ராஜ் எழுதுகிறார்: "எபிரெயர் 12:29 நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே."
நிச்சயமாகவே பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார். ஆனால் அதன் அர்த்தம் தான் என்ன? அவர் தமது பிள்ளைகளை சிட்சித்து திருத்துகிற ஒரு தகப்பனாக இருப்பது தான் அப்படி சொல்ல பட்டிருக்கிறது. இதுவும் தேவனின் அன்பையே வெளிப்படுத்துகிறது. மற்றபடி அவர் ஏதோ கையில் நெருப்பை யார் மேல் போட்டு சுட்டு எரிக்கலாம் என்றெல்லாம் சித்தரிக்கப்படும் தேவன் அல்ல. அவர் அன்பாகவே இருக்கிறார்.
ராஜ் எழுதுகிறார்: "எபிரெயர் 12:29 நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே."
நிச்சயமாகவே பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார். ஆனால் அதன் அர்த்தம் தான் என்ன? அவர் தமது பிள்ளைகளை சிட்சித்து திருத்துகிற ஒரு தகப்பனாக இருப்பது தான் அப்படி சொல்ல பட்டிருக்கிறது. இதுவும் தேவனின் அன்பையே வெளிப்படுத்துகிறது. மற்றபடி அவர் ஏதோ கையில் நெருப்பை யார் மேல் போட்டு சுட்டு எரிக்கலாம் என்றெல்லாம் சித்தரிக்கப்படும் தேவன் அல்ல. அவர் அன்பாகவே இருக்கிறார்.
பட்சிப்பதர்க்கும் சிட்சிப்பதர்க்கும் வேறுபாடு இல்லயா சகோதரரே?
அக்கினி என்பது ஒன்றுதான்! ஆனால் அதனுள் போடப்படுள் சிலபொருட்கள் பட்சிக்கப்ப்டும் சில பொருட்கள் சிட்சிக்கப்படும்.
பொன்னை அக்கினியினுள் போட்டால் அது சிட்சிக்கப்பட்டு புது பொருளாக மாறும் ஆனால் வைக்கோலை அக்கினியில் போட்டால் அது பட்சிக்கப்பட்டு சாம்பலாக போய்விடும்.
அதுபோல் தேவன் தன்னை அறிந்துகொண்ட தனது பிள்ளைகளுக்கு சிட்சிக்கிற ஒரு தகப்பன் ஆனால் பாவிகளையோ பட்சிக்கிற அக்கினி.
சங்கீதம் 21:9 உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும். அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும். ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களை பட்சிக்கும்;
சரி அக்கினி என்றால் பட்சித்துப்போடும், சாம்பாலாக்கி போடும் என்று எல்லாம் புத்திசாலியாக பேசிவிட்டு, அதே அக்கினியிலே என்றென்றைக்கும் வேதனைப்படுவார்கள் என்று எல்லாம் வேறு நம்புகிறீர்களே அது எப்படி?
சகோ.soulsolution அவர்களே, 'பாவி' யல்லாத ஒரு நபரை உங்களால் காண்பிக்க முடியுமா? உங்களையும் சேர்த்துதான்? காண்பிக்க முடியாதெனில் பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
1 யோவான் 3:9 அவரில் (இயேசுவில்) நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.
சகோ.soulsolution அவர்களே, 'பாவி' யல்லாத ஒரு நபரை உங்களால் காண்பிக்க முடியவில்லையெனில், பவுல், பேதுரு, கொர்னேலியு, Kovai Bereans Team, நீங்கள், நான் உட்பட யாரும் இயேசுவைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. உங்களையும் என்னையும் விடுங்கள், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட பவுல், பேதுரு போன்றோர் இயேசுவை அறியாமல் போனது எப்படி? இயேசுவை அறியாத Kovai Bereans Team, Truth Seekers எனும் இத்தளத்தின் மூலம் உண்மையை அறிவது எப்படி?
முதலில் நாம் இயேசுவை அறிவோம், அதன்பின் மற்றதைப் பார்ப்போம்.
இயேசுவை நாம் எவ்வாறு அறியமுடியும்?
1 யோவான் 2:3-6 (இயேசுவின்) கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்
தேவனால் பிறத்தல் என்றால் என்ன, தேவனை அறிதல் என்றால் என்ன, விசுவாசம் என்றால் என்ன, பாவஞ்செய்யாதவன் யார் என்பது பற்றி பின்வரும் வசனங்கள் கூறுவதையும் படியுங்கள்.
