kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தசமபாகம்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
RE: தசமபாகம்


soulsolution wrote:

"உங்களுக்கு உள்ளவைகளை விற்று பிச்சை கொடுங்கள்" லூக்12:33,

"உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்கிறவனிடத்தில் அதை திரும்பக்கேளாதே" லூக்6:30
"கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்" லூக்6:35,///  

நான் ஒரு தசமபாகம் வாங்கும் உழியக்காரன் அல்ல. அவர்களின் செயல் சரியானது என்றும் நான் வாதிட விரும்பவில்லை அதே நேரத்தில் தவறு என்று சொல்லவும் எனக்கு தகுதியில்லை.  ஏனெனில் காலம் வரும்வரை எந்த ஒற்றை குறித்தும் நியாயம் தீர்க்கவேண்டாம் என்று வேதம் சொல்கிறது
ஒரு விசுவாசியாக நோக்கினால், இயேசு சொல்லியுள்ள கட்டளைகள் மகா உயர்ந்தவைகள் அவைகளை நாம் சரியாக கைகொண்டால் நியாயபிரமாணம் பற்றி யோசிக்க வேண்டிய தேவையே இல்லை.

ஆனால் இங்கு யாரும் தங்களுக்குண்டனவற்றை விற்று பிச்சை கொடுப்பதும் இல்லை, ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை கொடுப்பதும் இல்லை, இரண்டு அங்கி வைத்திருப்பவன் ஒரு அங்கியை இல்லாதவனுக்கு கொடுப்பதும் இல்லை. கேட்பனுக்கு எல்லாம் முகம் கோணாமல் கடன் கொடுப்பதும் இல்லை.

அப்படியிருக்கையில், தேவன் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச நீதியாகிய நியாயபிரமாணத்தயாவது கைகொள்ளலாமே எனதுதான் எனது கருத்து!       


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

anbu57 wrote:
இஸ்ரவேலரிடம் பிரசங்கித்த இயேசு, தாம் உபதேசித்தவற்றை சகல ஜாதிகளுக்கும் போதிக்கும்படி சீஷரிடம் கூறியுள்ளதால் (மத். 28:20) இயேசுவின் போதனைகள் நமக்குப் பொருந்தும்தான்.


மிக சரியான கருத்து! ஆனால் இயேசு நியாயபிரமாணத்தை பற்றி போதிக்கவில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?

நியாயபிரமாணத்தை அழிக்கவரவில்லை என்று குறிப்பிட்ட இயேசு கிறிஸ்த்து தனது இரண்டு பிரதான கட்டளைகளில் நியாயபிரமாணம் தீர்க்கதரிசனம் எல்லாம் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பையில் தனியா, வெந்தயம், கடுகு போன்ற பத்து சாமான்களை போட்டு இவை மளிகைசாமான்கள், இதனுள் எல்லாம் இருக்கிறது  என்று சொன்னால் அதனுள்  கடுகும் இருக்கிறது என்றுதானே அருத்தம்.

இயேசுவின் பிரதான கட்டளைகளுள்ளே நிச்சயம் நியாயபிரமாணம் அடங்கியுள்ளது என்பதை விளக்கமாக படிக்க கீழ்க்கண்ட எனது வலைப்பூவை பார்வையிடவும்

http://www.victoryondeath.blogspot.com/

எனவே இயேசுவின் போதனை கைகொள்ளப்பட வேண்டுமென்றால் வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், ஒரு உருப்புகூட ஒழியாது என்று  நிலை நிறுத்தி சொன்ன நியாயபிரமாணத்தையும் கைகொள்ளத்தான் இயேசு போதித்தார் என்று நான் கருதுகிறேன் 

 

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

RAAJ wrote:

 



லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும்


இதில் "லேவியன்" என்பவன் தேவனுக்கு பணிவிடை செய்யும் ஒரு  உழியக்காரனாக  எடுத்துகொள்ளலாம் என்று நான் கருதுகிறேன்.

 




ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் 'புது சிருஷ்டி'யாக இருக்கிறான். புதிய ஏற்பாட்டின் சபையில் லேவியனும் இல்லை, ஆசாரியனும் இல்லை. ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, ஒருவரை ஒருவர் கனம் பண்ணுவதில் முந்திக்கொள்ளவே சொல்லியிருக்கிறது. தேவனுக்கு 'பணிவிடை' செய்கிறேன் பேர்வழி என்று அடுத்தவர் பாடுபட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பிச்சைக்கார வாழ்வு வாழ வேதம் யாருக்கும் வழி சொல்லிக்கொடுக்கவில்லை. தங்களை 'முழு நேர' ஊழியர்கள் என்று சொல்லிக் கொண்டு சோம்பித்திரியும் இந்த முழுநேர திருடர்களுக்கு ஜாக்கிரதையாக இருப்போம்.




