள்ளையை கிள்ளிவிட அவர் 'வேரொரு' நபரை பணித்திருக்கிறார். பிள்ளைக்கு 'வலி' என்றொரு விஷயத்தை உணர்த்தவாகக்கூட இருக்கலாமே.



"தேவன்" என்ற வார்த்தைக்கு தகுதியை நிர்ணயித்தவர் யார்?

அவர் "சர்வ வல்லவர்" ஆனால் நீதி நியாயங்களுக்கு கட்டுப்பட்டவர், எனவேதான் அவர் தேவன் என்ற தகுதியில் இருக்கிறார். எதிரியில் கையில் இருக்கும் ஒற்றை அநியாயயமாக அவரால் பிடுங்க  முடியும் ஆனால் அக்கணமே அவர் அநீதிகாரராக மாறிவிடுவார் எனவே அவரால் செய்ய முடிந்தாலும் அதுபோன்ற செயலை செய்வதில்லை.    
 
இயேசு எல்லா மனிதர்களுக்காகவும் மீட்கும் பலியானாலும் "அவரை விசுவாசிப்பவனுக்குதன் நித்ய ஜீவன் உண்டு" என்று வேதம் குறிப்பிடுகிறது. அவரின் கரத்தின்கீல் வந்தவருக்காக மட்டும்தான் அவர் இறைவனிடம் பரிந்து பேசமுடியும். சாத்தானின் பிடியில் இருக்கும்  ஒருவன் அவனான மனம்திரும்பாத பட்சத்தில் ஆவனது விருப்பமில்லாத பட்சத்தில் இறைவனால் ஒன்றும் பண்ண முடியாது!
 
இறைவன் அனைத்தையும் அறிந்தவர் அவர் கட்டுப்பாட்டுக்குள்தான் எல்லாம் நடக்கிறது என்றால்  கீழ்க்கண்ட வசனங்கள் எல்லாம் கர்த்தரின் கண்ணீர் நாடகம்  என்று எடுத்துக்கொள்ளலாமா?  
 
எரேமியா 14:17 என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.

புலம்பல் 1:16 இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.

பாவத்தை உலகில் தானே  அனுமதித்து பிறகு தன குமாரன் இயேசு  "கூடுமானால் இந்த பாத்திரம் எண்ணிவிட்டு நீங்கட்டும்" என்று கதறி ஜெபித்தும்  பாவத்தின் பலனை அவர் தலையின்மேல் சுமத்தி நினைத்தாலே நெஞ்சில் இரத்தம் வருமளவுக்கு  சித்திரவதைக்குள்ளாக்கியது எல்லாம் இறைவனின் அனுமதியுடன் அவர் வேண்டுமென்று தீமையை அனுமதித்த திட்டத்தால்தான் நடக்கிறது என்றால், 
நீங்கள் 
தேவனை ஒரு நாடகமாடுபவர்  போலல்லவா   சித்தரிக்கிறீர்கள்!    
 
 
பிள்ளைகளுக்கு தீ சுடும் என்று உணர்த்த,   தீயெடுத்து சுட்டுத்தான் கான்பிபீர்களா ஐயா!
 
தீமையைவிட இறைவன் பெரியவர் ஆனால் தீமைக்குள் விழுந்தவர்களை  முற்றிலும் மீட்பதென்பது அவரது கையில் இல்லை. அவர் தானால் செய்ய முடிந்த கடைசி சொட்டு இரத்தம்வரை சிந்திவிட்டார் 
 
எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய சித்தம்! யாரும் துன்பம் அனுபவிக்க கூடாது என்பது கூட இறைவனின் சித்தம்தான்  ஆனால் சித்தப்பட்டவுடன் எல்லோரும் மீண்டுவிட முடியாது! அதனால்தான் துன்பம் அனுபவிக்கும் தன ஜனங்களை பார்த்து இறைவன்  கண்ணீர் வடிக்கிறார்!
 

 

 



-- Edited by RAAJ on Friday 4th of September 2009 03:18:08 AM

-- Edited by RAAJ on Friday 11th of September 2009 04:00:21 AM

-- Edited by RAAJ on Friday 11th of September 2009 04:01:33 AM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:


RAAJ WROTE:(தீமையைவிட இறைவன் பெரியவர் ஆனால் தீமைக்குள் விழுந்தவர்களை  முற்றிலும் மீட்பதென்பது அவரது கையில் இல்லை. அவர் தானால் செய்ய முடிந்த கடைசி சொட்டு இரத்தம்வரை சிந்திவிட்டார் 
 
எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய சித்தம்! யாரும் துன்பம் அனுபவிக்க கூடாது என்பது கூட இறைவனின் சித்தம்தான்  ஆனால் சித்தப்பட்டவுடன் எல்லோரும் மீண்டுவிட முடியாது! அதனால்தான் துன்பம் அனுபவிக்கும் தன ஜனங்களை பார்த்து இறைவன்  கண்ணீர் வடிக்கிறார்! )


