மனந்திரும்ப அவசியம் இல்லை என்றாலே பாவம் இல்லை என்று அர்த்தம். ஆனால் மனிதனோ மரிப்பது பாவத்தின் சம்பளத்தினால் தான் என்று நாம் அனைவரும் அறிந்த விஷயமாகும். அப்படி என்றால் இந்த நீதிமான்கள் யார்? தேவன் சிருஷ்ட்டித்த அனைத்தும் அது எதற்காக சிருஷ்டிக்கப்பட்டதோ, அதை சரி வர செய்துக்கொண்டு இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சூரியன் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டதோ, அதை சரிவர செய்துக்கொண்டுதான் இருக்கிறது, அப்படியே, காற்று, மழை, மற்றும் இந்த பிரபஞ்சத்தின் உள்ள மற்ற விஷயங்கள். விதிவிளக்கு, அந்த ஒரே பாவி, அவன் தான் ஆதாம் தொடங்கி வந்த மனித வர்கம். ஏனென்றால் மனிதன் மாத்திரமே எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டானோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் இருக்கும்படி செய்து விட்டான். அந்த மனித வர்கம் மனம் மாறுவதே தேவனின் நோக்கம்.
ஆக மற்ற எந்த படைப்பும் எந்த விதத்திலும் தவறாதபடி அவைகள் மனந்திரும்ப அவசியம் இல்லாத அந்த 99 (அதாவது தேவனின் 100 சதவித படைப்புகளில் ஒன்றான மனிதனை தவிர) ஆகும். தேவனின் சித்தம் நிறைவேற மனந்திரும்ப அவசியம் அந்த ஒரே பாவி (அதாங்க இந்த மனித வர்கம்) மனிதன் ஆவான். இவன் மனந்திரும்பினால் தேவனின் சித்தம் பூர்ணமாக நிறைவேறி, அந்த பரலோகம் சந்தோஷப்படும். (சாத்தான் மாத்திரம் விதிவிலக்கு, ஏனென்றால் அவன் மனந்திரும்ப மாட்டான், அவன் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டு விட்டான்)
அப்படியே இந்த தளத்தின் 100வது பதிவு இது தான் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தேவ சித்தம் அறிய தொடர்ந்து வாசித்து தங்களின் பதிவுகளால் பக்கங்களை நிறப்புங்களேன். இன்னும் அநேகர் வந்து வந்து (!?) செல்கிறார், அவர்களும் உறுப்பினராகி, பதிவுகளை தந்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். கர்த்தர் தொடர்ந்து இந்த தளத்தை ஆசீர்வதித்து நடத்தட்டும். அவரின் சித்தம் நிறைவேற நாம் இடம்கொடுப்போம்.
//தேவன் சிருஷ்ட்டித்த அனைத்தும் அது எதற்காக சிருஷ்டிக்கப்பட்டதோ, அதை சரி வர செய்துக்கொண்டு இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சூரியன் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டதோ, அதை சரிவர செய்துக்கொண்டுதான் இருக்கிறது, அப்படியே, காற்று, மழை, மற்றும் இந்த பிரபஞ்சத்தின் உள்ள மற்ற விஷயங்கள். விதிவிலக்கு, அந்த ஒரே பாவி, அவன் தான் ஆதாம் தொடங்கி வந்த மனித வர்க்கம். ஏனென்றால் மனிதன் மாத்திரமே எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டானோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் இருக்கும்படி செய்து விட்டான். அந்த மனித வர்க்கம் மனம் மாறுவதே தேவனின் நோக்கம்.//
“மனிதனைத் தவிர மற்றெல்லா சிருஷ்டிகளும், தேவனின் நோக்கத்தை (அதாவது சித்தத்தை) சரியாக நிறைவேற்றி வருகின்றன; ஆனால் மனிதன் மட்டும் தேவனின் நோக்கம் (அதாவது சித்தம்) நிறைவேறாமல் இருக்கும்படி செய்துவிட்டான்” என்கிறீர்கள். அதாவது தேவனின் சித்தம் நிறைவேறாமல் இருக்கும்படி செய்யக்கூடிய அளவுக்கு தேவனை விட மனிதன் வல்லமையுள்ளவனாக இருக்கிறான் என்கிறீர்கள்.
தேவனின் நோக்கத்தை நிறைவேறாதபடி செய்துவிட்ட மனிதனின் மனதை மாற்றுவதுதான் தற்போது தேவனின் நோக்கம் என்கிறீர்கள்.
அதாவது ஒரு காலத்தில் தேவனின் நோக்கத்தை நிறைவேற்ற மனிதன் தவறிவிட்டான்; தற்போது அவனது மனதை (அதாவது சித்தத்தை) மாற்றி தமது நோக்கத்தை நிறைவேற்ற தேவன் செயல்பட்டு வருகிறார் என்கிறீர்கள்.
உங்களது இக்கருத்து, எல்லாம் தேவசித்தமே எனும் திரியில் நீங்கள் பதித்துள்ள கருக்களுக்கு இசைவாக உள்ளதா, முரண்படுகிறாத எனப் பாருங்கள்.
இரண்டு வருடங்கள் ஓடி விட்டது!! அப்ப இருந்த புரிந்துக்கொள்ளுதலில் எழுதினேன்!! இன்னும் ஆறாய ஆறாய மாற்றிக்கொண்டேன்!! அதற்காக எழுதிய பதிவுகளை நீக்கவோ, திரும்பி பார்க்கவோ மனம் வரவில்லை!!
கத்தோலிக்கனாக தான் பிறந்தீர்கள் என்று 1987ல் எடுத்த படங்களை வைத்து கேள்வி கேட்பது போல் இருக்கிறது, சகோ அன்பு அவர்களே!!
