இன்று அநேகர் தங்களையே போதகர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். மெய்ப்பராக இருந்துக் கொண்டு தங்களை போதகர் என்று தப்பிதமாக அழைத்துக்கொள்கிறார்கள். இப்படி பட்ட போதகர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் நாம் வேதத்தை சார்ந்து இருக்க வேண்டும். மெய்ப்பர் (Pastor) என்பதை இவர்கள் போதகர் (Teacher) என்று போட்டு பெருமை பாராட்டுகிறார்கள். விழித்திருந்து வேதத்தை தியானிப்பதும் அந்த பிரதான போதகரான இயேசு கிறிஸ்து சொல்லியதை பின் பற்றுவதும் சிறந்ததாகும்."என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக" யாக் 3:1
These so called teachers actually don't want to know the real meaning of Pastor and that's why who ever is a Pastor they like themselves to be called as Teachers. "Not many of you should presume to be teachers" thus writes James in James 3:1
Let us discern between a Pastor and a Teacher and this can be done only through the scriptures, the Bible.
தங்களையே தேவ ஊழியர்கள் என்று அறிவித்துக் கொள்பவர்கள் தேவ ஊழியர்களா? ஊழியம், ஊழியர் இப்படி என்றால் என்ன என்றே தெரியாமல் தான் இன்று பலர் தங்களை தேவ ஊழியர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். பாஸ்டர் என்றால் மெய்ப்பர் என்கிற ஒரு சின்ன தெளிவுக்கூட இவர்களிடம் இல்லையே மாறாக தங்களையே போதகர் (Teacher) என்று சொல்லிக்கொள்வதில் பெருமை பாராட்டுகிறார்கள்.
"பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்." எபே. 4:12,13. என்கிற இந்த வசனங்களை வைத்துக்கொண்டு தான் இன்ரு தேவன் இவர்களை இப்படி பட்ட பதவிகளை கொடுத்து அழைத்திருக்கிறார் என்கிறார்கள் இந்த self-proclaimed ஊழியர்கள். இந்த வசனத்தை நிதானித்து வாசித்து பாருங்களேன். அன்று இந்த ஊழியர்கள் மூலமாக தேவனின் வார்த்தைகள் எழுதப்படும் வரை, இவர்களின் பிரத்தியேகமான ஊழியம் தேவைப்பட்டது, ஆகவே இவர்கள் ஏற்படுத்தப்பட்டார்கள். ஆனால் இன்றோ சபை வளர்ந்து, கடுகு மரம் (!!) போல் ஆகி விட்டது. இன்று அப்போஸ்தலர்கள் இல்லை என்றால், மற்றவர்கள் மாத்திரம் இந்த பதவிகளை வகிப்பதில் என்ன நியாயம்? இப்படி தங்களையே தேவனின் ஊழியக்காரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதே நாம் நம்மை காத்துக்கொள்வதாகும். பேதுரு எழுதியது போலே, "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." 1 பேது 2:9, இது தான் நம் ஊழியம். இதை செய்பவர்களே அவரின் சித்தத்தின் படி உள்ள ஊழியர்கள். இதை எல்லாம் விட்டு விட்டு சில மாய ஜால வித்தைகள், தள்ளி விடுதல், கைகளை வைக்குதல், அற்புதம் செய்கிறோம் என்கிற பெயரில் சபைகள் நடத்துவது தேவனுக்கு உகந்த ஊழியம் என்று நினைப்பவர்கள் தான் இன்று பலர்.
அவரின் வேதம் நம்மை எச்சரித்தாலும், மீண்டும் மீண்டும் இப்படி பட்ட ஊழியர்களிடம் தங்களின் நேரத்தை, பணத்தை இழப்பது தான் இன்று விசுவாசிகளுக்கு பிடித்தமான காரியமாக இருக்கிறது. கான்கிற மனிதனிடத்தில் அன்பு செலுத்தாத இந்த ஊழியர்கள் கானாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவார்கள் என்றே தெரியவில்லை. ஊழியர் ஆசிர்வதிக்கப்பட்டு மாடி மேல் மாடி கட்டி உல்லாச பயணங்கள் மேற்கொண்டு ஊழியம் (!!) செய்கிறார், பாவம் விசுவாசிகள் தாங்கள் இருந்த இடத்திலே இருந்துக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தும் இந்த ஊழியர்களை புரியாமல் இருக்கிறார்கள். இப்படி பட்ட ஐசுவரியம் கிடைக்க இவர்கள் தாங்கள் பார்த்து வந்து சொற்ப வருமானம் வரும் வேலையை விட்டு வந்து அதையே ஏதோ பெரிய தியாகம் செய்தது போல் டமாரம் அடிப்பவர்களாக இருக்கிறார்கள். அதே வேலையில் இருந்திருந்தால், இன்று இருக்கும் ஐசுவரியம் நிச்சயமாகவே அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஏன் இவர்களை ஆசிர்வதிக்கும் தேவன், விசுவாசிகளை ஆசிர்வதிப்பதில்லையா? ஒரு சில விசுவாசிகள் ஆசிர்வதிக்கப்பட்டதையே இவர்கள் தங்களிடம் செலுத்தும் காணிக்கை மூலமாகவே ஆசிர்வதிக்கப்பட்டார்கள் என்று பல வருடங்கள் விலம்பரம் செய்து வருகிறதையும் பார்க்க முடியும்.
இந்த பதிவை வாசிக்கும் பிரியமானவர்களே, போலியான ஊழியர்கள், கள்ள தீர்க்கதரிசிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேதம் நமக்கு போதனை தருகிறது. முதலை கண்ணீர்க்கும், வெளிவேஷத்தையும் கண்டு ஏமாந்து போக வேண்டாம் என்று இந்த கிறிஸ்தவனின் தாழ்மையான வேண்டுகோள்.