சகோதரரே,  
      
         தங்களுடய பதிப்பு தேவனுடைய மகிமையையும், வல்லமையையும் மிக மிக குறைத்து மதிப்பிட்டு அவரது நாமத்தை களங்கப்படுத்தும் வண்ணம் உள்ளது. ஆக சாத்தான் தேவனை கண்ணீர்விடச்செய்து, துக்கப்படுத்தி அவன் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறான் போலும். இந்த உலகத்தில் மனிதன் படும் துன்பங்களுக்கே தேவன் இவ்வளவு வேதனப்படுவாரென்றால், தான் படைத்த ஜனங்களில் 99% நரகத்தில் நித்திய நித்தியமாக வேதனைப்படுவதைப் பார்த்து இன்னும் எவ்வளவு அதிகம் வேதனப்படுவார்? ஆக‌ அவரது வேதனையும் நித்தியத்துக்கும் இருக்கும். பரலோகத்துக்குப் போகும் ஒரு சிறு கூட்டத்துக்கு மட்டும் "நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலைமேல் இருக்கும்" "சஞலமும் தவிப்பும் ஓடிப்போம்", ஆனால் தேவன் மட்டும் நித்திய நித்தியமாக வேதனைப்படுவார். இதுதான் சாத்தானை ஜெயிப்பது என்றால், மிக மிக வேடிக்கையாக இருக்கிறது.

      தேவனுடைய சித்தம் நடக்காது ஆனால் சாத்தானுடைய சித்தம் (இம்மையில் ஜனங்களை தீமை மறுமையில் நித்திய வாதை) நிறைவேறும் என்கிறீர்கள். தேவனுடைய சித்தமே நடக்காது என்று முடிவே செய்துவிட்டோமானால் பின்னர் என்னை காப்பாற்றமுடியாத அவரை நான் ஏன் ஒரு பொருட்டாக கருதவேண்டும்?

"மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்",
"சாமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்",
"உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நடக்கும்போது பூச்சக்கரத்துக் குடிகள் நீதியை கற்றுக்கொள்வார்கள்"
"முழங்கால்கள் யாவும் முடங்கும் நாவு யாவும் அறிக்கையிடும்" 

போன்ற இந்த வசனங்கள் இன்னும் நிறைவேறவில்லை, இவைகள் எப்போது நிறைவேறும்? அல்லது ஒருபோதும் நிறைவேறாதா? வேத‌வ‌ச‌ன‌ங்க‌ள் பொய்யா?


தீயையை உண‌ர சுட்டுத்தான் ஆக‌வேண்டும், பாவ‌த்தை அனும‌தித்தால்தான் பாவ‌ம் என்ன‌வென்று உண‌ர‌முடியும், இருட்டு என்று ஒன்றை உருவாக்கினால்தான் "வெளிச்ச‌த்தின்" ம‌கிமை தெரியும்.

      1000வ‌ருட கிறிஸ்துவின் பூலோக‌ ஆட்சியில் மாத்திர‌ம் சாத்தானை க‌ட்டிப்போட‌ முடிந்த‌ தேவ‌ன், த‌ற்போது க‌ட்ட‌க்கூடாத‌ நிலையில் இருக்கிறாரா? ஏன் சாத்தானை ஏதேன் தோட்ட‌திலிருக்கும்போதே அவ‌னை 'ந‌ர‌க‌த்தில்' த‌ள்ளியிருக்க‌லாமே, அவ‌னை விட்டுவைத்து, இப்பிர‌ப‌ஞ்ச‌த்தின் தேவ‌னாக்கி, எல்லாரையும் வ‌ஞ்சிக்க‌ச்செய்து, மோச‌ம்போக்க‌ச்செய்து,  முழு சேதார‌மும் செய்து, முழு ம‌னுக்குல‌த்தையும்(உல‌க‌ம் பொல்லாங்க‌னுக்குள் விழுந்து கிட‌க்கிற‌து) அவ‌ன் ந‌ர‌க‌த்திற்கு கொண்டு சென்ற‌பின்பு, அவ‌னுக்கு த‌ண்ட‌னை கிடைத்தால் என்ன‌? கிடைகாவிட்டால் என்ன‌?  ஆக‌ க‌டைசியில் ஜெயிக்க‌ப்போவ‌து யார்? தான் ப‌டைத்த‌ ஜ‌ன‌ங்க‌ளை இர‌ட்சிக்க‌ முடியாம‌ல், க‌ண்ணீரும் க‌ம்ப‌லையுமாக புல‌ம்பும் "ச‌ர்வ‌ வ‌ல்ல‌" தேவ‌னா? அல்ல‌து த‌ன் க‌ட‌மையை "செவ்வ‌னே" நிறைவேற்றி பெரும்பாலான‌ ஜ‌ன‌ங்க‌ளைக் கொண்டு 'ந‌ர‌க‌த்தை' நிர‌ப்ப‌ப்போகும் 'இப்பிர‌ப‌ஞ்ச‌த்தின் தேவ‌னா'? நீங்க‌ள்தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும்.