கிறிஸ்துவின் வருகையின் வெளிச்சம் வர வர சில இருள்கள் நீங்க தான் செய்யும்!! அப்படி தான் இது!! நான் நினைப்பது தான் என்று இருந்திருந்தால் ஒரு வேலை தேவன் என்னை இன்னும் ஒரு கத்தோலிக்கனாக வைத்திருப்பர், தெரியவில்லை!!
இப்ப போய் 2009ல் எழுதியதை காண்பித்து அப்போ இப்படி எழுதுனீர்கள் என்று சிவப்பிலும் பெரிய எழுத்திலும் நீங்கள் காண்பித்தாலும், என்னால் அதற்கு ஒன்றும் எழுத முடியாது!!
தேவன் நம் எண்ணங்களை மாற செய்கிறாரே!! கிறிஸ்தவர்களை கொலை செய்ய கிளம்பிய சவுலை பவுலாக மாற்றினாரே!! இரண்டாம் வருகை வெகு சீக்கிரத்தில் நடக்கும் என்கிற எண்ணத்தை பேதுரு வழியாக மாற்றியிருக்கிறாரே தேவன்!! அப்போஸ்தலனாக இருந்த யூதாஸை துரோகியாக மாற்றினாரே!!
அப்படி தான் சகோதரரே நான் நினைக்கிறேன்!! என் கிறிஸ்தவ பயணம் கத்தோலிக்கத்தில் துவங்கியது, இப்ப உள்ள பதிவுகள் உங்கள் முன் இருக்கிறது!!
நாம் இப்ப இருக்கும் பதிவுகளை கொண்டு விவாதிக்கலாமே!!
//இரண்டு வருடங்கள் ஓடி விட்டது!! அப்ப இருந்த புரிந்துகொள்ளுதலில் எழுதினேன்!! இன்னும் ஆராய ஆராய மாற்றிக்கொண்டேன்!! அதற்காக எழுதிய பதிவுகளை நீக்கவோ, திரும்பி பார்க்கவோ மனம் வரவில்லை!!//
மாற்றம் கூடாது என நான் சொல்லவில்லை சகோதரரே! ஆனால் இன்ன இன்ன விஷயத்தில் உண்டான மாற்றத்தை தெளிவாகச் சொல்லவேண்டும்.
இப்போது இத்தனை தீவிரமாக எனது கருத்தை எதிர்த்து விவாதிக்கும் நீங்கள், “2 வருடங்களுக்குமுன் உங்கள் கருத்தில்தான் நானும் இருந்தேன்” என்பதை சொல்லத்தான் வேண்டும். கருத்தை மாற்றிக்கொண்ட உங்களுக்குத்தான் அதைக் குறித்த உண்மை தெரியும். நாங்களாக உங்களது ஒவ்வொரு பதிவையும் உன்னிப்பாகப் படித்து, “ஓ, இவர் இந்தத் தேதியில் இந்தக் கருத்தில் இருந்துள்ளார், இப்போது அதே கருத்துக்கு எதிரான கருத்தில் இருக்கிறார்” என நாங்களாகப் புரிந்துகொள்ளவேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பது சரியல்ல.
அனைவரும் வந்து படிக்கக்கூடிய இத்தளத்தில், முரணான கருத்துக்கள் இருக்கக்கூடாது. ஒரே தளத்தில் இப்படி ஒரு கருத்தும் அப்படி ஒரு கருத்தும் இருந்தால், படிப்பவர்களை அது குழப்பமடையச் செய்யும்.
எனவே உங்களுக்குக் கருத்தில் மாற்றம் உண்டாகையில், உடனடியாக பழைய கருத்து பதியப்பட்ட பதிவுக்கு அடுத்தபடியாக, எனது இக்கருத்தை இப்போது நான் மாற்றிக் கொண்டேன் எனத் தெளிவாகச் சொல்லவேண்டும்.
ஏதோ ஒரு வசனத்தின் புரிந்துகொள்தலில் உள்ள மாற்றமல்ல, உங்கள் மாற்றம்.
தேவனின் அடிப்படைத்தன்மையையே அசைக்கின்றதும், வேதாகமத்தின் ஒட்டு மொத்தக் கருத்தையே அந்தர் பல்டியாக மாற்றுவதும்தான் உங்கள் கருத்து மாற்றம். இத்தனை பெரிய மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டு, அதை நான் சொல்லும்போது, “அப்போ அப்படி இருந்தேன், இப்போ இப்படி மாறி விட்டேன், இதை நீங்களாகப் புரிந்துகொள்ளவேண்டியதுதானே” என என்னிடம் சொல்வது பொறுப்பான பதில் அல்ல.
At least இப்பொழுதாவது, “ஆம் சகோதரரே! முன்னொரு காலத்தில் தவறான கருத்தில் இருந்தபோது அதைப் பதித்திருந்தேன், தயவு செய்து அதைப் பொருட்படுத்தாதீர்கள்” எனச் சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து, “பழையதை எடுத்துக் கேட்கிறீர்களே, இது என்ன நியாயம்” என என்னைக் கேட்பது அத்தனை உசிதமானதல்ல.
பெரியன்ஸ்:
//கத்தோலிக்கனாக தான் பிறந்தீர்கள் என்று 1987ல் எடுத்த படங்களை வைத்து கேள்வி கேட்பது போல் இருக்கிறது, சகோ அன்பு அவர்களே!!//
இக்கூற்று என்னை மிகவும் insult செய்வதாக உள்ளது சகோதரரே! நீங்கள் கத்தோலிக்கத்தில் இருந்தது பற்றியும், அது தவறென அறிந்து அதைவிட்டு வெளியே வந்ததைப் பற்றியும் அடிக்கடிக் கோடிட்டுக் காட்டி வருகிறீர்கள். மேலும் உங்கள் கத்தோலிக்க நம்பிக்கையின் அடிப்படையில் இத்தளத்தில் எந்தப் பதிவையும் நீங்கள் தந்திருக்கவும் மாட்டீர்கள், அப்படித்தானே? அப்படியிருக்க உங்களது பழைய கத்தோலிக்க நம்பிக்கையைச் சுட்டிக்காட்டி நான் கேள்விகேட்பது படு முட்டாள்த்தனமாகத்தான் இருக்கும். அதே முட்டாள்த்தனத்தில்தான், இப்போது நான் கேள்விகேட்பதாகச் சொல்லி என்னை insult செய்கிறீர்கள்.
