இந்த வசனத்தை தியானித்து பாருங்களேன், " கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்." 2 யோவான் 1:9. ஆக் கிறிஸ்துவின் உபதேசங்களை பின்பற்றினாலே நீங்கள் தேவனுடையவராக இருக்கிறீர்கள். பழைய ஏற்பாடு முழுவதும் கிரியைகளினால் உண்டானது, ஆனால் கிறிஸ்துவின் விசுவாசத்தினால் உண்டானது, இதையே தான் யூதர்களாக இருந்து பின்பு அப்போஸ்தலரகளாக மாறியவர்களும் அவர்கள் எழுதிய உபதேசங்களும் போதிக்கின்றன.
யூதர்களுக்கு என்று கொடுக்கப்பட்டதை யூதர்கள் பின்பற்றட்டும். ஒருவன் கிறிஸ்துவிற்கு வந்து விட்டால் சகலமும் புதிதாகிறது என்று வசனம் உண்டே (2 கொரி. 5:7). அவர்களிடம் இயேசு கிறிஸ்து போதித்த அன்பின் பிரமானம் இல்லையே. அப்போ கட்டளைகளை பின் பற்றி நீங்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பின் பிரமானத்தை எப்படி பின்பற்றுவீர்கள். ஆபிரகாமை பாருங்கள், அவர் கட்டளைகளின் கிரியைகளினால் அல்ல மாறாக விசுவாசத்தினால் நீதிமான் ஆனார் என்கிறது வேதம் (வாசியுங்கள் ரோமர் 4ம் அதிகாரம்). மேலும் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களில் கட்டளைகள் முழுவதும் அடங்கி விடுகிறதே (ரோம் 3:31). விசுவாசம் வந்த பிறகு கிரியைகள் நமக்கு தேவை இல்லையே.
இந்த வசனத்தை தியானித்து பாருங்களேன், " கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்." 2 யோவான் 1:9. ஆக் கிறிஸ்துவின் உபதேசங்களை பின்பற்றினாலே நீங்கள் தேவனுடையவராக இருக்கிறீர்கள்.////
சகோதரர் அவர்களே நான் குறிப்பிட்ட வசனம் இயேசுவின் வாயில் இருந்து புறப்பட்ட இயேசுவின் உபதேசம்தான் அப்படி இருக்க நீங்கள் சொல்லும் இந்த வசனம் மீறி நடப்பவர்களையே நியாயம் தீர்ப்பதாய் உள்ளது!
eras wrote:
யூதர்களுக்கு என்று கொடுக்கப்பட்டதை யூதர்கள் பின்பற்றட்டும். ஒருவன் கிறிஸ்துவிற்கு வந்து விட்டால் சகலமும் புதிதாகிறது என்று வசனம் உண்டே (2 கொரி. 5:7).////
வேதத்தில் எது எது யூதருக்கு எது எது எல்லோருக்கும் என்று பிரித்து பார்க்க முடியுமா?
சகலமும் புதிதானாலும் நாம் பழைய மாமிசத்தில் அல்லவா இருக்கிறோம்!
eras wrote:
///ஆபிரகாமை பாருங்கள், அவர் கட்டளைகளின் கிரியைகளினால் அல்ல மாறாக விசுவாசத்தினால் நீதிமான் ஆனார் என்கிறது வேதம் (வாசியுங்கள் ரோமர் 4ம் அதிகாரம்). மேலும் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களில் கட்டளைகள் முழுவதும் அடங்கி விடுகிறதே (ரோம் 3:31). விசுவாசம் வந்த பிறகு கிரியைகள் நமக்கு தேவை இல்லையே.///
"கிரியை இல்லாத விசுவாசம் செத்தது" என்றும் வேதம் நமக்கு போதிக்கவில்லையா?
நான் தேவனை விசுவாசிக்கிறேன் என்பதை என் கிரியை மூலமேயல்லாமல் எப்படி நிரூபிக்க முடியும்? ஆப்ரகாம் தன் மகனை பலியிட சென்ற கிரியயினாலல்லவா மேன்மை பெற்றான்.
தேவன் சொன்ன கர்ப்பனைகளை கைகொல்லாமல் நான் அவர்மேல் விசுவாசமாய் இருக்கிறேன் என்று சொல்வது தகப்பன் சொல்பேச்சை கேளாமல் "நான் என் தகப்பனை மிகவும் மதிக்கிறேன்" என்று சொல்வதுபோல் ஆகும் என்றே நான் கருதுகிறேன்.