-- Edited by soulsolution on Friday 4th of September 2009 07:54:21 AM


-- Edited by soulsolution on Friday 4th of September 2009 08:03:23 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

ஆதாமின் பாவம் தேவனுக்கு முன்பே தெரியுமா?

தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை என்ன குழந்தையென பெற்றோருக்குத் தெரியுமா?

சாதாரண பெற்றோருக்குத் தெரியாதுதான். ஆனால் மருத்துவர்களான பெற்றோருக்கு ஸ்கேன் மூலம் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை என்ன குழந்தையென தெரிந்து கொள்ளும் அறிவு உண்டு. ஆனாலும் அந்த அறிவுள்ளவர்கள், ஸ்கேன் செய்து பார்த்தால்தான் அதை அறிய முடியும். ஸ்கேன் செய்து பார்க்காவிடில், மற்றவர்களைப் போல அவர்களும் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை என்ன குழந்தையென அறியாமல்தான் இருப்பார்கள்.

அவ்வாறே தேவனுக்கும் பின்னால் நடக்கப்போகிற அனைத்து காரியங்களையும் அறியக்கூடிய ஞானமும் வல்லமையும் உண்டு. ஆனால் எல்லா விஷயங்களிலும் அவர் அவற்றைப் பயன்படுத்தி பின்னால் நடக்கப்போவதை அறிவதில்லை.

பெற்றோர்கள் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை என்ன குழந்தையென முன்பே அறிந்து விட்டால், குழந்தை பிறக்கும் வேளையில் அது என்ன குழந்தை என்பதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வத்தை இழந்து போவதுபோல, தேவனும் எல்லா விஷயங்களிலும் நடக்கப் போவதை முன்னதாக அறிந்துவிட்டால், அவை நடக்கப்போகிற வேளையில் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை இழந்துபோவார்.

இதனாலோ அல்லது வேறு காரணத்தாலோ, பின்னால் நடக்கப்போகிற அனைத்து விஷயங்களையும் முன்னாலேயே தெரிந்துகொள்ள அவர் முற்படுவதில்லை என நான் கருதுகிறேன்.

எனவே ஆதாம் பாவம் செய்வானா மாட்டானா என்பதை முன்னாலேயே அறியக்கூடிய வல்லமை தேவனுக்கு இருந்திருந்தபோதிலும், அதை அவர் பயன்படுத்தியிருக்கமாட்டார் என்றே நான் கருதுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"அறியக்கூடிய வல்லமை உண்டு ஆனாலும் அதை பயன் படுத்தியிருக்கமாட்டார்" என்ற விவாதம் ஒரு குழப்பமாக உள்ளது சகோதரரே! அந்த வல்லமை இருந்தாலே அதை அவர் அறிந்து கொண்டதாகத்தானே அர்த்தம். தேவன் தவறு செய்பவர் அல்ல, நாம்தான் ஏதோ தேவன் 'தவறாக' மனிதனைப் படைத்துவிட்டு பின்னர் அதற்காக வருத்தப்படுவதாக எண்ணுகிறோம். அவர் 'சர்வ வல்லவர்'. அனைத்தும் அறிந்தவர். கால நேரங்களுக்கு அப்பாற்பட்டவர். நாம் நம் சிற்றறிவை வைத்து தேவனுடைய தன்மைகளை அறிய முற்படுவது சிறிய குவளையைக்கொண்டு சமுத்திரத்தை அளப்பது போன்றது.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution quoted:
"அறியக்கூடிய வல்லமை உண்டு ஆனாலும் அதை பயன் படுத்தியிருக்கமாட்டார்" என்ற விவாதம் ஒரு குழப்பமாக உள்ளது சகோதரரே!

இதில் குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் மூலம் அறிய வாய்ப்பிருந்தும் அதைப் பலரும் பயன்படுத்தாதிருப்பதைப் போல்தான், பின்னால் நடக்கப்போவதை அறியக்கூடிய வல்லமை இருந்தபோதிலும், தேவன் அதை எல்லா விஷயங்களிலும் பயன்படுத்தியிருக்கமாட்டார் என நான் கருதுகிறேன்.

soulsolution quoted:
தேவன் 'தவறாக' மனிதனைப் படைத்துவிட்டு பின்னர் அதற்காக வருத்தப்படுவதாக எண்ணுகிறோம்.