மீண்டும் சொல்கிறேன், கருத்து மாற்றம் தவறே அல்ல. ஆனால் அந்த மாற்றத்தை தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும். அதுதான் நேர்மையாகும். மாத்திரமல்ல, அதைச் சொன்னால்தான் உங்களது தற்போதைய கருத்தையும் விரைவில் நீங்கள் மாற்றக்கூடியவர் என்பதை நாங்கள் அறியமுடியும்.
//கத்தோலிக்கனாக தான் பிறந்தீர்கள் என்று 1987ல் எடுத்த படங்களை வைத்து கேள்வி கேட்பது போல் இருக்கிறது, சகோ அன்பு அவர்களே!!//
உங்களை எந்த விதத்திலும் Insult செய்தேன் என்பது தவறான புரிந்துக்கொள்ளுதலாகும்!! மாறாக திருந்தி விட்ட ஒரு திருடனையோ கொள்ளைக்காரனையோ பார்த்து நீ அப்போ அப்படி தானே இருந்தாய் என்று நீங்கள் கேட்டது போல் இருந்தது!!
நான் ஆரம்பத்தில் வேத பாடங்கள் கற்றுக்கொள்ளும் போது மனிதனின் "சித்தம்" என்கிற Freewillஐ குறித்து என் புத்திக்கு எட்டினதை சரி என்றே நினைத்திருந்தேன்!! ஆனால் வேதத்தை இன்னும் ஆறாய ஆறாய தான் தேவன் பல விஷயங்களை புரிந்துக்கொள்ள உதவி செய்தார்!! இந்த தளம் துவங்கும் போது நான் கத்தோலிக்கனாகவோ பெந்தகோஸ்தே சபை விசுவாசத்திலோ இல்லை தான், ஆனால் அவைகளை எல்லாம் விசுவாசித்து வந்தவன் தானே என்கிற நோக்கத்தில் தான் எழுதினேன்!!
கருத்து மாற்றம், புரிந்துக்கொள்ளுதல் மாறுவது பதிவுகளில் வெளிப்படுகிறதே!! இருக்கும் கொஞ்ச நேரத்தில் தேடி தேடி பழைய பதிவுகளை எனக்கு வாசித்து நீக்க நிச்சயமாக நேரம் இல்லை!! நேரம் இருந்தால் நிச்சயம் பழைய பதிவுகளை நீக்குவேன்!! பழையது நீக்காமல் இருப்பதற்கு இன்னோரு காரணமும் இருக்கு!! என் மாறுதல்களை, தேவன் என்னை நடத்திய ஆச்சரியமான விதங்களை நான் புரிந்துக்கொள்ள ஒருவேளை என் பழைய பதிவுகள் எனக்கு துனையாக இருக்குமே!!
அடிக்கடி நான் கத்தோலிக்கனாக இருந்தேன் என்று கோடிட்டு காண்பிப்பதில் என்ன தவறு!! பவுல் கூட தன் வரலாற்றை அடிக்கடி சொல்லியிருக்கிறாரே!! அதற்காக நான் என்னை பவுலுடன் ஒப்பீட்டு எழுதிவிட்டதாக நினைத்திட வேணடாம்!! இதை நான் ஏன் அடிக்கடி சொல்லுகிறேன் என்றால், தேவன் என்னை அப்படி பட்ட இடங்களிலிருந்து எல்லாம் நடத்தி வந்தார் என்று சொல்லுவதற்காக தான்!! நான் கத்தோலிக்க மக்களை வெறுப்பவன் அல்ல, அவர்களை நேசிக்கிறேன், வெறுப்பது கோட்பாடுகளை வேதத்திற்கு விரோதமான சடங்காச்சாரங்களை!! அப்படியே தான் பெந்தகோஸ்தே சபையோ வேறு சபையோ!! அதில் உள்ள மக்களை வெறுத்து என்ன செய்வது, ஜனங்களை வெறுப்பது அல்ல என் நோக்கம், மாறாக கோட்பாடுகளை தேவ தூஷனங்களை சாடுவதே என் நோக்கம்!! என் மாற்றங்களை பதிவு செய்வதில் என்ன தவறு இருக்கிறது!!
என் கேள்வியின் நோக்கம் புரியாமல் நீங்கள் தான் தவறாக யூகித்து Insult செய்வதாக எழுதுகிறீர்கள்!!
மனித சித்தம் Free will என்று நான் துவக்கத்தில் நினைத்துக்கொண்டதை மாற்றிக்கொண்டேன்!! நடப்பது அனைத்தும் தேவனின் சித்தம் மாத்திரமே என்பதை தேவன் வேத வசனங்கள் மூலமாக புரியவைத்திருக்கிறார்!! ஆகவே மனிதனுக்கு உண்டான Free will என்கிற மனித சித்தத்தில் எனக்கு உடன்பாடு அல்ல!! அப்படி மனித சித்தமோ, சாத்தானின் சித்தமோ (இனியும் இதை சித்தம் என்று சொல்லாமல் நான் சிந்தனைகள் என்றே சொல்லுவேன்) வெற்றி பெற ஆரம்பித்து விட்டால் தேவன் பெலவீனமான ஒரு தேவனாக தான் இருக்க முடியும்!! தேவன் நம் சிந்தனைகளை ஓரு எல்லை வரை அனுமதிக்கிறார், அது மனிதர்களின் சிட்சைக்காகவே!! மனிதன் கற்றுக்கொள்ளவே தீமைகளை அனுமதிக்கிறார்!!