1 யோவான் 4:7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
1 யோவான் 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
1 யோவான் 5:1-3 இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான். நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம். நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
யாக்கோபு 2:14-17,26 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
இவ்வசனங்களுக்கு நான் விளக்கம் தரப்போவதில்லை; ஏனெனில், நீங்கள் விதித்த நிபந்தனைப்படி, வசனங்களுக்கு விளக்கம் சொல்லும் தகுதி எனக்கு இல்லை (உங்களைப் பொறுத்தவரை). மேற்கூறிய வசனங்களைப் படித்துப் பார்த்து, பாவியல்லாத ஒரு நபரைக் காண்பிக்க முடியுமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
ஆனால் என்னாலோ, உங்களாலோ, சகோ.ராஜ் அவர்களாலோ பாவியல்லாத ஒரு நபரைக் காண்பிக்க முடியவில்லையெனில் பாவியல்லாத நபர் யாருமே இல்லை என்றாகிவிடாது. பாவியல்லாத நபர் யாருமே இல்லையெனில், மேலே சொன்ன வசனங்கள் யாவும் வீணாகிவிடும்.
ஒருவேளை நானோ, சகோ.ராஜ் அவர்களோ பாவியல்லாத ஒரு நபரைக் காண்பித்தாலும், நீங்கள் அதை ஏற்கப்போவதுமில்லை. இவ்வுலகில் நீங்களும் நானும் பார்த்தது மிகமிகக் குறைவான மனிதர்களே. நீங்களும் நானும் காணாத மனிதர்கள் உலகின் மூலையில் கோடிக்கணக்கானோர் உண்டு. அத்தனை பேரையும் பார்த்து, அவர்களின் கிரியைகளைக் கவனித்தால்தான் பாவியல்லாத நபர் உலகில் உண்டா இல்லையா என்பது பற்றி நாம் பேசமுடியும் என்பது எனது கருத்து.
Anbu wrote//ஒருவேளை நானோ, சகோ.ராஜ் அவர்களோ பாவியல்லாத ஒரு நபரைக் காண்பித்தாலும், நீங்கள் அதை ஏற்கப்போவதுமில்லை. இவ்வுலகில் நீங்களும் நானும் பார்த்தது மிகமிகக் குறைவான மனிதர்களே. நீங்களும் நானும் காணாத மனிதர்கள் உலகின் மூலையில் கோடிக்கணக்கானோர் உண்டு. அத்தனை பேரையும் பார்த்து, அவர்களின் கிரியைகளைக் கவனித்தால்தான் பாவியல்லாத நபர் உலகில் உண்டா இல்லையா என்பது பற்றி நாம் பேசமுடியும் என்பது எனது கருத்து.//
பரிசுத்தவான்கள் கோடிக்கணக்கானோர் உண்டு என்று சொன்ன முதல் மனிதர் நீங்கள்தான்.
ஆக கோடிக்கணக்கானோர் ஏற்கனவே 2ம் மரண்த்திற்கு தப்பிவிட்டார்கள், 'சபை' என்னும் சிறு மந்தையில் சேர்க்கப்பட்டுவிட்டார்கள், அவர்களுடைய சுயநீதிப்படி, உங்கள் கூற்றுப்படி.
மிக்க நன்று. நீங்கள் மற்றும் ராஜ் போன்ற 'பரிசுத்தவான்கள்' இன்னும் பூமியில் இருப்பது மகிழ்சியளிக்கிறது. மேலும் நீங்கள் தேவனால் பிறந்தவர் என்பதால் ஒருக்காலும் பாவமே செய்யமாட்டீர்கள் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
தொடரட்டும் உங்கள் பரிசுத்த பயணம்.... வாழ்த்துக்கள்!!!
பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது வேதம். பாவம் இல்லையென்றால் மரிக்க முடியாத ஒரு சட்டம். இந்த உலகத்தில் பிறந்த எந்த ஒரு மனிதனும் மரிக்காமல் இருந்தது நான் கேள்விப்பட்டதில்லை. சகோ அன்பு, சகோ ராஜ் அப்படி பட்டவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள். இந்த விஷயத்தை தெரிந்துக்கொள்ள உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
என் கேள்விக்கு பதில் தாருங்கள்:
இயேசு கிறிஸ்துவுடன் கூடவே இருந்தாலும், யூதாஸ் அப்படி மாற என்ன காரணம்? கிறிஸ்தவர்களுக்கு எதிரானவனாக இருந்தும், பவுல் அப்போஸ்தலனாக மாறியது எப்படி? சவுலின் முயற்சியால் அல்லது சுய நீதியால் தான் பவுலானாரா? "பாவிகளுக்குள் பிரதான பாவி நான்" என்று சொன்ன பவுல் எங்கே, தங்களை பரிசுத்தவான்கள் என்று வேஷம் இடும் இன்றைய கிறிஸ்தவர்கள் எங்கே?
அதே யோவான் தான் எழுதுகிறார், "நமக்குப் பாவமில்லையென்போனால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது" 1 யோவான் 1:8 சகோ அன்பு அவர்கள் இந்த வசனநத்தையும் தங்களின் வசன வரிசையுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
bereans wrote: //பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது வேதம். பாவம் இல்லையென்றால் மரிக்க முடியாத ஒரு சட்டம். இந்த உலகத்தில் பிறந்த எந்த ஒரு மனிதனும் மரிக்காமல் இருந்தது நான் கேள்விப்பட்டதில்லை. சகோ அன்பு, சகோ ராஜ் அப்படி பட்டவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள். இந்த விஷயத்தை தெரிந்துக்கொள்ள உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.//
பாவத்தின் சம்பளம் மரணம்தான். ஆனால் இது எந்த மரணம் என்பதுதான் கேள்வி.
இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், 3 நாட்களுக்குள் அதைக் கட்டுவேன என இயேசு சொன்னார். ஆனால், இயேசு தமது சரீரமாகிய ஆலயத்தைக் குறித்து சொன்னார் என்பது, இயேசுவின் கூற்றைக் கேட்டவர்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது. அவ்வாறே, பாவத்தின் சம்பளம் மரணம் என்றதும், அது எந்த மரணம் என்பது புரியாமல், ஏற்கனவே நியமிக்கப்பட்ட சரீர மரணத்தை மட்டுமே நீங்கள் கருதுகிறீகள். ஆனால் அந்த சரீர மரணம்தான் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதே என்று கேள்வி கேட்டு சிந்திப்பதில்லை. அதனால்தான் எல்லாக் குழப்பமும்.
இவ்வுலகில் எல்லாரும் மரிப்பதற்குக் காரணம், அவர்களின் சுயபாவம் அல்ல என எத்தனையோமுறை சொல்லிவிட்டேன். ஆதாமுக்குள் எல்லோரும் மரிப்பதுபோல ... என வேதாகமம் தெளிவாகக் கூறியிருந்தும், நாம் மரிப்பதற்குக் காரணம் நம் பாவமே என நினைக்கிறீர்கள். பாவம் இல்லையென்றால் மரிக்க முடியாது என்பது சட்டம்தான். ஆனால் நாம் எல்லோரும் ஆதாமுக்குள் பிறப்பதால் ஏற்கனவே ஆதாமின் பாவம் நம்மீது இருக்கிறதே. நாம் மரிப்பதற்கு அந்த ஒரு பாவம் போதுமே. யோவான்ஸ்நானகனைக் குறித்து வேதாகமம் சொல்வதைப் படியுங்கள்.
லூக்கா 1:15 அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்டிருந்த யோவான்ஸ்நானகனிடம் அசுத்தஆவி இருக்கமுடியாது. எனவே அவர் பாவஞ்செய்ய நினைக்கவும் முடியாது, பாவஞ்செய்யவும் முடியாது. எனவே, அவர் பிறந்ததிலிருந்து ஒருமுறைகூட பாவஞ்செய்திருக்கமாட்டார். அப்படிப்பட்ட அவர் மரிக்கக் காரணமென்ன? ஆதாமின் பாவத்தின் விளைவை அவரும் சுமந்ததாலேயே.