தேவன் 'தவறாக' மனிதனைப் படைத்ததாக நான் கருதவில்லை. தேவன் மனிதனைச் சரியாகத்தான் படைத்தார். ஆனால் அவனை தாம் விரும்புகிறதை மட்டுமே செய்கிற ஒரு ‘ரோபோ’ வாகப் படைக்காமல், அவனுக்கு சுயாதீனத்தைக் கொடுத்து, அதன்படி நடந்துகொள்வதற்கான சுதந்தரத்தையும் கொடுத்தார். மனிதன் தான் தனக்குக் கொடுக்கப்பட்ட சுதந்தரத்தைத் ‘தவறாக’ பயன்படுத்தினான். அதன் காரணமாகவே தேவன் மனஸ்தாபப்பட்டார்.

soulsolution quoted:
நம் சிற்றறிவை வைத்து தேவனுடைய தன்மைகளை அறிய முற்படுவது சிறிய குவளையைக்கொண்டு சமுத்திரத்தை அளப்பது போன்றது.

இக்கூற்று நூற்றுக்கு நூறு மெய்தான் சகோதரரே (ரோமர் 11:33). ஆனாலும் தேவமகிமைக்குப் பங்கம் நேராதபடி நம் சிற்றறிவைப் பயன்படுத்திப் பார்ப்பதில் தவறில்லையே. மேலோட்டமாகப் பார்த்து தேவன் ஏன் இப்படிச் செய்தார் என நமக்குள்ளாகவே கேட்டுக் கேட்டுக் குழம்பிக்கொண்டிருப்பதைவிட நம் சிற்றறிவைக் கொண்டு சற்று ஆராய்ந்து பார்த்து தெளிவு கிடைத்தால் அது நல்லதுதானே?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நல்லது சகோதரரே, நம் சிற்றறிவைக் கொண்டு சற்றல்ல ஆழமாகவே ஆராயலாம். ஆனால் நமது ஆராய்ச்சி முழுக்க முழுக்க வேதவசனம் சார்ந்துதான் இருக்கவேண்டும். அவர் 'சர்வ வல்லவர்', அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை,என்றுதான் வசனம் சொல்கிறது. அவருக்கு வல்லமை உண்டு ஆனால் அதை அவர் பயன்படுத்துவதில்லை என்பதற்கு எந்த வேத வசன ஆதாரமும் இல்லை. அதனால்தான் ஒரு கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ள கட்டிடத்தைப் பார்த்து 'அடடா இந்தக் கட்டிடம் இவ்வளவு மோசமாக உள்ளதே?'என்று நினைத்து கட்டிடக் கலைஞரை குறை கூறலாகாதல்லவா?. அவருக்குத்தான் அது கட்டிமுடிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று தெரியும். முடிக்கப்பட்ட நிலையில் தேவனுடைய ராஜ்ஜியம் பூமியில் ஸ்தாபிக்கப்படும்போது அது பழைய ஏதேனுக்கு ஒப்பாக மாறி அதில் மனுக்குலம் முழுவதும் எப்படி ஆனந்தமாக வாழும் என்பதைத்தான் ஏசாயா35ம் அதிகாரத்தில் அப்பட்டமாக எழுதப்பட்டுள்ளது. 35:10 "கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் (1தீமோ2:6) திரும்பி ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலைமேல் இருக்கும்; சந்தோஷமுன் ம்கிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்ஜலமும்  தவிப்பும் ஓடிப்போம்"

-- Edited by soulsolution on Tuesday 29th of September 2009 04:49:07 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

எந்த  ஒரு  செயல் யாரால் நடந்திருந்தாலும் அதற்க்கு ஒரு சரியான அடிப்படை காரணம் இல்லாமல் நடக்காது அப்படியிருக்கையில் தங்கள் இவருடைய கருத்தும்  ஒரு சரியான லாஜிக் இல்லாமல் இருப்பதால்  ஏற்புடையது அல்ல. தேவன் ஒரு நடிகரோ அல்லது திரில்லாக என்ன நடக்கும் என்று பார்ப்பதர்க்ககாக தன விருப்பப்படி செய்துகொண்டு திருவிளையாடல் விளையாடுபவரோ அல்ல என்றே நான் கருதுகிறேன்.
 
இன்று உலகம் முழுவதும் போல்லாங்கினுள் கிடக்கிறது கொலை கொடுமை கற்ப்பழிப்பு இன அழிவு என்று எங்கு பார்த்தாலும் இந்நாட்களில்  மனிதன் படும் அவஸ்த்தைகள் கொஞ்சநஞ்சமல்ல, இதற்க்கெல்லாம் காரணம் தேவனின்  திட்டம் என்று சொல்வது சரியாவ வாதமல்ல அல்லது எதிர்காலத்தை கணிக்க தகுதியிருந்தும் அதை கணிக்காமல் விட்டு இப்படி மனிதர்களை துன்பத்துக்குள் தள்ளிவிட்டு இயேசுவை துடிக்க துடிக்க சிலுவையில் கொடு மரணத்துக்கு ஒப்புகொடுத்து வேடிக்கை பார்ப்பது இறைவனின் நோக்கமல்ல.
  