நடப்பது எல்லாம் தேவனின் சித்தம் தான் என்கிற கருத்தில் நான் தற்போது இருக்கிறேன்!! எல்லாவற்றையும் தெளிவாக தெரிந்துக்கொண்டேன் என்று சொல்லவில்லை, ஆனால் வசனம் சொல்லுவதை ஆறாய்ந்து தெளிவடைய விரும்புகிறேன், அதை செய்ய தேவன் சித்தமுள்ளவராக இருந்தால் நிச்சயமாகவே எனக்கு உதவி செய்வார் என்றும் என் சிந்தனையில் நம்புகிறேன்!!
I கொரிந்தியர் 13:12 இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.
இது தான் உண்மை!! மற்றபடி உங்களை Insultசெய்திருக்கிறேன் என்று இப்பவும் நான் நினைக்கவில்லை!! ஆனால் நான் அப்படி தான் செய்திருக்கிறேன் என்று நீங்கள் கருதுவதால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!!
தொடர்ந்து தேவனின்சித்தமே நடக்கிறது என்கிற கருத்தில் மாத்திரமே எழுதுவேன் என்பதை இதன் மூலம் சகோ அன்பு மற்றும் இந்த தளத்தின் வாசகர்களுக்கு அறிவிக்கிறேன்!!
//அடிக்கடி நான் கத்தோலிக்கனாக இருந்தேன் என்று கோடிட்டு காண்பிப்பதில் என்ன தவறு!!//
இதைத் தவறு என நான் ஒருபோதும் சொல்லவில்லையே!
கத்தோலிக்க நம்பிக்கை விஷயத்தில் உங்கள் மாற்றதை அடிக்கடி கோடிட்டுக்காட்டிய நீங்கள், தேவசித்தம் விஷயத்தில் அப்படி கோடிட்டுக்காட்டவில்லையே என்றுதான் கூறியிருந்தேன்.
இத்தளத்தில் எழுதாத ஒரு விஷயத்தை அடிக்கடி கோடிட்டுக் காண்பிக்கும் நீங்கள், இத்தளத்தில் எழுதின விஷயத்தில் அப்படி செய்யவில்லையே என்றுதான் கூறியிருந்தேன்.
//கருத்து மாற்றம், புரிந்துகொள்ளுதல் மாறுவது பதிவுகளில் வெளிப்படுகிறதே!! இருக்கும் கொஞ்ச நேரத்தில் தேடி தேடி பழைய பதிவுகளை எனக்கு வாசித்து நீக்க நிச்சயமாக நேரம் இல்லை!!//
உங்கள் கருத்து மாற்றங்களை உங்களது பதிவுகளிலிருந்து நாங்களாகப் புரிந்துகொள்வதைவிட, அக்கருத்து மாற்றத்தை தெளிவாக அனைவரும் அறியத்தக்கதாக அறிவிப்பதுதான் சிறந்தது.
பழைய பதிவுகளை தேடி நீக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் உங்களது பழைய கருத்துக்கு எதிரான கருத்து மாற்றத்தை உங்கள் மனம் அறியுமல்லவா? அந்த மாற்றத்தை ஓர் அறிவிப்பின் மூலம் அறிவித்தால் போதுமானது.
சரி, போகட்டும். இப்போது அறிவித்து விட்டீர்கள். எனவே இவ்விஷயத்தை இத்தோடு விட்டுவிடுவோம்.
-- Edited by anbu57 on Saturday 16th of July 2011 09:07:44 AM
//அப்படி என்றால் இயேசு கிறிஸ்து உவமையில் சொன்ன அந்த 99 நீதிமான்கள் யார்? அந்த ஒரே பாவி யார்?//
இக்கேள்விக்கு உங்கள் “பழைய கருத்தின்” அடிப்படையில், பின்வருமாறு பதிலளித்துள்ளீர்கள். தற்போது உங்கள் கருத்து மாறிவிட்டது என்கிறீர்கள். அப்படியானால், இக்கேள்விக்கு உங்கள் “புதிய கருத்தின்” அடிப்படியிலான பதில் என்ன?
பழைய கருத்தின் அடிப்படையிலான பதில்:
//மனந்திரும்ப அவசியம் இல்லை என்றாலே பாவம் இல்லை என்று அர்த்தம். ஆனால் மனிதனோ மரிப்பது பாவத்தின் சம்பளத்தினால் தான் என்று நாம் அனைவரும் அறிந்த விஷயமாகும். அப்படி என்றால் இந்த நீதிமான்கள் யார்? தேவன் சிருஷ்டித்த அனைத்தும் அது எதற்காக சிருஷ்டிக்கப்பட்டதோ, அதை சரி வர செய்துக்கொண்டு இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சூரியன் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டதோ, அதை சரிவர செய்துகொண்டுதான் இருக்கிறது, அப்படியே, காற்று, மழை, மற்றும் இந்த பிரபஞ்சத்தின் உள்ள மற்ற விஷயங்கள். விதிவிலக்கு, அந்த ஒரே பாவி, அவன் தான் ஆதாம் தொடங்கி வந்த மனித வர்க்கம். ஏனென்றால் மனிதன் மாத்திரமே எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டானோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் இருக்கும்படி செய்து விட்டான். அந்த மனித வர்க்கம் மனம் மாறுவதே தேவனின் நோக்கம்.
