நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சமயத்தில் அவர் பேசிய ஏழு வார்த்தைகள் எல்லா பெரிய வெள்ளிக்கிழமைகளிலும் தவறாமல் அநேகமாக எல்லா சபைகளிலும் தியானிக்கப்படுகிறது. இதில் லுக்கா 23:43ல் காணப்படும் “இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்” என்கிற இந்த வசனத்தை இப்போது சற்றே ஆராய்ந்து பார்க்கலாம்.
ஏன் இதை ஆராயவேண்டும் என்றால், இயேசுவின் இந்த கூற்று பின் வரும் வசனங்களுக்கு முரண்பாடாகத் தோன்றுகிறது. லூக். 24:46ல் “எழுதியிருக்கிறபடி கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்-தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது” என்றும் யோவா 20:17ல் “இயேசு அவனள நோக்கி, என்னைத்தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை.. என்றார்” என்றும், யோவா 3:13ல், பரலோகத்திலிருந்திறங்கின… மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை என்றும் இருக்கிறது. இந்த வசனங்களில் இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில்தான் உயிரோடெழுந்தார் என்றும் அவர் பரலோகத்திற்கோ அல்லது பரதீசிற்கோ அன்றே ஏறவில்லை என்றும் அங்கு யாருமே இல்லை என்றும் அறிகிறோம். ஆனால் கள்ளனிடம் ஏன் அப்படி சொன்னார்? இதற்கு விடை நாம் வேதாகமத்தில் தான் தேட வேண்டும்.
வேதாகமம் எழுதப்பட்ட கலத்தில் குறுயீடுகளான கமா (,) (comma) போன்றவை கிடையாது. இவை பிற்காலத்தில் மொழி-பெயர்ப்பாளர்களால் சேர்க்கப்பட்டவையாகும்.
ஆங்கிலத்தில் லூக். 23:43ல் “And he said unto him, Verily I say unto thee, To-day shalt thou be with me in Paradise” என்றுள்ளது (KJV).
இதில் To-dayக்கு பின்னர் வரவேண்டிய கமா (,) மொழிப்பெயர்ப்பின் போது அதற்கு முன்னர் போடப்பட்டுள்ளது. ஆகவே, மெய்யாகவே இன்றைக்குச் சொல்லுகிறேன், நீ என்னோடுகூட பரதீசிலிருப்பாய். “And he said unto him, Verily I say unto thee to-day, shalth thou be with me in Paradise” என்றே இருக்க வேண்டும். இந்தச் சிறிய விஷயத்தை புரிந்து கொள்வோமானால் நாம் மேற்கண்ட குழப்பத்திலிருந்து மீளமுடியும். மேலும் லூக். 23:42ல், இயேசுவை நோக்கி: “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்ஜியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்” என்றுள்ளது. (திரும்ப) வரும்போது என்று கள்ளன் தெளிவாகத்தான் வேண்டியுள்ளான், அப்படியிருக்க ‘இன்றைக்கே’ என்று கர்த்தர் கூரியிருப்பாரா?
பரதீசு” அல்லது ஆங்கிலத்தில் “Paradise” என்ற இந்த வார்த்தை புதிய ஏற்பாடு எழுதப்பட்ட மூல பாஷையான கிரேக்க மொழி வார்த்தையாக இல்லாமல், அது ஒரு பாரசீக வார்த்தையாகும். அதன் அர்த்தம் “தோட்டம்” என்பதாகும். ஆண்டவருடைய இரண்டாம் வருகையில் ஆயிரவருட அரசாட்சியில் இந்த பூமியானது முந்தைய ஏதேன் தோட்டத்துக்கு ஒப்பான சீருக்கு மாறி முழு பூமியுமே எல்லா சாபத்துக்கும் நீங்கலாகி ஒரு நேர்த்தியான தோட்டமாக இருக்கும்.அந்த சமயத்தில் பிரேதக்குழியிலுள்ள அனைவரும் எழுப்பப்டும்போது (யோவா 5:28) இந்தக் கள்ளனும் எழுப்பட்டு ஆண்டவருடன் இருப்பான் என்று குறிக்கவே ஆண்டவர் அவ்வாறு கூறினார்.