"பூமியில் மனிதனை படைத்ததற்காக இறைவன் மனஸ்தாபபட்டார்" என்று வேதம் தெளிவாக சொல்கிறது. தானே திட்டம் போட்டு ஒரு செயலை செய்துவிட்டு பிறகு மனஸ்தாபபடுவதும் அவரே திட்டம் போட்டுவிட்டு பிறகு  "என் அக்கிரமத்தைப்  போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?" என்று கேள்வி கேட்பதும்  கொஞ்சமும் லாஜிக்  இல்லாத காரியங்கள்.
 
சாத்தான்  எப்படி உருவானான் என்பது பற்றி எசாயா மிக தெளிவாக சொல்கிறது தேவனை போல தான் மாறவேண்டும் என்று மனதில் எண்ணியதால் இறைவனால் ஆகாதவன் என்று தள்ளப்பட்டான் என்று வேதம் குறிப்பிடுகிறது இதில் தேவனின் திட்டம் எதுவும் இல்லை. இன்று உலகில் முதல்வர் பதவியில் இருப்பவரை தள்ளிவிட்டு அல்லது கொன்றுவிட்டு தான் முதல்வராக நினைக்கும் ஒரு மனிதனை போல சாத்தான் மனம் மாறியதால் இறைவனின் எதிரியானான் இதில் இறைவனின் திட்டம் எதுவுமில்லை. 
 
தேவன் மிகுந்த இறக்கமுல்ல்வராகயல் அவனை காலம் வரும் வரை அழிக்கவில்லை அவ்ளவுதான்.
 
    
 
 
 
 
  
 
 


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வேதத்தில் எந்த ஒரு பகுதியும் லாஜிக் இல்லாமல் இல்லை என்பதே என் கருத்து. நாம் கேட்டு வளர்ந்த விதத்தினால் நமக்கு அப்படி தெரியலாம், மற்றபடி அவரின் செயலில் லாஜிக் இல்லை என்று சொல்லுவதற்கு ஆதாரம் இல்லையே. இந்த பிரபஞ்சத்தை ஆளுபவன் தற்போது சாத்தானாக் இருப்பதால் அவனின் கிரியைகள் வெளிப்படையாக நடக்கிறது, அது இப்போது மாத்திரம் இல்லை, தொடக்கத்திலிருந்து அப்படி தான் இருக்கிறது. தேவனிடத்தில் தீமை இல்லை, ஆனால் அவர் தீமையையும் படைத்தார் என்பதில் நாம் ஏன் கோபித்துக்கொள்ள வேண்டும்? நாம் மனித கண்ணோட்டத்திலே நமக்கு நியாயம் என்பதை பார்த்து திருப்த்தி ஆக முயற்சிக்கிறோம். ஆனால் தேவனின் நியாயத்தீர்ப்போ வேறு விதமாக இருக்கிறது. அது காலையில் வந்தவனுக்கும், மாலையில் வந்தவனுக்கு, ஒரே கூலி தரும்படியாக இருக்கிறது. நாம் ஏன் இதில் போறாமை கொள்ள வேண்டும்? தேவன் மனஸ்தாபப்பட்டது அவர் மனிதர்கள் மேல் வைத்திருக்கும் அன்பையே வெளிப்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், அவரின் சாயலில் படைக்கப்பட்ட மனிதன் தேவ‌தூத‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து ஒரு வித்தியாச‌மான‌ ச‌ந்த‌தியை உருவாக்கியிருக்கிறான். இது தானே அன்றி வேறு கார‌ண‌ம் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை. இல்லாவிட்டால் அவ‌ர் நோவா உட்ப‌ட‌ எல்லா ம‌னித‌ர்க‌ளையும் அழித்து இருப்பாரே. ஆக‌ ம‌னித‌ர்க‌ள் இந்த‌ உல‌க‌த்தில் என்றென்றைக்கும் வாழ‌ வேண்டிய‌ அவ‌ரின் விருப்ப‌ம் நிறைவேற‌வே இப்ப‌டி ஆயிற்று. வேத‌ வ‌ச‌ன‌ங்க‌ளை அதை கொடுத்த‌வ‌ரின் என்ன‌த்தில் தான் புரிய‌ பிர‌யாசிக்க‌ வேண்டுமே த‌விர‌, ந‌ம் விருப்ப‌த்தின் ப‌டி அல்ல‌.