பாவத்தின் சம்பளம் மரணம் என்பது மெய்தான். ஆனால் நம்மைப் பொறுத்தவரை ஆதாமின் பாவமும் நமக்கு மரணத்தைத் தருகிறது, நம் சுயபாவமும் மரணத்தைத் தருகிறது. ஆதாமின் பாவத்தால் வந்த மரணம் எல்லோருக்கும் உரியது, சுயபாவம் இல்லாத யோவான்ஸ்நானகனுக்கும் உரியது. அதுதான் நம் சரீர மரணம். ஆனால் நம் சுயபாவத்தால் வரும் மரணம்தான் நமக்கு நித்திய அழிவைத் தருகிறது. ஆதாமின் பாவத்தால் வந்த மரணத்தைக் குறித்து நாம் கவலைப்படவேண்டியதில்லை. ஏனெனில் நாம் பாவஞ்செய்தாலும் செய்யாவிட்டாலும் அது கட்டாயம் வரத்தான் செய்யும். அத்தோடு, அந்த மரணத்திலிருந்து நமக்கு நிச்சயமாக விடுதலையுமுண்டு. ஏனெனில் ஆதாமுக்கு நாம் மரிப்பதைப் போல கிறிஸ்துவுக்குள் நாம் உயிர்ப்பிக்கப்படுவோம் என்பது நிச்சயம்.
ஆனால் நம் சுயபாவம்தான் நமக்கு ஆபத்தானது. அதுதான் நித்திய மரணத்தைத் தரும். ஆனால் இந்த மரணத்திலிருந்தும் நாம் தப்பிக்க வழியுண்டு. இதைக் குறித்து ஏற்கனவே நான் விரிவாக எழுதியுள்ளேன்.
bereans wrote: //அதே யோவான் தான் எழுதுகிறார், "நமக்குப் பாவமில்லையென்போனால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது" 1 யோவான் 1:8 சகோ அன்பு அவர்கள் இந்த வசனநத்தையும் தங்களின் வசன வரிசையுடன் சேர்த்து கொள்ளுங்கள்.//
இவ்வசனத்தையும் சேர்த்துக்கொள்ள எனக்குத் தயக்கம் இல்லை. யோவான் அப்படியும் எழுதி, இப்படியும் எழுதும்போது, 2 வசனங்களின் கருத்துக்களும் முரண்படாதவாறு அவற்றின் கருத்துக்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
நம் எல்லோருக்கும் சுயபாவம் உண்டு என்பது நிச்சயமே. நாம் அனைவரும் பாவத்தில் கர்ப்பம் தரித்து பிறந்தவர்கள் என்பதால், பிறந்ததுமுதல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை, அதாவது மனந்திரும்பி தேவனால் பிறக்கும் அனுபவத்தைப் பெறுகிறவரை கண்டிப்பாக பாவம் செய்திருப்போம். எனவேதான் நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம் என யோவான் கூறுகிறார்.
ஆனால் நாம் மனந்திரும்பியபின், தேவனால் பிறக்கும் அனுபவத்திற்குள் வரவேண்டும். அதாவது நாளுக்குநாள் பரிசுத்தமடைவதில் முன்னேற்றமடையும் அனுபவத்தினுள் வரவேண்டும். குறிப்பாக அன்பும் நீதியும் நம்மிடம் கண்டிப்பாக இருக்கவேண்டும். அன்புள்ளவனும் நீதியைச் செய்பவனும் தேவனால் பிறந்தவன் என யோவான் கூறுவதைக் கவனியுங்கள். இவ்வாறு நாம் தேவனால் பிறந்தோமெனில், அதன்பின் நாம் பாவஞ்செய்யாதிருப்போம் என்றுதான் யோவான் கூறுகிறார்.
soulsolution wrote: ///Anbu wrote//ஒருவேளை நானோ, சகோ.ராஜ் அவர்களோ பாவியல்லாத ஒரு நபரைக் காண்பித்தாலும், நீங்கள் அதை ஏற்கப்போவதுமில்லை. இவ்வுலகில் நீங்களும் நானும் பார்த்தது மிகமிகக் குறைவான மனிதர்களே. நீங்களும் நானும் காணாத மனிதர்கள் உலகின் மூலையில் கோடிக்கணக்கானோர் உண்டு. அத்தனை பேரையும் பார்த்து, அவர்களின் கிரியைகளைக் கவனித்தால்தான் பாவியல்லாத நபர் உலகில் உண்டா இல்லையா என்பது பற்றி நாம் பேசமுடியும் என்பது எனது கருத்து.//
பரிசுத்தவான்கள் கோடிக்கணக்கானோர் உண்டு என்று சொன்ன முதல் மனிதர் நீங்கள்தான்.///
மீண்டும் ஒருமுறை நான் எழுதினதைக் கவனமாகப் படியுங்கள். உங்கள் கண்பார்வையில் கோளாறு எதுவுமில்லையே?