மேலும் 1 கொரி 15:4 படி, இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில்தான் எழுப்பட்டர். அப்படியிருக்க :இன்றைக்கு” என்று அவர் கூறியிருக்க வாய்ப்பில்லை.
“பரதீசு” என்பதை பரலோகம் என்றும் கொள்ள முடியாது, ஏனேனில், யோவான் 3:13ன் படி பரலோகத்துக்கு ஏறினவர் ஒருவனுமில்லை என்று வேதம் கூறுகிறது. ஆகவே பரதீசு என்பது இனிமேல் வரப்போகிற பூமியின் நிலையைக் குறிப்பதால் தற்பொழுதோ அல்லது இயேசு கிறிஸ்துவின் காலத்திலோ அது எங்கும் இல்லை. அவ்வாறு இந்த பூமி கிறிஸ்துவின் இராஜியத்தில் ஏதேன் தோட்டதுக்கு ஒப்பாக ஒரு “பரதீசாக” மாற்றப்படும்போது, ‘நல்ல கள்ளன்’ மாத்திரம் அல்ல அந்த மற்ற கள்ளனும், ரோம ராணுவ வீரர்களும், பரிசேயர், சதுசேயர், வேதபாரகர்களும் கூட ‘பரதீசில்’ இருப்பார்கள். அவர்களுடைய தகுதியினால் அல்ல, இயேசு கிறிஸ்து அவர்களுக்காகவும் சிந்திய இரத்தத்தினால் இது ஆகும். மேலும் அந்த விசுவாசித்த கள்ளன் நிச்சயமாக பரலோகத்திற்கு ஆயத்தப்படவில்லை. ஜெயங்கொள்ளுகிற, இந்த பூமியில் பாடு அனுபவித்து பரலோகத்துக்கு கிறிஸ்துவின் சபைக்கு பாத்திரவானாகும் வாய்ப்பு அவனுக்கு கிடையாது. ஆனாலும் அவன் சிலுவையில் ஆண்டவரை அறிந்துகொண்டு விசுவசித்ததனால் மற்ற கள்ளனைப்பார்க்கிலும் அவருடைய ராஜியத்தில் விசேஷித்தவனாகக் காணப்படுவான்.
ஆகையால், வரும் பெரியவெள்ளியிலாவது இந்த உண்மை விவரம் அறியாமல் பிரசங்கிப்பவர்கள், தங்கள் ‘சொந்தத்திலிருந்து’ பிரசங்கித்தால் கேட்கிறவர்கள் ஜாக்கிறதையாக இருந்து, பிரசங்கிக்கிறவர்கள் சொல்லுவதையெல்லாம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் அப். 17:11ல் உள்ள பெரேயா பட்டணத்தார் போன்று காரியங்கள் இப்படியிருக்கிறதா?? என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து உறுதிப்படுத்திக் ள்ளும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
லூக் 23:43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இந்த வசனம் மூல பாஷையிலிருந்து எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இதோ இப்படி தான் மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்,
And said to-him THE JESUS AMEN I AM sayING to YOU toDAY WITH ME YOU-SHALL-BE IN THE PARK
பரதீசுக்கு மிகவும் சரியாக பூங்கா என்று மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது!! பரதீசு என்பது ஒரு பாரசீக வார்த்தை!! இதற்கு அர்த்தம் பரலோகம் அல்லது தேவன் வாசம் செய்யும் இடமோ என்று இல்லை, மாறாக பரதீசு என்பது உலகத்தின் தொடக்கம் முதல் மனித வாசம் செய்யும் பூங்கா (ஏதேன் தோட்டம்) என்று தான் உருவனது!! இதை தான் (பரதீசு) மனிதர்கள் வாசம் செய்ய போகும் இனி வரும் உலகத்திலும் தேவன் வைக்க போகிறார்!1
முதலாவது மேலே உள்ள வசனத்தை பார்ப்போம்,
இயேசு கிறிஸ்து அந்த கள்ளனிடம் சொல்லுகிறார், நீ என்னுடன் பூங்காவில் இருப்பாய் என்று!! இதை புரிந்துக்கொள்ள எந்த கஷ்டமும் இல்லை!! பிரச்சனை என்னவென்றால், அந்த பரதீசுக்குள் கள்ளன் கிறிஸ்து இதை சொன்ன அன்றே (கிறிஸ்து சொன்ன நாளிலே) சென்றானா அல்லது என்று என்பது தான் கேள்வி?? இரண்டையுமே பார்க்கலாம்!!