"காலம் வரும் வரை" என்று எழுதியிருக்கீங்க‌ளே, அது என்ன‌ கால‌ம். அது தான் தேவ‌னின் நீதி இந்த‌ பூமியில் வாச‌மாயிருக்க‌ போகும் கால‌ம். தேவ‌ ராஜிய‌ம் இந்த‌ பூமியில் ஸ்தாபிக்க‌ப்ப‌ட்ட‌ கால‌ம், வ‌ர‌விருக்கும் கால‌ம். தேவ‌ன் விரும்பிய‌ ப‌டியே ம‌னித‌ர்க‌ள் இந்த‌ பூமியை ஆளுகை செய்ய‌ போகும் கால‌ம். நாம் பொறுத்திருப்போமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ Quoted:
எந்த ஒரு செயல் யாரால் நடந்திருந்தாலும் அதற்க்கு ஒரு சரியான அடிப்படை காரணம் இல்லாமல் நடக்காது அப்படியிருக்கையில் தங்கள் இருவருடைய கருத்தும் ஒரு சரியான லாஜிக் இல்லாமல் இருப்பதால் ஏற்புடையது அல்ல.

சகோ.ராஜ் அவர்களே!
எனது கருத்தில் லாஜிக் இல்லாத பகுதி எதுவெனத் தெளிவாகக் கூறினால் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும்.

soulsolution quoted:
அறியக்கூடிய வல்லமை இருந்தாலே அதை அவர் அறிந்து கொண்டதாகத்தானே அர்த்தம்.

சகோ.ஆத்துமா அவர்களே!
பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் மூலம் அறியக்கூடிய வல்லமை மனிதனுக்கு உள்ளபோதிலும், பல மனிதர்கள் அதை அறியாமல்தானே (அதாவது அறிய முற்படாமல்தானே) இருக்கின்றனர்?
அதுபோலத்தான் பின்னால் நடக்கப்போகிற பல நிகழ்வுகளை தேவனும் அறியமுற்படாமல் இருக்கக்கூடும் என்கிறேன் நான்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution quoted:
அவருக்கு வல்லமை உண்டு ஆனால் அதை அவர் பயன்படுத்துவதில்லை என்பதற்கு எந்த வேத வசன ஆதாரமும் இல்லை.

ஆம், வசன ஆதாரம் இல்லைதான் சகோ.ஆத்துமா அவர்களே!
ஆனால் வசன ஆதாரத்தோடுதான் இப்பகுதியில் விவாதிக்க வேண்டுமெனில், பின்வரும் கேள்விக்கு வசன ஆதாரத்தோடு பதில் சொல்லுங்கள்.

மனிதன் தவறு செய்வான் என்பதை அறிந்தே அவனை உருவாக்கிவிட்டு, அவன் தவறு செய்தபின் அவனை உருவாக்கியதற்காக தேவன் ஏன் மனஸ்தாபப்படவேண்டும்?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சகோதரரே, "தேவன் மனஸ்தாபப்பட்டார்" என்பதற்கு ஏதோ தேவன் ஒரு தவறான செயலைச் செய்துவிட்டு அழுது புலம்பிக்கொண்டிருக்கிறார் என்று நாம் எண்ணுகிறோம். தேவன் எல்லா உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பது என் எண்ணம். தவறு செய்ய தேவன் மனிதனல்ல. அனைத்தும் அறிந்தவர்தான் தேவன். நாம் வேண்டிக்கொள்வதற்கு முன்னதாகவே நாம் என்ன வேண்டப்போகிறோம் என்று அவருக்குத் தெரியும் என்று வசனம் கூறுகிறது. நீங்கள் 'ஸ்கேன்' உதாரணம் கொடுப்பதால் அதையே நான் உங்களுக்கு விவரிக்கிறேன். பிறக்கப்போவது ஆணா பெண்ணா என்று நாம் அறிய முற்படாவிட்டலும் நமக்கு 100% மனிதக்குழந்தைதான் பிறக்கும் என்று அறிவோமல்லவா அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது என்று நினைக்கிறேன். அது போலத்தான் தேவனுக்கும் மனிதன் 'பாவம்' செய்வான் என்பது தெரியும்.

மேலும் இப்படி ஒருமனிதன் பாவம் செய்தால் பரவாயில்லை ஆனால் அவன் சந்ததியே பாவம் செய்கிறதே? சாத்தான் மனிதனை வஞ்சிப்பான், வஞ்சனையில் விழுவதே பாவம் என்றுகூடவா தேவனுக்குத் தெரியாது? ஆக தேவனுடைய அனுமதிய்ல்லாமலா 'சர்ப்பம்' தோட்டததுக்குள் நுழைந்த்தது? அல்லது தேவன் அதையும் அறிய முற்படவில்லையா? யூதாஸ்கரியோத் கிறிஸ்துவை காட்டிக்கொடுப்பான் என்று தெரியுமே ஏன் தடுக்கவில்லை? ஏனென்றால் இவைகளெல்லாம் நடந்தே தீரவேண்டும் என்பது தேவதிட்டம்.


