We at kovaibereans welcome all christians inrespective of denominations to come and introduce themselves, explore and share deep scriptural knowledge. We welcome you all in the mighty name of our Lord and Saviour Jesus Christ. Thank you. கோவைபெரேயர்களான நாங்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் சபை பாகு பாடின்றி தங்களை அறிமுகப் படுத்த வரவேற்கிறோம். நம் கர்த்தரும் ஆண்டவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வர்வேற்கிறோம். வாருங்கள் உங்கள் வேத ஞானத்தை பகிர்ந்துக்கொள்ளுங்கள். நன்றி
இத்தளத்தினுள் ஓர் உறுப்பினராக நான் இணைவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
இத்தளத்தில் பதிக்கப்பட்டுள்ள பல விஷயங்களை மேலோட்டமாக ஒருமுறை பார்த்தேன். அனைத்து விஷயங்களும் மிக பயனுள்ளவைகளாகவும் தற்காலத்திற்கு அவசியமுள்ளதாகவும் உள்ளன.
இத்தளத்தை உருவாக்கச் செய்த தேவனைத் துதிக்கிறேன். தளத்தை உருவாக்கிய சகோதரர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன். இத்தளம் பலருக்குப் பயனுள்ளதாக விளங்க ஜெபிக்கிறேன்/வாழ்த்துகிறேன்.
என்னைப் பற்றி சில வரிகள்:
சிண்டிகேட் வங்கியில் 20 வருடங்கள் பணியாற்றி, 2001-ல் விருப்ப ஓய்வு பெற்ற நான், சுமார் 6 வருடங்களாக ஒரு மாதாந்திர பத்திரிகை மூலம் தேவனுக்குப் பணிசெய்கிறேன். பத்திரிகையின் பெயர்: பூரண சற்குணராகுங்கள். சில மாதங்களாக இணையதள மூலமாகவும் தேவனுக்குப் பணிசெய்கிறேன். எனது இணையதள முகவரி:
இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் அன்பின் வாழ்த்துக்களுடன் சகோ ஞான பிரகாசம் அவர்களின் வரவை பதிவு செய்கிறேன். தளத்தை பற்றின கருத்துகளுக்கு நன்றி. உண்மையான சுவிசேஷத்தை (வேறு சுவிசேஷங்கள் பல இருக்க) கொண்டு செல்ல முயற்சிக்கிறோம். தொடர்ந்து ஆதரவு தாருங்கள். தவறாக இருந்தால் கேட்கவும் தயங்காதீர்கள். எனக்க என்ன என்று தவிர்த்து விடாதீர்கள். தேவன் எல்லாவற்றையும் ஏற்ற காலத்தில் நேர்த்தியாக செய்பவராக இருக்கிறார். நாம் எவ்வுளவு தான் முயன்றாலும் "பிதா ஒருவனை இழுக்காவிட்டால் அவன் கிறிஸ்துவிடம் வர முடியாது" என்பதில் ஒரு மாபெரும் சத்தியம் இருப்பதை நம்புகிறேன்.
தங்களின் பதிவுகளை எதிர்பார்க்கிறோம். புதிதான தலைப்புகளை நீங்களே ஆரம்பிக்கலாம்.