ஆக மற்ற எந்த படைப்பும் எந்த விதத்திலும் தவறாதபடி அவைகள் மனந்திரும்ப அவசியம் இல்லாத அந்த 99 (அதாவது தேவனின் 100 சதவித படைப்புகளில் ஒன்றான மனிதனை தவிர) ஆகும். தேவனின் சித்தம் நிறைவேற மனந்திரும்ப அவசியம் அந்த ஒரே பாவி (அதாங்க இந்த மனித வர்க்கம்) மனிதன் ஆவான். இவன் மனந்திரும்பினால் தேவனின் சித்தம் பூர்ணமாக நிறைவேறி, அந்த பரலோகம் சந்தோஷப்படும். (சாத்தான் மாத்திரம் விதிவிலக்கு, ஏனென்றால் அவன் மனந்திரும்ப மாட்டான், அவன் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டு விட்டான்)
அப்படியே இந்த தளத்தின் 100வது பதிவு இது தான் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தேவ சித்தம் அறிய தொடர்ந்து வாசித்து தங்களின் பதிவுகளால் பக்கங்களை நிறப்புங்களேன். இன்னும் அநேகர் வந்து வந்து (!?) செல்கிறார், அவர்களும் உறுப்பினராகி, பதிவுகளை தந்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். கர்த்தர் தொடர்ந்து இந்த தளத்தை ஆசீர்வதித்து நடத்தட்டும். அவரின் சித்தம் நிறைவேற நாம் இடம்கொடுப்போம்.//
இப்பதிலின் இறுதி வரி:
//அவரின் சித்தம் நிறைவேற நாம் இடம்கொடுப்போம்.//
அதாவது தேவனின் சித்தம் நிறைவேற நாம் இடங்கொடுக்க வேண்டும் எனும் கருத்தை மறைமுகமாகக் கூறியுள்ளீர்கள். இக்கருத்தில் தற்போது மாறியுள்ளீர்களா, அல்லது அதே கருத்தில்தான் இருக்கிறீர்களா?
ஆமாம் அன்பு அவர்களே, தேவனின் சித்தம் வேதத்திலிருந்து அறிந்தவர்கள் நிச்சயமாக இடம் கொடுப்பார்கள்!! அந்த சித்தம் என்னவென்று எல்லாரும் அறிவதில்லை!! யார் அறிய வேண்டும் யார் அறியாமல் இருப்பார்கள் என்பதை தேவன் தீர்மானிக்கிறார்!! 2000 பேயர் சபைகளுக்கு மேல் கிறிஸ்தவத்தில் பல விதமான மனித போதனைகளில் இருப்பதே இதற்கு சாட்சி!!
வேத வசனம் தெளிவாக சொல்லுகிறது தேவன் எல்லாரையும் இரட்சிக்க சித்தம் கொண்டு இருக்கிறார் என்று!! ஆனால் இதை உங்களை போன்றோர் மனித சிந்தனைகளை கொண்டு, அவருக்கு சித்தம் தான், ஆனால் நான் கிரியைகளினால் அல்லது இன்னும் பலவிதத்தில் அடுத்தவர்களோடு சிறந்தவனாக இருக்கும் போது, எனக்கு இருக்கும் அதே இரட்சிப்பு அவர்களுக்குமா என்று நினைக்கிறீர்கள்!! தயவு செய்து இப்படி எழுதுவது உங்களை Insult செய்ததாக எண்ண் வேண்டாம்!! ஆனால் இது உண்மையே!! கிருபையை காட்டிலும் கிரியையின் மேல் நம்பிக்கையாக இருப்பவர் நீங்கள்!! ஆகவே தான் தேவனின்சித்தமா அல்லது மனிதனின் சித்தமா என்கிற அளவிற்கு யோசிக்க முடிகிறது!!
நடக்கும் தீமையை எல்லாம் காட்டி இதுவும் தேவ சித்தமா என்கிறீர்கள்!! ஆம் என்றும் இல்லை என்றும் பதில் தருகிறேன்!!
ஆம், ஏனென்றால் தேவன் மனிதனின் சிந்தனைகளினால் ஏற்படும் காரியங்களை அனுமதிக்கிறார் ஆனால் அது முடிவு அல்ல, அது வெற்றி பெறாது, அது ஜெயிக்காது, அது முடிந்து போகும்!! ஆகவே தீமையாக இருந்தாலும் தேவன் அதை அனுமதிக்கிறார்!! தேவன் ஜனங்கள் இடறி போகும்படி ஜனங்களுக்கு விசுவாசத்தை தருவதில்லை, ஏனென்றால் அதற்கென்றே நியமிக்கப்பட்டும் இருக்கிறார்கள் என்கிறது வசனம்!! எடுத்துக்காட்டு,
பரலோகம் செல்லும் வாசலோ இடுக்கமானது என்கிறது வசனம்!! இது தேவ சித்தம்!! மனித போதனைகள் கொண்ட சபைகள் மரியாள் வணாக்கம் தொடங்கி பரிசுத்த ஆவியானவரை தேவன் என்று பாடி துதிக்கும் அளவிற்கு "கிறிஸ்தவர்கள்" இருக்கிறார்கள்!! இவைகள் மனித போதனைகள் தானென்றாலும் தேவன் அனுமதித்திருக்கிறார்!! ஏனென்றால் அவரின் சித்தமான "புறம்பே" இருப்புவர்களுக்கு இது புரிய கூடாது என்று சில காலம் "இப்பிரபஞ்சத்தின் தேவனான சாத்தானை" கொண்டு இவர்களின் கண்களை கட்டி வைத்திருக்கிறார்!! அவர் நியமித்த காலத்தில் இந்த பூமியே தேவனை அறிகிற அறிவை பெறும் என்று வசனம் சொல்லுகிறது!! அது வரையில் அவரே இப்படி பட்டதை அனுமதிப்பதால் மனிதனின் சிந்தையினால் தோன்றிய கோட்பாடுகள் வெற்றி பெற்று விற்றது என்று இல்லை!! இத்துனை கோடி கிறிஸ்தவர்கள் "திரித்துவம்" என்கிறா துருபதேசத்தில் தேவன் அனுமதித்திருக்கிறார், மிகவும் சிலருக்கு தேவனின் தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார், ஏனென்றால் எல்லாரும் அறிந்துக்கொள்ளும் ஒரு நாளை அவர் வைத்திருக்கிறார்!! இப்படி திரித்துவ போதனை இருப்பதால் அது தேவனின் சித்தம் என்று அர்த்தம் அல்ல, ஆனால் சில காலம் அதை அனுமதித்திருக்கிறார், அவரின் சித்தமோ எல்லாரும் இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிகிற அறிவை தர வேண்டியது!! மரியாள் வணக்கத்தை அனுமதிக்கிறார்!! இவை எல்லாம் என்ன அவருக்கு தெரியாமலே நடக்கிறது என்று நம்புகிறீர்களா!!