-- Edited by soulsolution on Tuesday 6th of October 2009 05:37:23 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:

சகோதரரே, "தேவன் மனஸ்தாபப்பட்டார்" என்பதற்கு ஏதோ தேவன் ஒரு தவறான செயலைச் செய்துவிட்டு அழுது புலம்பிக்கொண்டிருக்கிறார் என்று நாம் எண்ணுகிறோம். தேவன் எல்லா உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பது என் எண்ணம். 

 இது ஒரு சரியான கருத்து அல்ல என்றே நான் கருதுகிறேன்

 
கர்த்தர் இரக்கமுள்ளவர், தயை உள்ளவர், எரிச்சலுள்ளவர், மனஸ்தாபபடுபவர், விசனப்படுபவர், உக்கிரம் நிறைந்தவர், பட்சபாதம் பார்க்காதவர், கண்ணீர் விடுகிறவர்
போன்ற மனிதனுக்குண்டான எல்லா பண்புகளும் கொண்டவர் எனபதற்கு பல  வேத ஆதாரங்கள் உள்ளது.
 
அவர் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதற்கு சரியான  வசன ஆதாரம் வேண்டும். நாமாக அப்படி முடிவு எடுக்க முடியாது!
        
 


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இதற்கான பதில் தேவ திட்டம் என்கிற பதிவிலும் எழுதியிருக்கிறேன்.

http://www.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=27979917



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

anbu57 wrote:
//எனவே ஆதாம் பாவம் செய்வானா மாட்டானா என்பதை முன்னாலேயே அறியக்கூடிய வல்லமை தேவனுக்கு இருந்திருந்தபோதிலும், அதை அவர் பயன்படுத்தியிருக்கமாட்டார் என்றே நான் கருதுகிறேன்.//

soulsolution wrote:
//அவருக்கு வல்லமை உண்டு ஆனால் அதை அவர் பயன்படுத்துவதில்லை என்பதற்கு எந்த வேத வசன ஆதாரமும் இல்லை.//

soulsolution wrote:
//தேவன் எல்லா உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பது என் எண்ணம்.//

பின்னால் நடப்பவைகளை அறிய தேவனுக்கு வல்லமை உள்ளபோதிலும், சில விஷயங்களில் அதை அவர் பயன்படுத்தியிருக்கமாட்டார் என நான் கருதுவதாக எழுதியுள்ளதற்கு வசன ஆதாரம் இல்லை எனக் கூறிய சகோ.ஆத்துமா அவர்களே, தேவன் எல்லா உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டவர் எனும் உங்கள் எண்ணத்திற்கு வசன ஆதாரம் இல்லை என்பதோடு, அது வசனத்திற்கு எதிராகவும் உள்ளது என்பதை அறியத் தவறிவிட்டீர்களா? பின்வரும் வசனங்களைப் படிக்கவும்.

சங்கீதம் 103:8 கர்த்தர் உருக்கமும் இரக்கமும் .... உள்ளவர்.
யாத். 20:5 உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து .....
உபாகமம் 29:20 அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்.


-- Edited by anbu57 on Tuesday 6th of October 2009 03:44:29 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மீண்டும் வார்த்தைகளை தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். உண்ர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் என்றுதான் பதித்துள்ளேனே தவிற 'உணர்வுகளே' இல்லாதவர் என்றல்ல. உணர்வுகளால் பாதிக்கப்படாதவர்தான் தேவனாக இருக்கமுடியும்.




நம் குறைவுள்ள ஞானத்தைக் கொண்டு நாம் ஏன் தேவனைக் குறைத்து மதிப்பிட வேண்டும். ஒரு உன்னத படைப்பாளிக்கு தான் செய்யும் ஒவ்வொரு செயலும் விளைவிக்கப்போகும் எல்லா விளைவுகளும் 100சதம் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் தேவன் மனிதன் "ஒருவேளை" தவறு செய்யக்கூடும் என்று "யூகித்து" முன்னேற்பாடாக கிறிஸ்துவை நியமித்திருந்தார் என்கிறீகள். நான் அது யூகம் அல்ல 100 சதம் தெரிந்தேதான் அதைச் செய்தார் என்கிறேன். விஷயம் ஒன்றுதான். ஒரு பிற்ந்த குழந்தையை கொண்டு போய் மோசமான சேரிப்பகுதியில் விட்டால் அது முழுக்க முழுக்க சேரிக்குழந்தையாகத்தான் வளரும். காட்டில் கொண்டுபோய் விட்டால் மிருகங்களுடன் அது ஒரு 'காட்டு வாசி'யாகத்தான் வளரும். அதுபோலவே 'இப்பிரபஞ்சத்தின் தேவனாக' ஒருவனை நியமித்து அவனுக்கு அதிகாரமும் கொடுத்துவிட்டு ஜனங்கள் பாவமில்லாமல் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்குமளவு தேவன் முட்டாளில்லை.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//சகோதரரே, "தேவன் மனஸ்தாபப்பட்டார்" என்பதற்கு ஏதோ தேவன் ஒரு தவறான செயலைச் செய்துவிட்டு அழுது புலம்பிக்கொண்டிருக்கிறார் என்று நாம் எண்ணுகிறோம்.//

