இன்று ஊழியம் என்கிற பேரில், தீர்க்கதரிசனம் சொல்லுவது, அற்புதங்களை செய்வது, பேய்களை ஓட்டுவது, பிசாசுகளை துரத்துவது போன்ற காரியங்களில் ஈடுப்பட்டுக்கொண்டு இருக்கும் பலர் இந்த வசனங்களை கவணிக்கவில்லை போல், "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறாவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை; அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தீனாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றூ போங்கள் என்று அவர்களுக்கு சொல்லுவேன்" மத். 7:21 23. இன்னும் ஒரு காரியத்தை இவர்களை குறித்து தான் சொல்லியிருக்கிறார், "ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்" மத். 24:24.
கிறிஸ்தவர்களே, இப்படி தான் அற்புதங்களை மாத்திரமே நம்பி இருந்தீர்களென்றால், இது நமக்கு எச்சரிப்பு தரும் வசணம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். இப்படி அற்புதம் என்கிறா பெயரில் நடக்கும் காரியங்களினால் வஞ்சிக்கப்படாதீர்கள், நம் கர்த்தரே இந்த எச்சரிப்பை நமக்கு மேலே உள்ள வசனத்தின் மூலம் தந்திருக்கிறார்.