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ wrote:
//"லேவியன்" என்பவன் தேவனுக்கு பணிவிடை செய்யும் ஒரு உழியக்காரனாக எடுத்துகொள்ளலாம் என்று நான் கருதுகிறேன்.//

'லேவியன்’ என்றால் லேவியன் தான். வேறு எவரும் லேவியன் ஆகமுடியாது.
தேவனுக்குப் பணிவிடை செய்த புதிய ஏற்பாட்டு ஊழியரில் எவரும் தசமபாகம் கேட்டதாகவோ வாங்கியதாகவோ வேதாகமம் கூறவில்லை.

RAAJ wrote:
//எனக்கு வயற்காடு இல்லாத காரணத்தால் அதைப்பற்றி அதிகம் சிந்திக்கவில்லை ஆகினும் கீழ்க்கண்ட வசனப்படி

உபாகமம் 12:11 உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசம பாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து ...

கர்த்தரின் நாமம் விளங்கும் ஸ்தலம் அதாவது கர்த்தரை பிரஸ்தாபபடுத்தும் ஸ்தலம் எதுவாக இருந்தாலும் நமது மனதுக்கு சரிஎன்று படுகிற இடத்தில் கொடுக்கலாம் என்று கருதுகிறேன்.//

வசனத்தை நன்றாகக் கவனிக்கவும். கர்த்தரின் நாமம் விளங்கும் ஸ்தலமாக இருந்தால் மட்டும் போதாது; கர்த்தரின் நாமம் விளங்கும்படி கர்த்தரே தெரிந்துகொள்ளும் ஸ்தலமாகவும் இருக்கவேண்டும்.

கர்த்தர் தெரிந்து கொண்ட ஸ்தலங்கள் இரண்டே இரண்டு மட்டுமே.
1. சீலோவாவிலுள்ள தேவாலயம், 2. எருசலேமிலுள்ள தேவாலயம்.
சீலோவா கர்த்தர் தெரிந்து கொண்ட ஸ்தலமாக இருந்தது என்பதற்கான ஆதாரங்கள்: யோசுவா 18:8,10; நியா. 18:31; 21:19; 1சாமு.1:3.

எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டபின், அது மட்டுமே தேவனுடைய ஆலயமாக இருந்தது.
இவ்விரு ஆலயங்களைக் குறித்தும், எரேமியா தீர்க்கதரிசி மூலம் தேவன் சொல்வதை கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

Jeremiah 7:11-14 Has this house, which bears my Name, become a den of robbers to you? But I have been watching! declares the LORD.
"'Go now to the place in Shiloh where I first made a dwelling for my Name, and see what I did to it because of the wickedness of my people Israel. While you were doing all these things, declares the LORD, I spoke to you again and again, but you did not listen; I called you, but you did not answer. Therefore, what I did to Shiloh I will now do to the house that bears my Name, the temple you trust in, the place I gave to you and your fathers.

இஸ்ரவேலரின் அக்கிரமத்தினிமித்தம் சீலோவாவுக்குச் செய்ததைப் போல், எருசலேம் தேவாலயத்திற்கும் செய்வேன் என தேவன் கூறுகிறார். தேவனால் நேரடியாகத் தெரிந்து கொள்ளப்பட்ட ஆலயங்களுக்கே இக்கதி எனில், மனுஷர்கள் தெரிந்துகொள்ளும் ஆலயங்கள் என்ன கதியாகும்?

சீலோவா தேவாலயம் மற்றும் எருசலேம் தேவாலயத்தைத் தவிர மற்ற அனைத்து ஆலயங்களும் ஜெபஆலயம் அல்லது உங்கள் ஆலயம் என்று மட்டுமே வேதாகமத்தில் அழைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இன்றைய சபைத்தலைவர்கள் தெருவுக்குத் தெரு ஆலயத்தைக் கட்டி வைத்துக் கொண்டு, கொஞ்சமும் பயமில்லாமல் அதை தேவனுடைய ஆலயம் என அழைத்துக் கொள்கிறார்கள்.

சரி, நம் விஷயத்திற்கு வருவோம். நமக்கு வயற்காடு இருந்து, அதன் பலன்களில் தசமபாகத்தை தேவன் தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்ட ஸ்தலத்தில் படைக்க வேண்டுமெனில், அதை எருசலேம் தேவாலயத்தில் தான் படைக்கவேண்டும்.

சீலோவா எருசலேம் ஆலயங்கள் தவிர மற்றொரு ஸ்தலத்தையும் தேவனுடைய ஆலயம் என வேதாகமம் அழைக்கிறது. அதுதான் நம் சரீரமாகிய தேவனுடைய ஆலயம் (1 கொரி. 3:16; 6:19). எனவேதான் தசமபாகத்தை நாமே வைத்துக்கொண்டு, ஆகாரத்தேவையுள்ளோருக்குக் கொடுக்கலாம் எனக் கூறியிருந்தேன்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அப்படி பழைய ஏற்பாட்டை பின்பற்ற விருப்பமிருந்தால் அதிலுள்ள எல்லாவற்றையும் கைக்கொள்ள வேண்டியதுதானே? ஏன் இந்த தசமபாகம் மட்டும்? முதலில் 'நுனித்தோலை' அறுத்துவிட்டு பின்பு தசமபாகம் பற்றி பேசலாமே. யூதனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளை அவனே பின்பற்றவில்லை.