தேவன் மனஸ்தாபப்பட்டார் என்ற வேதவசனத்தை மட்டுமே நான் எடுத்துரைத்துள்ளேன். தேவன் தவறு செய்ததாகவோ, தவறான செயலைச் செய்துவிட்டு அழுது புலம்பிக் கொண்டிருப்பதாகவோ நான் எண்ணவுமில்லை, அவ்வாறு எழுதவுமில்லை.

soulsolution wrote:
//பிறக்கப்போவது ஆணா பெண்ணா என்று நாம் அறிய முற்படாவிட்டாலும் நமக்கு 100% மனிதக்குழந்தைதான் பிறக்கும் என்று அறிவோமல்லவா அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது என்று நினைக்கிறேன். அது போலத்தான் தேவனுக்கும் மனிதன் 'பாவம்' செய்வான் என்பது தெரியும்.//

நமக்குப் பிறக்கப்போவது ஆணா பெண்ணா என்பதை அறிய நாம் முற்படாவிட்டால் அது நமக்குத் தெரியாதல்லவா? அது போலத்தான் ஆதாம் தமக்குக் கீழ்ப்படிவானா மாட்டானா என்பதை அறிய தேவன் முற்பட்டிருக்காவிட்டால் அது அவருக்குத் தெரிந்திருக்காது.

soulsolution wrote:
//மீண்டும் வார்த்தைகளை தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் என்றுதான் பதித்துள்ளேனே தவிற 'உணர்வுகளே' இல்லாதவர் என்றல்ல. உணர்வுகளால் பாதிக்கப்படாதவர்தான் தேவனாக இருக்கமுடியும்.//

எண்ணாகமம் 11:1 கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, .. சிலரைப் பட்சித்தது.
எண்ணாகமம் 11:33 தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.
யாத்திராகமம் 32:14 அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு பரிதாபங்கொண்டார்.

சகோ.ஆத்துமா அவர்களே! தேவனின் இச்செயல்களை உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட செயல்களாகக் கருதுகிறீர்களா அல்லது உணர்வுகளுக்கு உட்பட்டவைகளாகக் கருதுகிறீர்களா?

soulsolution wrote:
//ஒரு பிறந்த குழந்தையை கொண்டு போய் மோசமான சேரிப்பகுதியில் விட்டால் அது முழுக்க முழுக்க சேரிக்குழந்தையாகத்தான் வளரும்.//

ஆம் சகோ.ஆத்துமா அவர்களே! ஆனால் சேரிக்குழந்தையாக வளர்ந்ததற்காக அக்குழந்தையைத் தண்டிப்பது நியாயமாகுமா?

ஆனால் ஒரு குழந்தையை சேரியில் விடுவதைப்போல தேவன் மனிதனை முழுக்க முழுக்க பாவம் நிறைந்த உலகில் விடவில்லை. ஏதேன் தோட்டத்தில் தேவனும் இருந்தார், சாத்தானும் இருந்தான். தேவன் ஆதாமோடு நேரடியாக உரையாடின காலம் அது. ஆதாமும் ஏவாளும் முழுக்க முழுக்க பாவமில்லாமல் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்.

மனிதன் பாவம் செய்தேயாக வேண்டிய சூழ்நிலைக்கு தேவன் அவனைத் தள்ளியிருந்திருப்பாரேயானால், அவன் பாவம் செய்ததற்காக அவனைத் தண்டிப்பது நியாயமாகுமா?

ஒருவேளை அது தேவநியாயம், அதைக் குறித்து கேள்வி கேட்க நமக்கு உரிமையில்லை எனக் கூறுவீர்களா?




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//இப்பிரபஞ்சத்தின் தேவனாக' ஒருவனை நியமித்து அவனுக்கு அதிகாரமும் கொடுத்துவிட்டு ஜனங்கள் பாவமில்லாமல் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்குமளவு தேவன் முட்டாளில்லை.//

நிச்சயமாக சகோ.ஆத்துமா அவர்களே!
ஆனால் பாவிகளான மனிதர்களுக்கு தேவன் பின்வரும் ஆக்கினையை நியமித்தது ஏனோ?
வெளி. 21:8 பயப்படுகிறவர்களும் .. கொலைபாதகரும் விபசாரக்காரரும் ... பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard