என்றால் என்ன? இன்று பிரசங்கிக்கப்படுவது போல், நாம் இழந்து போன சொத்து, சுகத்தை தேடிக்கொடுக்கும்படியாக இயேசு கிறிஸ்து வந்தாரா? இல்லை தற்காலீக வியாதிகளை சுகப்படுத்த இயேசு வந்தாரா?. அப்படி என்ன தான் மனிதன் இழந்து போனான்? எதிலிருந்து இரட்சிக்க இயேசு கிறிஸ்து வந்தார்? ஏன் அவரை மீட்பர் என்கிறோம்? எதிலிருந்து மீட்பு?
அன்பான கிறிஸ்தவர்களே, போலியான வார்த்தைகளினால் ஏமாந்து போகாதீர்கள். தேவகுமாரனான இயேசு கிறிஸ்து வந்ததின் நோக்கம் என்னவென்றால், என்றென்றும் இந்த பூமியில் வாழ்ந்து பெறுகும்படி ஆசீர்வதிக்கப்பட்ட ஆதாம் அந்த பாவத்தினால் இழந்து போனான், ஆகவே அவனுக்கு மரணம் வந்தது. அந்த மரணம் நேரடவே உடலில் வியாதிகள், சோர்வுகள் வந்தன. தற்காலிகமாக அந்த வியாதிகளோ, சோர்வுகளோ மாறிவிட்டாலும், மரணம் நிச்சயமாக சம்பவித்தே ஆகவேண்டும். ஏனென்றால் "பாவத்தின் சம்பளம் மரணம்" ரோம் 6:23. ஆக இழந்து போன அந்த ஜீவனை சாபத்தின் விளைவாக வந்த தண்டனையான மரணத்திலிருந்து மீட்டெடுக்கும் படியாக இயேசு கிறிஸ்து தன்னையே மீட்கும் பொருளாக செலுத்தினார், அதையும் அவரை விசுவாசிக்கும் மக்களுக்கு மாத்திரம் இல்லை, எல்லா மனிதர்களுக்காகவும் அவர் இதை செய்தார் (1 தீமோ 2:6). அதினால் தான் "ஆதாமிற்குள் எல்லோரும் மரிப்பது போல், கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்த்தெழுவார்கள்" (1 கொரி 15:22). இப்படியாக அவர் உலகத்தில் வந்த எந்த மனுஷனையும் மரணத்திலிருந்து மீட்டு எடுக்க வல்லவரானதால் அவரை மீட்பர் என்கிறோம். ஆக, இன்றைய வியாதிகள், இழப்புகள், துக்கங்கள், குறைகளுக்காக மாத்திரம் இயேசு கிறிஸ்துவை நாடாமல், வர இருக்கும் அந்த மேன்மையான ஜீவனிற்காகவே அவரை தேடுவோம். பவுல் எழுதியுள்ளப்படி, "இம்மக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்" 1 கொரி. 15:19
இந்த மாமிசத்துக்குரிய அற்ப தேவைகளான வீடு சொத்து சுகம் போஜனம் இவற்றுக்க்காககவே ஆண்டவரை தேடும் அனேக விசுவாசிகளால் நிறைந்துள்ளது இன்றைய கிறிஸ்த்தவம். ஆண்டவரின் வருகையை எதிர்ப்பார்ப்பதை விட ஆதாயம் வருமானத்தை எதிர்பார்த்து அநேகர் காத்திருக்கின்றனர்.
எல்லாவற்றையும் விட மேன்மையான ஒரு நித்திய பேரின்ப வாழ்க்கையை இந்த பூமியில் தரவே இயேசு தன் ஜீவனை கொடுத்தார்!
"எல்லாவற்றையும் விட மேன்மையான ஒரு நித்திய பேரின்ப வாழ்க்கையை இந்த பூமியில் தரவே இயேசு தன் ஜீவனை கொடுத்தார்!"
எவ்வுளவு பெரிய ஒரு சத்தியத்தை சொல்லி அசத்தியிருக்கிறீர்கள் சகோதரரே. இதை புரியாமல் தான் இன்று கிறிஸ்தவம் இருக்கிறது. இப்படி ஒரு மேன்மையான பூமிக்குறிய வாழ்க்கையை தேவன் வைத்திருக்கிறார் என்று தற்போதைய ஊழியர்களிடம் சொன்னால் அவர்கள் வையிற்றெருச்சல் அடைவார்கள். இப்பொழுது சுகம், இப்பொழுது சந்தோஷம், இப்பொழுது செழிப்பு, இப்பொழுது சமாதானம் என்று இப்பொழுதிற்காக வாழும்/ வாழவைக்கும் இந்த ஊழியர்கள் இம்மைக்காக மாத்திரமே இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்களாவர்கள். இவர்களுக்கு இப்புடி ஒரு மறுமை இருப்பதே தெரியாது. இது தான் உண்மை. இயேசு கிறிஸ்து வந்து எப்படி ஒரு சிறிய இஸ்ராயேல் கூட்டத்தாரை சொந்தமாக்கினாரோ, அப்படியே சபையும் ஒரு சிறிய கூட்டமாக தான் இருக்கும். மீதமான அனைவருக்கும் இந்த பூமியில் தான் நித்தியம். இதற்காகவே இந்த பூமியை தேவன் உருவேற்படுத்தினார் என்கிறது வேதம். நீங்க சொன்ன இந்த சத்தியத்திற்காக தேவன் நிச்சயமாகவே மகிமை பெறுவார், மாம்சீகமாக கோவை பெரேயன் டீம் சார்பாக உங்களை வாழ்த்துகிறோம். தொடர்ந்து சத்தியத்தின் ஆவி தாமே உங்களை இயேசு கிறிஸ்து போதித்த சத்தியங்களில் வழி நடத்தட்டும். மனிதர்களின் போதனை நம்மை நிச்சயமாக பரலோக கூட்டி செல்லாது.
chillsam wrote:மற்றபடி "நித்திய ஜீவன்" என்பது எழுத்தின்படி தற்போதைய உலகில் வாக்களிக்கப்படவில்லை;
சகோதரர் சில்சாம்,
ஆதாமின் பாவம் ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவரை மேற்க்கொள்ளுகிறது, அனால் கிறிஸ்த்துவின் கிருபை மட்டும் ஒருவர் அவரை ஏற்றுக்கொண்டால்தான் இரட்சிக்கப்படுவார்கள் என்று போதிக்கப்படுவது சரியா? அவர் எல்லோருக்க்காகவும் தானே இரத்தம் சிந்தினார். ஆதாமுக்குள் எல்லோரும் மரிப்பதுபோல கிறிஸ்த்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுகிரோமல்லவா?
இப்பொழுது இயேசுவின் வாக்குதத்தப்படி "என் பிதாவிடத்தில் அனேக வாசஸ்தலங்கள் உண்டு அவற்றி ஒற்றை உங்களுக்கு ஆயத்தப்படுத்த போகிறேன் என்பதுதான்" இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர் சித்தப்படி ஜீவிக்கும் சிறு மந்தை அவர் ஆயத்தம் பண்ணப்போகிற வாசச்தலத்துக்குள் பிரவேசிக்கும் என்பது உண்மை!
ஆனால் இன்னொரு கூட்டமும் இருக்கிறது!
அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
பூமியின் ராஜ்யங்களின் தொடர்ச்சியாகத்தனே இந்த தேவராஜ்யம் பற்றிய தரிசனம் சொல்லப்படுகிறது இது பூமியிலா அல்லது வேறேங்கிலுமா?
மேலும் இஸ்ரவேலை குறித்து என்றென்றைக்குமான நித்ய தரிசனம்
நான் என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் பிதாக்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார்.
நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்தஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்.
இது பூமியில அல்லது வேறேங்கிலுமா?
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது
இதன் அடிபடையில் பழைய வானமும் பூமியும் ஒளிந்து, எல்லாம் புதியதாக புதுப்பிக்கப்படும் என்றுதான் வசனங்கள் குறிப்பிடுகின்றன என்பது எனது கருத்து.
நீங்கள் பதிந்த இந்த கருத்து இன்றைய கிறிஸ்தவ மண்டலம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அவர்களுக்கு இந்த பூமியின் இன்னும் வாழ்வா என்பதே ஒரு புதிய கருத்து என்று நினைப்பார்கள். "சாந்த குணம் உள்ளவர்கள், பூமியை சுதந்தரித்து கொள்வார்கள்" மத். 5:5, "சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், இந்த பூமி தேவனை அறிகிற அறிவால் நிறம்பியிருக்கும்" ஏசா. 11:9 போன்றவை எல்லாம் இப்பொழுதே நடந்து வருகிறது என்பார்கள். இதை வாசித்த பிறகு கூட இன்னும் இந்த பூமியில் ஒரு ஜீவன் இருக்கிறது என்பதை அவர்களால் ஜீரனித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பரலோகம் மற்றும் இல்லாத ஒரு "நரகம்". "உம்முடைய ராஜியம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் இந்த பூமியிலும் செய்யப்படுவதாக" என்பதை கூட விசுவாசிக்க மறுக்கும் இன்றைய கிறிஸ்தவ மண்டலத்திடம் என்ன சொல்லுவது. தேவன் இந்த பூமில் அவர் ஆட்சி வரும்படியாக விரும்புகிறார் ஆனால் இன்றைய கிறிஸ்தவர்களோ, அதை இல்லை என்று நிருபிக்க விரும்புகிறார்கள். சரி வசனங்கள் நிறைவேறும் போது நம்புவார்கள்.
தங்கள் கருத்துக்களின் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!
அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார்.
"என்றென்றைக்கும்" என்று தேவன் பூமியை பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளதால், இந்த பூமியே ஒரு நித்ய இடமாக மாற்றப்படலாம் என்பது எனது கருத்து!