You can download WOGs Unipad Tamil from WOGs UniPad Tamil - www.wordofgod.in - www.christiansmobile.com. If you are not reaching here just type the same above in the address bar and you will be led into google search page and you will find the link for the same in that page. All the best!
And the apostle Paul adds that we have only Faith, hope and love and the greatest amongst it is Love (1 Corinth 13:13) Kovaibereans
N.B. Why don't you introduce yourself "Soulbuddy" in our interesting Welcome Introduction part.
பின்பற்ற சொல்லுவது எப்படி நியாயந்தீர்ப்பதாகும் சகோதரரே?
"வேதத்தில் எது எது யூதருக்கு எது எது எல்லோருக்கும் என்று பிரித்து பார்க்க முடியுமா? சகலமும் புதிதானாலும் நாம் பழைய மாமிசத்தில் அல்லவா இருக்கிறோம்!"
வசனத்தை கவனித்து வாசித்தோமென்றால் எது யூதர்களுக்கு என்று தெரியும். ரோம் 3:1,2 சொல்லுவது போல், யூதனுக்கே, நியாயப்பிரமானம், வாக்குதத்தங்கள், மாம்சத்தின் ஆசிர்வாதங்கள் போன்றவைகள் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் கிறிஸ்துவிற்குள் வந்தவர்கள் மாத்திரமே சுதந்தரவாளிகளாக ஆகிறார்கள் (ரோம் 4:14). மாம்சம் பழையது தான் சகோதரரே, ஆனால் நமக்கு கொடுக்கப்பட்ட அந்த மேன்மையான விசுவாசம் புதிது தானே. "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற் கொள்ளமாட்டாது" (ரோம் 6:14)
"ஆப்ரகாம் தன் மகனை பலியிட சென்ற கிரியயினாலல்லவா மேன்மை பெற்றான்"
சட்டமோ, நியாயப்பிரமாணமோ கிடைக்கும் முன்பு தான் ஆபிரகாமின் கிரியைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. மேலும் பலியிட சென்ற கிரியை மேன்மை அல்ல மாறாக தேவன் அவனுக்கு தந்த வாக்குதத்தின் மீது உள்ள விசுவாசத்தினால் அந்த கிரியை வெளிப்பட்டது. ஆக அந்த விசுவாசம் தான் மேன்மையானது ஆகவே அவர் விசுவாசத்தின் தந்தை. அப்படி என்ன வாக்குதத்தம் தேவன் கொடுத்தார் என்றால், ஆபிரகாமின் சந்ததியை தேவன் ஆசீர்வதிப்பேன் என்று சொல்லியிருந்தாரே, அதே தேவன் இப்பொழுது அவர் சந்ததியான ஈசாக்கை பலியிட சொல்லுகிறாரே, என்று ஆபிரகாம் யோசித்திருந்தாலும், தேவன் தந்த அந்த வாக்குதத்தின் மேல் வைத்திருந்த விசுவாசமே அவன் கிரியைக்கு காரணம். ஒரு வேலை தேவன் உங்களிடத்தில் இப்படி ஒரு வாக்குதத்தம் கொடுத்தால் நீங்கள் அதை கிரியையினால் வெளிப்படுத்தலாம். ஆனால் நம் விசுவாசமோ நாம் தேவனின் வார்த்தையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே.
"நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் செய்யலாமா கூடாதே" என்றும் தொடர்ந்து எழுதுகிறார்.
மேலும் அவரே "பாவம் எது என்று அறியும் அறிவு நியாய பிரமாணத்தினால் வருகிறது" என்றும் எழுதியுள்ளார்
இப்பொழுது பாவம் செய்யக்கூடாது என்றால் பாவம் என்னவென்று சொல்லும் நியாயபிரமாணத்தை மீறக்கூடாது என்றுதானே பொருளாகிறது?
பாவம் எதுவென்று சொல்லும் நியாயபிரமாணம் கைகொள்ள தேவையில்லை ஆனால் பாவம் செய்யக்கூடாது என்று சொல்லுவது எவ்விதத்திலும் சரியான வாக்கியம் அல்ல.
பவுல் நியாய பிரமாணம் என்று குறிப்பிடுவது பலியிடுதல் மற்றும் தேவாலயத்துக்கு அடுத்த பிரமாணங்களை குறிப்பிடுகிரதேயன்றி பத்து கற்ப்பனை போன்ற தேவனின் கட்டளைகளை அல்ல என்பதே எனது கருத்து.
ஏனெனில் கொலை செய்வது பாவம் என்று சொல்வது ப்த்து கற்பனைத்தான் அது எக்காலத்திலும் பாவம்தானே? இயேசு பாவத்துக்காக மரித்ததினால் கொலை பாவம் இல்லை என்று ஆகிவிடுமா?
இயேசு பத்து கர்ப்பனைகளை விட கடினமான கட்டளைகளையே கொடுத்தாரேயன்றி எதையும் அவர் தேவையில்லை என்று சொல்லவில்லை என்பதயும் நினைப்பூட்டுகிறேன்.
தெளிவான வசனங்கள் பல உண்டு. கலா. 3:24,25ஐ வாசித்து தியானித்து பாருங்கள். மேலும் பவுல் "உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு குருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்" என்கிறார் கலா. 5:14ல். நாம் எதை எல்லாம் பின் பற்றலாம் என்பதில் பல கருத்துகள் இருந்தாலும், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த அதிகாரத்தின் பேரில் அப்போஸ்தலர்கள் எழுதிய அனைத்தையும் நாம் பின்பற்ற கடமைபட்டிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தெளிவான வசனங்கள் பல உண்டு. கலா. 3:24,25ஐ வாசித்து தியானித்து பாருங்கள். மேலும் பவுல் "உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு குருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்" என்கிறார் கலா. 5:14ல்.
நியாயபிரமாணம் எதையுமே கைகொள்ள வேண்டிய தேவையில்லை என்றால் பவுல் "தகப்பனையும் தாயையும் கனம்பண்ண வேண்டும்" என்றும் "விபச்சாரன், வேசிகள்லன்" போன்றவர் தேவனுடைய ராஜ்யக்த்தை சுதந்தரிக்க முடியாது என்று ஏன் கூறவேண்டும்?
நியாயபிரமாணம் முடிந்துவிட்டது தேவையில்லை என்றபிறகு திரும்ப ஏன் இதயெல்லாம் இங்கு கொண்டுவருகிறார்? இதெல்லாம் பவுலின் பிரமாணமா?
நியாயபிரமாணம் முடிந்துவிட்டது என்று பவுல் குறிப்பிட்டது பலியிடுதல் மற்றும் தேவாலயத்துக்கடுத்த பணிகளே தவிர தேவனின் கட்டளைகளை அல்ல. என்பதே எனது கருத்து.
சரி இப்பொழுது உன்னில் நீ அன்புகூருவதுபோல பிறரில் அன்புகூறு என்ற ஒரே கட்டளையில் நியாயபிரமாணம் முழுவதும் அடங்குமா என்று பார்க்கலாம்
"ஒருவர் மிகப்பெரிய நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தறுவாயில் உள்ளார். அவருக்கு உடனடியாக கொஞ்சம் பணம் தேவை. நம்மிடம் கேட்கிறார். ஆனால் நம்மிடம் அவ்வளவு பணம் இல்லை. நாம் அவரை நம்மை போல நேசித்து இரக்கப்பட்டு அலுவலக பணத்தை தெரியாமல் எடுத்து உதவி செய்தால் களவு செய்யாதிருப்பாயாக என்ற நியாயபிரமாணத்தை மீறிவிடுவோம.
"ஓய்வு நாளில் ஒருவர் உங்களை ஒரு வேலைக்கு அழைக்கிறார். அந்த வேலை அந்நாளில் முடியாவிட்டால் அவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இந்த சூழ்நிலையில் நம்மை போல அவரை நேசித்து அவருக்கு இழப்பு வராமல் இருக்க வேலைக்கு போவோமேன்றால் "ஓய்வு நாளில் வேலை செய்யக்கூடாது" என்ற நியாயபிராமாண கட்டளையை மீறிவிடுவோம.
பிறன் மனைவியின் மீது ஒருவன் தகாத ஆசை வைத்து நீ இல்லை என்றால் நான் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினால் அவனை தன்னை போல நேசித்து அவனுக்கு இரக்கபட்டு அவன் ஆசையை பூர்த்தி செய்ய முற்படும்போது விபச்சாரம் செய்யாதே என்ற வார்த்தை மீறப்படும்.