நீங்களும் நானும் காணாத மனிதர்கள் உலகின் மூலையில் கோடிக்கணக்கானோர் உண்டு என்றுதான் நான் எழுதினேன். அவர்கள் எல்லாரையும் பார்த்து, அவர்கள் பரிசுத்தவான்களா என நாம் அறியமுடியாது என்ற கருத்தில்தான் அதை எழுதினேன்.
-- Edited by anbu57 on Wednesday 11th of November 2009 06:13:37 PM
சகோதரர் அன்பு அவர்களே நீங்கள் ஐம்பது வசனங்களை அடுக்கடுக்காக அடுக்கினாலும் அவர்கள் ஒரே வசனத்தால் எல்லாவற்றையும் சமாளித்துவிடுவார்கள். அதவாது 50:1
ஐம்பது வசனங்கள் பாவம் செய்தவன் அதற்க்கான தண்டனையை அனுபவிப்பான் ஏற்று கூறுகின்றன ஆனால் ஒரே ஒரு வசனம் எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் எனது கூறுகிறது.
இதில் அந்த ஐம்பது வசனங்களுக்கு அவர்கள் பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை ஏனெனில் அது சத்யவசனம் அல்ல அதை நம்புகிறவர்கள் கள்ள போதகர்கள் ஆனால் அவர்கள் எதை நம்புகிறார்களோ அதுதான் வேதம் அதுதான் சத்யவசனம். இரண்டு புறத்தையும் பார்க்க மாட்டோம் ஒரே பக்கத்தைமட்டும்தான் பார்ப்போம் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை என்ன பண்ணமுடியும்.
அன்பு சகோதரர் பெரேயன் அவர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தேவனின் திட்டத்தை முழுமையாக புரிந்துகொண்ட நீங்கள் தேவனுடைய திட்டம் என்ற இந்த பகுதியில் புதியதாக ஒரு தலைப்பு போட்டு, ஆதியில் இருந்து தேவனின் திட்டம் என்ன என்பது பற்றிய உங்கள் கருத்து என்ன என்பதை வசன ஆதாரத்தோடு சற்று தெளிவாக கொடுத்தீர்களானால் அதன் பிறகு நாங்கள் விவாதிப்பதில் அர்த்தம் இருக்கும்.
உங்களின் கோட்பாடு என்னவென்று முழுமையாக எங்களுக்கு தெரியவில்லை எங்கள் கோட்பாடு என்னவென்று முழுமையாக உங்களுக்கு தெரியவில்லை அப்படியிருக்க ஆளுக்கொரு வசனம் சொல்லி சுற்றி சுற்றி வருவதால் எந்த முடிவையும் எட்ட முடியாது. நாம் இத்தனை முயற்சி செய்து எழுதுவதெல்லாம் பயனற்று போய்விடும்.
எனவே தயவு செய்து தேவனின் அநாதி திட்டம் என்ன என்பதை நீங்கள் அறிந்த பிரகாரம் ஒரு தனி தொடுப்பில் தரும்படி வேண்டுகிறேன்.
சகோ அன்பு57 எழுதுகிறார்: "ஆனால் இது எந்த மரணம் என்பதுதான் கேள்வி"
இது ஆதாமுக்கு கொடுக்கப்பட்ட அதே மரணம் தான், மரணத்தில் என்ன இந்த மரணம் அந்த மரணம் என்று ஏதாகிலும் இருக்கிறதா? "நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்" ஆதி 3:19. "for dust thou [art], and unto dust shalt thou return." Gen 3:19.
இதை தான் பாவத்தின் சம்பளமாகிய மரணம் என்று வேதம் கூறுகிறதை நான் தெரிந்துக்கொண்டது. ஆனால் கிறிஸ்துவத்தில் இன்று பல விதமான மரணங்கள் பிரசங்கிக்கப்படுவதையும் அறிவேன்.