கிறிஸ்தவர்கள் இந்த வசனத்தை புரிந்துவைத்திருக்கிக்றபடி பார்த்தோமென்றால்,
1. மரித்த அன்றே கிறிஸ்துவும் பரதீசிக்கு போயிருக்க வேண்டும்!! 2. மரித்தவுடன் கள்ளனும் பரதீசிக்கு போயிருக்க வேண்டும்!! 3. கிறிஸ்து பரலோகத்தில் இல்லாமல் பரதீசிலி தான் இருக்க வேண்டும்!!
இன்னும் பல அபத்தமான கருத்துக்கள் தான் தோன்றும்,
ஆனால் வசனத்தை வேதத்தின்படி புரிந்துக்கொண்டால் சத்தியம் விளங்கும்!!
1. மரித்த அன்று மாத்திரம் இல்லை, மரித்து மூன்று நாட்கள் கிறிஸ்து கல்லறையில் தான் இருந்தார் என்பது வேதத்தில் உண்மை!!
மத்தேயு 16:21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
மத்தேயு 17:23 அவர்கள் அவரைக்கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
மத்தேயு 20:19 அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
லூக்கா 9:22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
லூக்கா 18:33 அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
I கொரிந்தியர் 15:4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
வசனங்களெல்லாம் இப்படி அவர் மூன்று நாள் மரித்திருக்க வேண்டும் என்று சொல்லுகிறது, ஆனால் கிறிஸ்தவர்களோ விசுவசிப்பது அவர் மரித்த அன்றே பரதீசுக்கு கள்ளனை கூட்டி சென்றார் என்று!!
2. கிறிஸ்து மூன்று நாட்கள் வரை மரித்த நிலையில் இருந்தார், அவரை தேவனே எழுப்பினார், கிறிஸ்து சுயமாக மரித்தோரிலிருந்து எழும்பவில்லை,
அப்போஸ்தலர் 2:27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; இந்த வசனத்தின் விளக்கம் அடுத்து வரும் வசனமே!!
அப்போஸ்தலர் 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
கிறிஸ்து தேவனால் தான் எழுப்பப்பட்டார்!! இதற்கும் பல வசனங்கள் இருக்கிறது!! இன்று கிறிஸ்துவாக வந்தவர் பிதா தான் என்று சொல்லுபவர்களும் இந்த வசனங்களை தியானிக்கலாம்!!
அப்போஸ்தலர் 2:24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
அப்போஸ்தலர் 2:32 இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
அப்போஸ்தலர் 3:26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
அப்போஸ்தலர் 13:30 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
அப்போஸ்தலர் 13:33 இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.
அப்போஸ்தலர் 13:34 இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.
அப்போஸ்தலர் 2:24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
இன்னும் நிறைய வசனம் இருக்கிறது!!
அடுத்து கள்ளன் அன்றே பரதீசுக்கு போகும் வாய்ப்பு இருக்கிறதா? இல்லை என்கிறது வேதம்!!
அப்போஸ்தலர் 2:29. சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. 34. தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே.
தாவீது மரணம் அடைந்து எத்துனையோ வருடங்கள் ஆகியும் இன்னும் எழுந்து போகாதவராக கல்லறையில் அழிந்திருந்தார், அப்படியிருக்க கள்ளன் மட்டும் இந்த விதியை மீறி "பரதீசி"ற்கு செல்ல முடிந்திருக்குமா!!
அப்படி என்றால் கிறிஸ்து உண்மையில் அந்த கள்ளனிடத்தில் அப்படி என்ன சொல்லியிருந்திருக்க வேண்டும், அதை ஏன் கிறிஸ்தவர்கள் இப்படி புரிந்திருந்திருக்கிறார்கள்!!??