இப்படிஇருக்க, "உன்னை நேசிப்பதுபோல் பிறரை நேசி" என்ற கட்டளையில் நியாயபிரமாணம் முழுவதும் அடங்கும் என்ற கருத்து முரண்படுகிறதே! .
நியாயப்பிரமானம் யூதர்களுக்கு கொடுக்கப்பட்டது அவர்களுக்கு அவர்களின் நிலையை (பாவ நிலையை) உணர்த்தவே. அந்த நியாயப்பிரமானத்தினால் பரலோக ஜீவன் இல்லை, அது அவர்களுக்கு வாக்கு கொடுக்கப்படவும் இல்லை. "என்னையன்றி ஒருவனும் பிதாவிடம் வரான்" என்றார் நம் மீட்பர். இதற்கு அர்த்தம் புருகிறதா? இயேசு கிறிஸ்துவின் பிரமாணமான அன்பின் பிரமாணத்தை பின் பற்றிவோமானால், அவரின் சபையாக பரலோகம் போக ஒரு வாய்ப்பு இருக்கிறது, இன்று பெரும்பாளுமான கிறிஸ்தவர்கள் சொல்லுவது போல், பூமியில் சபையில் இருந்தால் பரலோகம் போய் விடலாம் என்கிற மாயையில் அவர்களும் அவர்களை வழிநடத்தி வரும் போதகர்களும் இருக்கிறார்கள்.
பவுல் இப்படி சொன்னது எல்லாம் சரியே. ஏனென்றால், பெற்றோரை கணம் பண்ணாதவன் நிச்சயமாக கிறிஸ்துவின் அன்பில் இல்லை என்பது நிச்சயம். அப்படியே மற்றவைகளும். நீங்கள் எதிர்ப்பார்ப்பது போல், பத்து கற்பணைகளை பின் பற்ற வேண்டும் என்றால் ஒய்வு நாளை நீங்கள் சனிக்கிழமை தான் அனுசரிக்கனும் (இதற்கு மட்டும் ஏதாவது விதிவிலக்கு உண்டோ!?). இப்பொழுது யாரிடத்தில் ஆடு மாடு மிருக ஜீவன் இருக்கிறது இச்சிக்கிறதற்கு?
சகோதரரே, ஆக இந்த கற்பனைகளோ, மீதம் உள்ள கட்டளைகளோ, யூதர்களின் நிலையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களின் பாவ நிலையில் இருந்து விடுவிக்கவே இவைகள் கொடுக்கப்பட்டதே அன்றி, இதை கிறிஸ்தவர்களும் அப்படியே பின் பற்றும்படியாக இல்லை. இயேசு கிறிஸ்து வந்து எல்லாவற்றையும் அவரின் பலியின் மூலமாக "நிறைவு" (முடித்து) வைத்து விட்டார்.
நியாயப்பிரமானம் யூதர்களுக்கு கொடுக்கப்பட்டது அவர்களுக்கு அவர்களின் நிலையை (பாவ நிலையை) உணர்த்தவே. அந்த நியாயப்பிரமானத்தினால் பரலோக ஜீவன் இல்லை, அது அவர்களுக்கு வாக்கு கொடுக்கப்படவும் இல்லை. "என்னையன்றி ஒருவனும் பிதாவிடம் வரான்" என்றார் நம் மீட்பர்.
ஒருவன் என்னதான் கட்டளைகளையும் கற்பனைகளையும் கடைப்பிடித்து நியயாயமாக நடந்தாலும் இயேசுவின் இரத்தத்தினாலன்றி அவன் பிதாவினிடத்தில் பிரவேசிக்க முடியாது என்ற கருத்தை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டபிறகு பொய், விபச்சாரம், திருட்டு போன்ற பாவங்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, அது முடிந்துபோயிற்று என்ற கருத்து சரியாத்னதா?