தேவன் நமக்கு சிந்தையை தந்திருக்கிறார், அது தேவனின் சித்தத்திற்கு மேல் அல்ல!! தேவன் சித்தம் மீறப்படுவது போல் தோன்றுவதே, அந்த செயலை தேவன் அனுமதிக்கிறார் என்றே அர்த்தம்!! சபையின் சிந்தை தேவனின் சித்தத்தை (திட்டத்தை) அண்டி இருக்க முயற்சிக்கும், அதே போல் உலகத்தாரின் சிந்தை (கிறிஸ்தவர்கள் உட்பட தான்) தேவனின் சித்தத்திற்கு விரோதமாகவே இருக்கும்!! சிந்தை அப்படி இருப்பதால் அது மனிதனின் சித்தமாகாது!! அது தேவனின் திட்டத்தில் அல்ல ஆனால் அதை தேவன் அனுமதிக்கிறார்!!
தேவன் மனிதனுக்கு என்று திட்டம் அல்லது சித்தம் வைத்திருக்கிறார், அதை பின்பற்றவோ, அதை பின்பற்றாமல் இருக்க செய்வதும் தேவனே!! விசுவாசத்தை ஈவாக தருபவரும் அவரே, வசனத்தை வைத்திருப்பவர்களை இடறச்செய்வதும் அவரே!! கனமான பாத்திரமாகவோ, கனவீனனான பாத்திரமாக மாற்ற தேவனுக்கு அதிகாரம் இல்லை என்கிறீர்கள்!!
ரோமர் 9:21 மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்று சொல்லுகிறீர்கள், ஆனால் வசனம் சொல்லுகிறது, மனுஷக்குமாரன் வரும் போது விசுவாசத்தை காண்பாரோ என்று!!?? இதில் எது தேவ சித்தம் எது மனிதனின் சிந்தை!! மனுஷன் ஏதோ தேவனால் முடியவில்லை, நான் உதவுகிறேன் என்று சொல்லி சுவிசேஷம் என்று ஒன்றை சொல்லிக்கொண்டு இருக்கிறான், ஊழியர் என்கிற போர்வையில், ஆனால் தேவனோ தம் சித்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!! ஆக எத்துனை இலட்ச்சம் பேர் சேர்ந்து சுவிசேஷம் சொல்லுவது போல் இருந்தாலும், தேவனின் சித்தத்தின்படி மனுஷ குமாரன் வரும் போது விசுவாசத்தை காணமாட்டார்!! அப்படி என்றால் இவர்கள் இப்படி சுவிசேஷம் சொல்லுவது யாருக்காக, இது தேவனின் சித்தமா? இப்படி தான் ஒவ்வொரு விஷயத்திலும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது!!
மற்றபடி நல்ல கிரியைகள் செய்பவர்கள் எல்லா மதங்களிலும் எல்லா ஜாதிகளிலும், ஏன் கடவுளே இல்லை என்று சொல்லுபவர்களும் செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்!! அவர்களும் தேவனை அறிந்துக்கொள்ளும் காலம் இருக்கிறது, அது விரைவில் வருகிறது என்பது தான் தேவ சித்தம்!!
//ஆமாம் அன்பு அவர்களே, தேவனின் சித்தம் வேதத்திலிருந்து அறிந்தவர்கள் நிச்சயமாக இடம் கொடுப்பார்கள்!!//
உங்களின் இந்த முதல் கூற்றே தவறுதான் சகோதரரே!
இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் கிட்டத்தட்ட அனைவருமே தேவனின் சித்தம் ஓரளவாகிலும் அறிந்தவர்கள்தான். ஆனால் அவர்களில் பலர் தேவனின் சித்தம் நிறைவேற இடங்கொடுப்பதில்லை.
தேவனின் சித்தம் எது? இக்கேள்விக்கு பதில் அறிய பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
மத்தேயு 17:5 அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
உபாகமம் 18:18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். 19 என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசி இயேசுவே (அப். 3:22; 7:57). இயேசுவின் வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கவேண்டும் என்பதே தேவனின் சித்தம். நம் மத்தியில் வேதாகமம் படித்துள்ள அனைவரும் இயேசுவின் போதனையை நிச்சயம் படித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் அப்போதனைகளுக்கு செவிகொடுப்பதில்லையே.
எனவே தேவசித்தத்தை அறிந்த பலர், அது தங்களிடம் நிறைவேற இடங்கொடுக்கவில்லை என்பதே உண்மை.
//யார் அறிய வேண்டும் யார் அறியாமல் இருப்பார்கள் என்பதை தேவன் தீர்மானிக்கிறார்!!//
இக்கூற்றுக்கு வசன ஆதாரம் உண்டா?