"இவ்வுலகில் எல்லாரும் மரிப்பதற்குக் காரணம், அவர்களின் சுயபாவம் அல்ல என எத்தனையோமுறை சொல்லிவிட்டேன்"
சுயப்பாவம் இல்லை என்று நானும் ஒத்துக்கொள்ளுகிறேன், என் கேள்வி எல்லாம், ஒரு மனிதன் பாவ்ம் இல்லாமல் இருக்கிறானா என்பது தான். யோவான் ஸ்னானகன் என்றால், கோபம் அவரின் பாவம் தான் என்று நான் சொல்லுவேன். தன் சகோதரன் மேல் கோபம் கொள்ளுபவன் கொலை பாதகனாக இருக்கிறான் என்றார் இயேசு. "நம்மிடத்தில் பாவம் இல்லை....." 1 யோவான்1:8 யோவான் ஸ்னானகனுக்கும் பொருந்தும், பவுலுக்கும் பொருந்தும் என்பது என் கருத்து. இந்த பாவ சரீரம் பெறுவதற்கு ஆதாம் காரணம் தான், அந்த பாவ சரீரம் இருப்பதால் தான் ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்கிறான் என்பது என் கருத்து. நான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுவதற்கு முன்பு பாவம் செய்தேன் ஏற்றுக்கொண்ட பின் பாவம் செய்வதில்லை என்று சொல்லுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நாம் ஏற்றுக்கொண்ட பிறகும் பாவம் செய்வதினால் தான் அவர் நமக்காக பரிந்து (Advocacy) பேசுகிறவராக இருக்கிறார். உலகத்தார் அவரை ஏற்றுக்கொள்ளாதவர் என்கிறதால் அவர் உலகத்தாருக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தராக (Mediator) இருக்கிறார். ஏற்றுக்கொண்டவன் பாவம் செய்வது இல்லை என்று இருந்தால் அவர் (இயேசு கிறிஸ்து) பரிந்து பேச வேண்டிய அவசியம் இல்லை.
இயேசு கிறிஸ்து மாத்திரம் மனிதனாக வந்தும் பாவம் செய்ய முடியவில்லை, ஏனென்றால், அவர் ஆதாமின் சந்ததியாக இருந்தாலும், மாமிச பிரகாரமாக (மண்ணானவர் இல்லை) பிறக்கவில்லை, மாறாக பரலோகத்தில் இருந்து இறங்கியவர் என்கிறது வேதம், ஆகவே அவரால் பாவம் செய்ய முடியாது, மாறாக அவர் மரித்தார் என்றால், அவர் எல்லா ஜனங்களின் பாவங்களையும் சுமந்ததினால் தான் மரித்தார். (பழய ஏற்பாட்டு ஆட்டு பலியிடப்படுவது போல்).
ஒருவன் பாவம் செய்கிறான் என்றால் அவனிடத்தில் அசுத்த ஆவி (ஆவியான ஒரு ஆள்தத்துவம்) இருப்பதினால் இல்லை, மாறாக, பிசாசியின் கிரியை மாம்சத்தில் வெளிப்படுவது தான் பாவமாகிறது.
நம் சுயப்பாவமோ, ஆதாமினால் வந்த பாவத்தின் சரீரத்தில் இருப்பதால் நமக்கு மரணம் என்கிற ஒரு தண்டனை கொடுத்து, மீண்டும் எழுப்பி மீண்டும் ஒரு தண்டனையா?
ராஜ் எழுதுகிறார்: "ஐம்பது வசனங்கள் பாவம் செய்தவன் அதற்க்கான தண்டனையை அனுபவிப்பான் ஏற்று கூறுகின்றன ஆனால் ஒரே ஒரு வசனம் எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் எனது கூறுகிறது."
அதற்கான தண்டனை தான் மரணம் என்று வேதம் கூறியும், நீங்கள் வலுக்கட்டாயமாக வேறு எந்த தண்டனையை தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். மரணம் எழும்ப முடியாத ஒரு தண்டனையாக மனிதனுக்கு இருந்திருக்கும், ஆனால் தேவனின் கிருபை இயேசு கிறிஸ்துவினால் நாம் ஜீவனை பெறுகிறோம், அதாவது தண்டனை பெற்று, அதன் பின் விடுவிக்க படுகிறோம். அதாவது அந்த "ஒரு வசனம்" மாத்திரம் பரிசுத்த ஆவியினால் வராமல் மாம்சத்தில் வந்த வசனமோ!!
என் விசுவாசம் என் நம்பிக்கை என் கொள்கை எல்லாம் தசமாபாகம் என்கிற இந்த தலைப்புக்கு அடுத்த தலைப்பாக "எங்கள் விசுவாசம்" "Our Faith" என்கிற பகுதியில் இருக்கிறது. உங்கள் வாதங்களை அங்கு எடுத்து வையுங்கள்.