பாவ சேற்றில் புரண்டு அழுக்காக கிடந்த நம்மை தூக்கி சுத்தமாக கழுவி பரிசுத்தவானாக மாற்றினார் ஆனால் நான் மீண்டும் அதே சேற்றில் புரளாமல் இருக்கவேண்டியது நம்மேல் விழுந்த கடமை அல்லவா? ஆம் என்றால் பாவம் செய்ய கூடாது அல்லவா? அந்த பாவம் எது என்று போதிப்பது பத்து கற்பனைகளே! அவைகள் வேண்டாம் என்றால் எப்படி பாவமின்றி ஒருவன் ஜீவிக்க முடியும்?
bereans wrote: பவுல் இப்படி சொன்னது எல்லாம் சரியே. ஏனென்றால், பெற்றோரை கணம் பண்ணாதவன் நிச்சயமாக கிறிஸ்துவின் அன்பில் இல்லை என்பது நிச்சயம். அப்படியே மற்றவைகளும். நீங்கள் எதிர்ப்பார்ப்பது போல், பத்து கற்பணைகளை பின் பற்ற வேண்டும் என்றால் ஒய்வு நாளை நீங்கள் சனிக்கிழமை தான் அனுசரிக்கனும் (இதற்கு மட்டும் ஏதாவது விதிவிலக்கு உண்டோ!?).//
தேவனுடைய வார்த்தை எங்காவது சனிக்கிழமை என்று கூறுகிறதா? உலகில் ஒருபுறம் சனியாக இருக்கும்போது இன்னொருபுறம் ஞாயிறுவாக இருக்கும் இந்நிலையில் எது உண்மையான்ச சனி என்று கண்டுபிடிப்பது கடினம் எனவேதான் தேவன்.
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்;
அதாவது எந்த ஆறுநாள் வேண்டுமானாலும் வேலை செய்யலாம் ஆனால் எலாவதுனால் ஓய்வுநாள் என்பதுதான் கட்டளை அதை நாங்கள் கைகொள்கிறோம். கிழமைகள் என்பது மனிதனால் உருவானவை.
bereans wrote: இப்பொழுது யாரிடத்தில் ஆடு மாடு மிருக ஜீவன் இருக்கிறது இச்சிக்கிறதற்கு?
ஆடுமாடுகள் கிராமத்தில்தான் இருக்கின்றன ஆனால் எல்லா இடங்களிலும் அடுத்தவன் மனைவிகள் இருக்கின்றனர் இச்சிப்பதற்கு!
bereans wrote: சகோதரரே, ஆக இந்த கற்பனைகளோ, மீதம் உள்ள கட்டளைகளோ, யூதர்களின் நிலையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களின் பாவ நிலையில் இருந்து விடுவிக்கவே இவைகள் கொடுக்கப்பட்டதே அன்றி, இதை கிறிஸ்தவர்களும் அப்படியே பின் பற்றும்படியாக இல்லை. இயேசு கிறிஸ்து வந்து எல்லாவற்றையும் அவரின் பலியின் மூலமாக "நிறைவு" (முடித்து) வைத்து விட்டார்.
தயவு செய்து திரும்ப திரும்ப நியாயபிரமாணம் யூதர்களுக்கு மட்டும்தான் என்று சொல்லவேண்டாம். யூதர்கள் கொலை செய்யக்கூடாது என்றால் நாமும் கொலை செய்ய கூடாது. அவர்கள் மட்டும்தான் பாவிகள் அல்ல எல்லோரும் பாவிகள்தான் எல்லோருக்கும் ஒரே நியாயம்தான். இயேசு எங்காவது நான் இதை யூதர்களுக்கு மட்டும்தான் இதை சொல்கிறேன் என்று கூறியுள்ளாரா? அல்லது நான் மரித்து உயிர்த்த பிறகு யாரும் நியாயபிரமாணம் கைகொள்ளவேண்டிய தேவையில்ல என்று போதித்துல்லாரா இவை எல்லாம் நமது மன நிர்ணயமே என்றே நான் கருதுகிறேன்
"பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம்" என்றுதான் வேதம் போதிக்கிறது?
யூதனுக்கு தான் கொடுக்கப்பட்டது என்று மீண்டும் மீண்டும் எழுதாதீர்கள் என்கிறீர்களே, வாசியுங்கள் ரோமர் 3ம் அதிகாரம் குறிப்பாக 1,2 வசனங்கள். நியாயப்பிரமானம் தேவன் யாருக்கு யார் கொடுத்தார் என்று உள்ளது. தியானித்து பதில் எழுதுங்கள். நன்றி.
யூதனுக்கு தான் கொடுக்கப்பட்டது என்று மீண்டும் மீண்டும் எழுதாதீர்கள் என்கிறீர்களே, வாசியுங்கள் ரோமர் 3ம் அதிகாரம் குறிப்பாக 1,2 வசனங்கள். நியாயப்பிரமானம் தேவன் யாருக்கு யார் கொடுத்தார் என்று உள்ளது. தியானித்து பதில் எழுதுங்கள். நன்றி.