பெரியன்ஸ்:
//2000 பேயர் சபைகளுக்கு மேல் கிறிஸ்தவத்தில் பல விதமான மனித போதனைகளில் இருப்பதே இதற்கு சாட்சி!! //
இக்கூற்றுக்கும், மேலே நீங்கள் கூறின கூற்றுக்கும் என்ன சம்பந்தம் என்பது புரியவில்லை.
பெரியன்ஸ்:
//ஆனால் இதை உங்களை போன்றோர் மனித சிந்தனைகளை கொண்டு, அவருக்கு சித்தம் தான், ஆனால் நான் கிரியைகளினால் அல்லது இன்னும் பலவிதத்தில் அடுத்தவர்களோடு சிறந்தவனாக இருக்கும் போது, எனக்கு இருக்கும் அதே இரட்சிப்பு அவர்களுக்குமா என்று நினைக்கிறீர்கள்!!//
இதெல்லாம் உங்கள் கற்பனை சகோதரரே!
எனது பதிவுகளை நன்றாகப் படித்துப் பாருங்கள்; நீங்கள் கூறுவதுபோல் நான் எங்காவது பதித்துள்ளேனா என அலசிப் பாருங்கள்.
பெரியன்ஸ்:
//கிருபையை காட்டிலும் கிரியையின் மேல் நம்பிக்கையாக இருப்பவர் நீங்கள்!!//
இக்கூற்றும் உங்கள் கற்பனையே!
ஒரு விஷயத்தை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் சகோதரரே!
கிருபை என்பது எல்லார்மீதும் தானாகப் பலித்துவிடும். அதை நாம் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி. எல்லார்மீது கிருபை பலிப்பதால்தான் 1 கொரி. 15:22-ன்படி எல்லாரும் உயித்தெழுவார்கள்.
கிரியை விஷயத்தில் அதை நான் நம்பவுமில்லை, அதை நம்பும்படி போதிக்கவுமில்லை. ஆனால் அவனவன் கிரியைக்குத்தக்கதான பலனைத்தான் கிறிஸ்து தருவார் எனும் வசனத்தை நான் நம்புகிறேன். எனவே கிரியையின் முக்கியத்துவத்தை நான் அறிகிறேன், நான் அறிந்ததை மற்றவர்களிடமும் சொல்கிறேன்.
பெரியன்ஸ்:
//தேவன் நமக்கு சிந்தையை தந்திருக்கிறார், அது தேவனின் சித்தத்திற்கு மேல் அல்ல!! தேவன் சித்தம் மீறப்படுவது போல் தோன்றுவதே, அந்த செயலை தேவன் அனுமதிக்கிறார் என்றே அர்த்தம்!!//
அது என்ன மீறப்படுவதுபோல் தோற்றம்? மீறப்படுகிறது என்பதே அப்பட்டமான உண்மை. தேவசித்தத்தை மனிதன் மீறுவதால்தான், என் ஆவி என்றைக்கும் மனிதனுடன் போராடுவதில்லை என ஆதி. 6:3-ல் தேவன் சொன்னார்.
ஒரு காலத்தில் தேவனுங்கூட மனிதனோடு போராடியுள்ளார் என்றே வசனம் சொல்கிறது. ஆனாலும் மனிதன் தேவசொல்லுக்குக் கீழ்ப்படியாமல் எதிர்த்துநின்றதால் மனிதனுடன் போராடுவதில்லை என தீர்மானித்துள்ளார்.
//தேவன் மனிதனுக்கு என்று திட்டம் அல்லது சித்தம் வைத்திருக்கிறார், அதை பின்பற்றவோ, அதை பின்பற்றாமல் இருக்க செய்வதும் தேவனே!! விசுவாசத்தை ஈவாக தருபவரும் அவரே, வசனத்தை வைத்திருப்பவர்களை இடறச்செய்வதும் அவரே!! //
இதற்கெல்லாம் வசன ஆதாரம் இல்லை.
//கனமான பாத்திரமாகவோ, கனவீனனான பாத்திரமாக மாற்ற தேவனுக்கு அதிகாரம் இல்லை என்கிறீர்கள்!!//
இப்படி நான் ஒருபோதும் சொல்லவில்லை.
//ரோமர் 9:21 மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?//
இவ்வசனத்தின் கருத்துதான் என்ன? அதற்கும் நம் விவாதத்துக்கும் என்ன சம்பந்தம்?
ரோமர் 12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
இந்த பிரபஞ்சத்தின் ஒத்த வேஷம் என்றால் என்ன? தேவனின் கிருபையை நம்பாமல், கிரியை செய்து அந்த கிரியையின் பலனை எதிர்ப்பார்ப்பது!! மாறாக தேவனின் நன்மை, பிரியம் உள்ள சித்தம் என்னவென்றால்,
1 தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
தேவனுக்கு பிரியமும் நன்மையுமான சித்தமே எல்லாரையும் இரட்சித்து சத்தியத்தை அற்கிற அறிவை தருவதே, ஆனால் இதோடு ஒரு ஆனா போட்டு அவரின் சித்தம் இது அல்ல என்பது போல் போதிக்கிறார்கள் அநேகர், நீங்களும் தான்!! ஆக இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த கிரியைகளினால் அல்ல, மாறாக தேவனின் நன்மை பிரியம் உள்ள சித்தம் புரிந்துக்கொள்ள புதிதாகுங்கள் என்கிறது வசனம்!!
எபேசியர் 5:17 ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
அந்த சித்தம் எல்லாரையும் இரட்சிப்பதே என்று வேதம் தெளிவாக சொல்லியிருக்கிறது!!
