Dear friends, You are all welcome to post on this subject for why God created man and what is man's destiny. But friends please put forth your views only from the scriptures, the Holy Bible of any version.அன்புள்ள தள நண்பர்களே தேவன் மனிதனை படைத்த மேலான நோக்கமும் திட்டமும் தான் என்ன என்று இந்த பகுதியில் உங்கள் பதிவுகளை பதியுங்களே! ஆனால் நண்பர்களே, வேதத்தை மாத்திரம் சாட்சியாக வையுங்கள், அது எந்த மொழிப்பெயர்ப்பாக இருந்தாலும் சரி.
இங்கு "தேவன்" மனிதனை சிருஷ்டித்ததாகும் அவர்களை ஆணும் பெண்ணுமாகவே சிருஷ்டித்ததாகவும் வசனம் சொல்கிறது.
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். (ஆதி 2: 7)
இங்கு "தேவனாகிய கர்த்தர்" மண்ணினால் மனிதனை உருவாக்கியதாகவும், பிறகு அவன் உடம்பில் இருந்து எலும்பை எடுத்து மனுஷியை உருவாக்கியதாகவும் வசனம் சொல்கிறது.
தேவன் எது ஒன்றையும் ஒரே நேரத்தில் நேர்த்தியாக செய்ய வல்லவர்! அப்படியிருக்க இப்படி மனிதன் படைப்பை பற்றி இரண்டு வேறு வரு அத்யாயத்தில் வேறு வேறு வித வசனங்கள் வர காரணம் என்ன?
சிருஷ்டிக்கப்படுவதும், படைக்கப்படுவதற்கும் என்ன வித்தியாசம் என்றால், தூங்குவதற்கும், உறங்குவதற்கும் உள்ள வித்தியாசமே. மற்ற படைப்புகள் எல்லாவற்றையும் அவர் தன் வாயின் வார்த்தையினால் வர செய்தார், ஆனால் மனிதனையோ தன் சாயலலில் படைத்தார். மற்ற எல்லாம் அவர் சொன்ன மாத்திரத்தில் தோன்றின. ஆனால் மனிதனை படைத்து (சிருஷ்டித்து) அவனை ஜீவ ஆத்துமாவாக மாற்றியதை தான் ஆதி. 2:7ல் எழுதப்பட்டது. தேவனாகிய கர்த்தர் என்றவுடன் அவர் வேறு யாரோ என்று இல்லை. தேவன் தானே மனிதனை படைத்து அவனை காக்கிறவராக இருப்பதினால் அவர் கர்த்தர் ஆகிறார். எபிரேய மொழியில் பெரும்பாலும் கவிதை பானியில் தான் எழுதியுள்ளது. ஆகவே தான் இப்படி வார்த்தைகள். இந்த வார்த்தைகளை வைத்து நாம் குலம்பவேண்டிய அவசியம் இல்லை. நமக்கு தேவை மனிதன் எப்படி படைக்கப்பட்டான் என்றும் அவன் எப்படி தேவ சாயலை கொண்டிருக்கிறான் என்றும், பூமி எப்படி மனிதன் என்றென்றும் வாழும்படியாக உருவேறுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறியவதே. ஆதாம் படைக்கப்பட்ட போது அவன் தேவன் சாயலை கொண்டிருந்தான் என்றால், அவனே ஆனுமாகவும் பெண்ணுமாகவும் படைக்கப்பட்டிருந்தான், அவனிலிருந்து தான் ஸ்திரியானவளை பிரித்து எடுத்து தேவன் ஏவாளை சிருஷ்டித்தார் என்கிறது வேதம்.
தேவன் என்பவர் ஒரு மாபெரும் இஞ்சினியர் போலவும், அவரின் குமாரானான இயேசு கிறிஸ்து அதை செய்து முடிக்கும் வேலையாளாக இருக்கிறார். "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல்உண்டாகவில்லை" யோவான் 1:3. "அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது." கொலோ. 1:15,16.
ஆதியாகமம் முதல் அதிகாரம் முழுவதும் தேவனின் படைப்பின் வரிசையை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. வேதம் மனிதனை குறித்தான ஒரு புத்தகம் என்கிறபடியால், தேவ சாயலில் படைக்கப்பட்ட மனிதனின் படைப்பின் முறையை இரண்டாம் அதிகாரத்தில் கான்கிறோம். இதினால் இரு வேறு முறை மனிதன் படைக்கப்பட்டன் என்பதில்லை.
Dear Br,
Genesis first chapter deals with the order of creation of God and since man was created in God's image, the process of creation of man is explained in Chapter 2.
சகோதரர்களே நான் இப்படி சொல்வதற்கு பல காரணங்கள் உள்ளது! சரி எனது கருத்தை பின்னர் விவாதிப்போம்.
இப்பொழுது தேவன் மண்ணினால் மனிதனை மண்ணால் படைக்க காரணம் என்ன? எத்தனை முறை அடித்தாலும் வலி தெரியாத ஒரு ரப்பர் போல படைத்திருக்கலாமே?
மனிதனை ஏன் படைக்க வேண்டும்? பிறகு அவனை சாத்தன் இருக்கும் இடத்தில் வைத்து சோதிக்க வேண்டும்? அவன் பாவம் செய்த பிறகு அதற்க்காக ஒருவர் சித்தரவதை அனுபவித்து மரிக்க வேண்டும்?
அதுவும் இயேசு "உலக தோற்றத்துக்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி" என்று சொல்லப்படுவதால் உலகம் தோன்றும் முன்னே மனிதன் பாவம் செய்வான் என்று தேவனுக்கு தெரியுமா? தெரிந்தும் படைத்தாரா? பிறகு இயேசுவை அனுப்பி பாவத்துக்காக மரிக்க வைத்தாரா? படைக்கும் போதே மனிதனை பாவத்தை OVERCOME பண்ணும் அளவுக்கு ஆண்டவரால் படைக்க முடியவில்லையா?
அன்புச் சகோதரர் ராஜ் அவர்களே, சரீர உணர்வு என்பது மனிதன் உட்பட அனைத்து உயிர்களுக்கும் மிக அவசியமானது. உங்கள் கையை ஒருவர் வெட்டும்போது நீங்கள் ரப்பர் மாதிரி இருந்துவிட்டால், சில நிமிடங்களில் தங்கள் கையை நீங்கள் இழந்துவிடுவீர்களே? உங்கள் கையில் வலி உணர்வு இருந்தால்தானே உங்கள் கையை விடுவிக்க நீங்கள் முயலமுடியும்? நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கையில் உங்கள் கழுத்தை யாராவது அறுக்கும்போது ரப்பர் மாதிரி உணர்வின்றி நீங்கள் இருந்தால், உங்கள் உயிரையல்லவா நீங்கள் இழக்க நேரிடும்? எனவே அனைத்து உயிர்களுக்கும் வலி உணர்வு கண்டிப்பாகத் தேவை.
மனிதன் பலுகிப் பெருகி பூமியை நிரப்பவும் அதிலுள்ள சகலத்தையும் ஆண்டுகொண்டு நித்திய நித்தியமாய் பூமியில் அவனும் அவன் சந்ததிகளும் வாழவேண்டும் என்பதுதான் மனிதனைக் குறித்த தேவனுடைய திட்டம். ஆகையால்தான் மனிதனை பூமியில் வாழும் வண்ணம் அவனைப்படைத்தார். அவனுக்கு வெளிச்சம், காற்று, தண்ணீர், ஆகாரம் என்று இருந்தால்தான் அவனால் வாழ முடியும்.