இதில் தேவனுடைய வாக்கியங்கள் யூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றுதான் வார்த்தை சொல்கிறதேயன்றி யூதர்களுக்காக ஒப்படைக்கப்பட்டது என்று எப்படி பொருள் கொள்ளமுடியும்?
அப்படியானால்
புதிய வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதிய யோவான், மற்றும் நிரூபங்களை எழுதிய பவுல் எல்லோருமே யூதர்கள்தானே! ஆக மொத்தம் வேதம் முழுவதுமே யூதர்களிடம் தானே ஒப்படைக்கப்பட்டது! இதில் சிலது நமக்கு சிலது யூதர்களுக்கு என்று யார் பிரித்து சொன்னது.
சகோதரரே, இதில் அனேக உண்மைகள் அடங்கியுள்ளது ஆனால் யாரும் அதைப்பற்றி அறிய விரும்புவது இல்லை. இப்படி ஒரு டாபபிக்கை எடுத்தாலே உடனே எதிர்ப்பும் மறுப்பும் வருகிறது ஏனெனில் அவர்களால் பாவத்தை விட்டு முழுவதும் வெளியில் வர முடியவில்லை.
பாவத்துக்காக இயேசு மரித்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டு துணிந்து பாவம் செய்யும், சாத்தனால் வஞ்சிக்கப்பட்ட கூட்டத்துக்கு "பொய் சொல்லாதே" "பிறன் மனைவிய இச்சிக்காதே" போன்ற வார்த்த்தைகள் மிகவும் கசப்பை தருகிறது. எனவே அவர்கள் அதைப்பற்றி பேசவிரும்புவது இல்லை என்றே நான் கருதுகிறேன்!
சரி வேதாகமம் எந்த ஒரு காரியமானாலும் இரண்டுபேர் சாட்சியிநிமித்தமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று உரைக்கிறது அதுபோல் கர்த்தரின் வசனம் ஓன்று ஜோடில்லாமல் இராது வேதத்தில் உள்ள எல்லா காரியங்களுக்கும் ஒத்தகருத்து வேறொருவரால் கூறப்பட்டிருப்பதை பார்க்க முடியும் அப்படியிருக்க
பவுல் அவர்கள் சொல்லும்
விசுவாசித்த எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். (ரோமர் 10:4) என்ற கருத்து வேறு எந்த அப்போஸ்தலராலும் சொல்லப்படவில்லையே ஏன்?
இவற்றின் முதல் இரண்டும் இயேசுவின் மரணத்தின் மூலம் நிறைவு பெற்றது ஆனால் அடுத்த இரண்டும் என்றும் மாறாது மாற்றவும் முடியாது! ஏனெனில் திருடாதே என்றால் எல்லா காலத்திலும் திருடுவது பாவம்தான். திருட்டு செய்தவனை நீதிமன்றமே விட்டு வைப்பதிலேயே! அப்படியிருக்க அதை கைகொள்ளவேண்டிய தேவையில்லை என்ற கருத்து வேதத்துக்கு புறம்பானது! அதுபோல்தான் எல்லா கட்டளைகளும் என்பதே எனது கருத்து!
-- Edited by RAAJ on Friday 13th of March 2009 11:49:09 PM
ராஜ் அவர்கள் சொல்வதே சரியென நினைக்கிறேன்; நான் சற்று எளிமையாக சொல்கிறேன்; முன்பு கட்டளைகளை மனிதன் சுமந்தான்,வருத்தப்பட்டான்; இப்போது (இயேசுகிறிஸ்துவின் கிருபாவரத்தினால்..) அந்த மனிதனை கட்டளைகள் சுமக்கிறது.பாவச்சுமை நீங்கி இளைப்பாறுகிறான்.
பத்து கட்டளைகள் கொடுத்தவுடன் மனிதன் பாவம் செய்வதை நிறுத்தி விட்டானா?! இந்த கட்டளைகள், நியாயப்பிரமானங்கள் கொடுக்கப்பட்டதெல்லாம் தன்னை சோதித்து பார்த்து திருத்திக்கொள்ளவே. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலான அன்பின் கட்டளை வந்த பின்பு இவை எல்லாம் அந்த அன்பிற்குள் அடங்கி போய் விட்டது. தேவைனை அன்பு செய்வது, அயலானை அன்பு செய்வது. கட்டளைகள், நியாயப்பிரமானங்களை பின் பற்றுவது கிரியையினால் மாத்திரமே சாத்தியமாக இருந்தது. இப்பொழுது கிரியை போய் விசுவாசம் வந்தது.
"மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்; இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை; இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது; அது இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசாமே இல்லை.; எல்லோரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்" (ரோம். 3:19-24).
இப்படியிருக்க சகோதரர்களே, நியாயப்பிரமாணம் என்பது ஒரு கால கட்டத்தில் ஒரு இன மக்களுக்கு கொடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிரமானமோ யூதர்கள் தொடங்கி புறஜாதிகள் வரைக்கும் சொந்தமாகும். இது தான் வித்தியாசம். இன்னும் நியாயப்பிரமாணத்தை தான் பின் பற்றவேண்டும் என்றால் முதலில் விருத்தசேதனம் கொண்ட ஒரு யூதனாக மாறவேண்டியது தான். நாம் நியாயப்பிரமாணம் பின் பற்றுவதால் பாவம் அற்றவர்களாக இருக்கிறோம் என்று ஒரு நினைப்பிருந்தால் அதையும் விட்டு விட வேண்டியது தான், ஏனென்றால் இந்த நியாயப்பிரமாணத்தை பின் பற்றுவதால் நீதிமான் ஆக முடியாது என்பது தான் மேலே உள்ள வசனத்தின் சுருக்கம். மேலும், இந்த நியாயப்பிரமாணம் யூதர்களுக்கு தான் என்பதில் வேதத்தில் பழைய ஏற்பாட்டில் தெளிவாக பல இடங்களில் இருக்கிறது.
மனசாட்சி யுகம்: ஆதாம் முதல் நோவா வரை. தேவன் மனிதர்களை மனசாட்சியின் படி வாழ அனுமதித்த காலம். முதல் மனிதன் ஆதாம் மாத்திரம் தேவனின் நேரடியான கட்டளையை மீறினவனாக நடந்தான். அவன் ஏதேனை விட்டு வந்த பிறகு நோவா காலம் முழுவதும் தேவன் அவர்களை நண்மை தீமை என்கிற அறிவின் படியான மனசாட்சியின் படி வாழ அனுமதித்தார்.
யூத யுகம்: முற்பிதாக்காளின் காலம்: ஆபிரகாம், ஈசாக், யாக்கோப்: தேவனிடம் இருந்து நேரடியாக வாக்குதத்தமும் ஆவீர்வாதங்களும் பெற்று நடந்தவர்கள். சட்ட யுகம் அல்லது காலம்: நியாயப்பிரமாணம், வக்குத்தத்தங்கள், சட்டங்கள் மோசே மூலமாக தேவன் தந்து அவரின் மக்களான யூத ஜனங்களை நடத்திய காலம். இதன் பின், நியாயாதிபதிகள், இராஜாக்கள், தீர்க்கதரிசிகள்.
யூத யுகம் முடியும் போது தொடங்கியது சுவிசேஷ யுகம்: முதலில் அழைக்கப்பட்டவர்கள் யூதர்கள் அதன் பின் புறஜாதிமக்களிடம் சென்றது சுவிசேஷம். சுவிசேஷத்தின் நோக்கம் உலக மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவது இல்லை (இன்று பெரும்பாலுமான ஊழியர்கள் இதை தான் பிரதானமாக நினைத்துக்கொண்டு சொந்த அறிவில் இயங்கிறார்கள்) மாறாக உலகத்திலிருந்து வேறு பிறிக்கப்பட்ட ஒரு சிறிய கூட்டம் கிறிஸ்துவோடு ஆளுகை செய்யப்போவதற்காக ஏற்பட்ட ஒரு யுகம் தான் சுவிசேஷ யுகம், சுவிசேஷத்தின் நோக்கம் இதுவே.
இனி வரும் தேவனின் இராஜியம்: 1000 வருட அரசாட்சியில் நடக்கும் நியாயத்தீர்ப்பும், நீதியை கற்று கொடுப்பதுதற்கான யுகம். அதன் பின்பு பூமியில் ஒரு நித்திய ஜீவன்.
இது தான் வேதாகமத்தின் சாராம்ஷம். முறன்படுகிறாவர்கள் வாதாடலாம். நன்றி.