லூக் 23:43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இந்த வசனத்தின் சரியான மொழிப்பெயர்ப்பு இப்படி இருந்திருந்தால் சரியாக இருந்திருக்குமே: இயேசு அவனை நோக்கி, "என்னுடன் நீ பரதீசிலிருப்பாய் என்று இன்றே உனக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்" என்றார்!! இப்படி இருந்திருந்தால் வேதத்தின் மற்ற வசனங்களுக்கு இது பொருத்தமாக இருந்திருக்கும்!! அதையும் என்னவென்று தொடரும் பதிவுகளில் பார்ப்போம்
//இயேசு ஆவியிலே உயிர்த்து பரதீசுக்கு போனார் பிறகு பூமியின் தாழ்விடங்களில் (Hade) இறங்கினார் என்பதற்கு வசனங்கள் இருக்கின்றன
ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். (I பேதுரு 3:18)
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; (அப்போஸ்தலர் 2:27)//
ஜான் என்கிற போதகர் கொடுத்திருக்கும் இந்த இரண்டு வசனங்களுமே, இயேசு கிறிஸ்து ஆவியில் உயிர்த்து பரதீசுக்கு போனதாக சொல்லியிருக்கிறது போல்!! நீங்கள் கோடிட்டு அவர் ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார் என்று எழுதினாலும் அது நடந்தது மூன்றாம் நாளிலே என்பதை நினைவில் வைத்திருங்கள்!! ஹேடஸ் என்கிற வார்த்தையை தாங்கள் ஏதோ எழுதுவது போல் ஹேட் என்று முடித்திருக்கிறீர்கள்!! ஹேடஸ் என்றால் கல்லறை அவ்வளவே!!
நீங்கள் காட்டியிருக்கும் வசனங்கள் அவர் உயிர்த்தெழுந்தார் என்று தான் இருக்கிறதே தவிர, அவர் பரதீசுக்கு போனார் என்று இல்லை!! அவர் மூன்றாம் நாளில் தான் உயிர்த்தெழுந்தார் என்று அத்துனை வசனம் கொடுத்தும்........!!
//இவர்களுக்கு ஒன்று ஒத்து வரவில்லை என்றால் வேதத்தை மாற்றி எழுதி விடுவார்கள் பிறகு மற்ற எல்லாரையும் (அவர்களுடைய) வேதத்தின் படி நடக்கவில்லை என்று குற்றம் சாட்டுவார்கள்.//
எங்களுக்கு வேதம் ஒத்து வருகிறது, ஆகவே தான் வசனத்தை சரியான கேள்விக்கு சரியான வசனத்தை காண்பிக்கிறோம்!! நாங்கள் எந்த வேதத்தையும் மாற்றவில்லை, உங்களை போன்று, பரிசுத்த வேதாகமம் ஒன்றே பிழையற்ற வேதாகமம் என்றும் நம்பவில்லை!! நாங்கள் கத்தோலிக்கர்களின் மொழிப்பெயர்ப்பையும் பயன்ப்படுத்துகிறோம் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்!! வேதத்திற்கு ஒத்து வராத திரித்துவத்தை நீங்கள் பிரசங்கிக்கும் வரை, எந்த வசனத்தையும் அதில் பொறுத்தி தான் பார்ப்பீர்கள்!! //ஒரு Quiz , கிழே உள்ள வசனம் பரிசேய வேதத்தில் எங்கே உள்ளது?//
அனாதியிலே தேவன் இருந்தார் அவர் அனாதிக்கும் (?), ஆதிக்கும் நடுவில்(?) வார்த்தையை உண்டாக்கினார் அந்த வார்த்தை ஒரு தேவனாய் இருந்தது அதற்க்கு அப்புறம் உள்ள சகலமும் (?) அந்த ஒரு தேவனால் உண்டானது. ஆதிக்குப்பிறகு உண்டான எல்லாம் ஒரு அவராலே உண்டாயிற்று.//
திரித்துவர்களின் பார்வையும் விக்கிரகங்களின் சபையோடு தொடர்புடையோர்களின் பார்வை மங்கலாக தான் இருக்கும்!!