//பெரியன்ஸ்: //யார் அறிய வேண்டும் யார் அறியாமல் இருப்பார்கள் என்பதை தேவன் தீர்மானிக்கிறார்!!// இக்கூற்றுக்கு வசன ஆதாரம் உண்டா?//
2 தேசலோனிக்கேயர் 2:12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
1 பேதுரு 2:8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.
//பெரியன்ஸ்: //2000 பேயர் சபைகளுக்கு மேல் கிறிஸ்தவத்தில் பல விதமான மனித போதனைகளில் இருப்பதே இதற்கு சாட்சி!! // இக்கூற்றுக்கும், மேலே நீங்கள் கூறின கூற்றுக்கும் என்ன சம்பந்தம் என்பது புரியவில்லை.//
அறியாமல் இருந்துக்கொண்டு நாங்களும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதை தேவன் அனுமதிக்கிறார் என்பதை தான் அங்கே சொல்லியிருக்கிறேன்!! 2000 சபைகள் வெவ்வேறு விசுவாசத்தை கொண்டு மனித கோட்பாடுகளை வைத்துக்கொண்டு இருப்பது தேவன் அனுமதிக்கிறார், அவர் எல்லாருக்கும் ஒரு மாஸ் கற்றுக்கொடுத்தல் வைத்திருக்கிறார், அது வரை அவர்கள் அந்த பொய்யிலேயே இருக்கட்டும் என்று விட்டு விட்டார்!! ஒரு சிறிய கூட்டத்திற்கு தன்னை யார் என்று வெளிப்படுத்துகிறார், விசுவாசத்தை தருகிறார், மற்றவர்கள் அதே வேதத்தை வாசித்தாலும் இடறலடைய அனுமதிப்பதும் அவரே!!
//பெரியன்ஸ்: //ஆனால் இதை உங்களை போன்றோர் மனித சிந்தனைகளை கொண்டு, அவருக்கு சித்தம் தான், ஆனால் நான் கிரியைகளினால் அல்லது இன்னும் பலவிதத்தில் அடுத்தவர்களோடு சிறந்தவனாக இருக்கும் போது, எனக்கு இருக்கும் அதே இரட்சிப்பு அவர்களுக்குமா என்று நினைக்கிறீர்கள்!!//
இதெல்லாம் உங்கள் கற்பனை சகோதரரே!
எனது பதிவுகளை நன்றாகப் படித்துப் பாருங்கள்; நீங்கள் கூறுவதுபோல் நான் எங்காவது பதித்துள்ளேனா என அலசிப் பாருங்கள்.//
வெளிப்படையாக எழுதினால் தான் என்று இல்லை, உங்களின் எழுத்து உங்கள் சிந்தையை தாங்கியிருக்கிறது, அதில் கிரியைகளுகு உள்ள முக்கியத்துவம் வெளிப்படுகிறதே!! உங்கள் கேள்விகள் கிருபையை பக்கத்தில் வைத்துவிட்டு கிரியையை முக்கியத்துவம் படுத்துவதாக தோன்றுகிறது, ஆகவே தான் அப்படி கேட்டேன்!! ஏன், அவருக்கு சித்தம் தான்......... ஆனால், என்று நீங்கள் எழுதியதே இல்லையா!!?
//ஆனால் அவனவன் கிரியைக்குத்தக்கதான பலனைத்தான் கிறிஸ்து தருவார் எனும் வசனத்தை நான் நம்புகிறேன். எனவே கிரியையின் முக்கியத்துவத்தை நான் அறிகிறேன், நான் அறிந்ததை மற்றவர்களிடமும் சொல்கிறேன்.//
இதை தான் என்னவென்று கேட்கிறேன்!! எந்த கிரியை குறித்து முக்கியத்துவத்தை தருகிறீர்கள் என்று தெளிவுப்படுத்துங்களேன்!!
//அது என்ன மீறப்படுவதுபோல் தோற்றம்? மீறப்படுகிறது என்பதே அப்பட்டமான உண்மை. //
மீறப்படுவதுபோல் தோற்றம் என்றால், அது தேவனின் சித்தம் அல்ல, மாறாக மனிதனின் சிந்தைகளை அனுமதிப்பதினால் அவரின் திட்டம் "ஃபெயில்"ஆவது போன்று தோன்றலாம்!! ஆனால் உண்மை என்னவென்றால் தேவன் இப்படி பட்ட பலவிதமான போதனைகளை அனுமதிக்கிறார், அவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஒரு காலம் வைத்திருக்கிறார்!!
ரோமர் 9:21 மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
ஒருவனுக்கு விசுவாசத்தை கொடுக்கவும் மற்றொருவனை இடறச்செய்யவும் அவருக்கு அதிகாரமில்லையா?? இடறலடைபவர்கள் நரகத்திற்கு போவார்கள், அல்லது "இரண்டாம் மரணத்திற்கு" போவார்கள் என்று சபைகள் சொல்லுவது போல் நான் சொல்லுவதில்லை, ஏனென்றால் தேவன் அவர்களை சற்று நேரமே கனவீனமான பாத்திரமாக வைத்திருக்கிறார்!! காலம் வரும் போது, கிறிஸ்துவின் உடன் சுதந்தவாலிகள் வெளிப்பட்டபின்பு அனைவரையும் சத்தியத்தில் நடத்துவதே அவர் சித்தம்!! இப்பொழுது அநீதி அக்கிரமம், கள்ள உபதேசங்கள், கள்ள போதனைகள் எல்லாம் நடக்கட்டும் என்று அனுமதித்தவர், பிசாசை கட்டி வைத்து அவரின் ராஜியத்தில் அனைவருக்கும் சத்தியத்தை தருவார்!! அப்பொழுது பூமியே தேவனை அறிகிற அறிவில் இருக்கும், தேவனின் சித்தத்தின்படி!!