நியாயப்பிரமாணத்தை கொண்டு தண்டனை கொடுக்கலாமன்றி 'இரட்சிப்பு' கொடுக்கமுடியாதென்பதால்தான் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:

///ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் 'புது சிருஷ்டி'யாக இருக்கிறான். புதிய ஏற்பாட்டின் சபையில் லேவியனும் இல்லை, ஆசாரியனும் இல்லை.///
 


நீங்கள் கிறிஸ்த்துவுக்குள் இருந்தாலும் வெளியே இருந்தாலும் தேவனின் கட்டளைகள் உங்கள்மேல் நிச்சயம் செயல்படும். கிறிஸ்த்துவுக்குள் இருப்பவன்
எப்படி இருக்கவேண்டும் என்று பவுல் சொல்வதில் அனேக கட்டளைகள் நியாயபிரமாண புத்தகத்திலிருந்து வந்ததுதான்.  

புதிய ஏற்பாட்டு சபையில் சுவிசேஷம் சொல்பவர்கள் அதனால் பிழைக்கலாம் என்று கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது.
I

கொரிந்தியர் 9:14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

ஆனால் உழியகார்கள் ஒரு படோபரமான வாழ்க்கை வாழ்வதுதான் ஏற்றதாக தெரியவில்லை. ஆண்டவர் பெயர் சொல்லி காணிக்கை வாங்கும் அவர்கள்  அதற்க்கு ஆண்டவரிடத்தில் பதில் சொல்லட்டும். ஆனால் உளியக்காரனை  விசுவாசி வாழவைப்பது தவறில்லை என்றே நான் கருதுகிறேன்.      




  



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இன்று பெரும்பாலுமான நாட்டவர்கள் பயன் படுத்தும் சட்டங்களும் அப்படியே வந்தது தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கிறிஸ்துவிற்குள் ஒருவன் வந்து விட்டால் பழையது எல்லாம் ஒய்ந்து போயிற்று, அவன் புதிய சிருஷ்டியாகிறான் என்பது தான் வசனம்.

நீங்கள் வசனத்தின் சூழலையும் புரிய வேண்டுகிறேன். சொல்ல பட்ட எல்லா வார்த்தைகளும் நமக்கு என்று எடுத்துக்கொண்டால், "நீங்கள் எப்படி ஸ்த்ரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்"ஆக இருக்க முடியும். "யூதாஸை போல் நாண்டு கொண்டு சாக முடியுமா".

"சுவிசேஷம் சொல்லுவது என் மேல் விழுந்த கடமையாக இருக்கிறது, நான் சுவிசேஷம் அறிவிக்காவிட்டாள் எனக்கு ஐய்யோ" என்கிற பவுலின் வசனம் உங்களுக்கு பொருந்துமா?

அப்படியே தான் லேவியனுக்கு கொடுக்கவேண்டிய தசமபாகம் சட்டப்படி லேவிய கோத்திரத்தார் மாத்திரமே பெற‌ த‌குதியான‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள், ஏனென்றாள் அவ‌ர்க‌ள் யூத‌ர்க‌ள், யூத‌ர்க‌ளுக்கு மாத்திர‌மே இந்த‌ க‌ட்ட‌ளைக‌ள், பிர‌மான‌ங்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. ரோம் 3:1,2 (இந்த வசனத்தை கண்டிப்பாக வாசியுங்கள்).

வெளியே இருந்த‌ (புற‌ஜாதிக‌ளுக்கு) அவ‌ர்க‌ள் ம‌ன‌சாட்சி தான் ச‌ட்ட‌மாக‌ இருந்த‌து. தேவ‌ன் சுமார் 4000 வ‌ருட‌ங்க‌ள் அந்த‌ புற‌ஜாதியாருட‌ன் இடைப‌ட‌வில்லை, ஒரு சில‌ ச‌ந்த‌ர்ப‌ங்க‌ளை த‌விர‌, உம். நெபுகாத்நேச்சார் போன்ற‌வ‌ர்க‌ள். அத‌ற்காக‌ தேவ‌ன் அவ‌ர்க‌ளை விட்டுவிட‌வில்லை. அவ‌ர்கள் உணர்ந்துக்கொள்ளும் படி அவர்களை காண‌த‌வ‌ர் போல் இருந்தால், ஆனால் பாராப‌ட்ச‌மின்றி அதே ம‌ழை, அதே வெயில் அவ‌ர்க‌ள் மேலும் பொழிய‌ செய்தார். இப்ப‌டி ஒரு ஜாதிக்கு மாத்திர‌மே அவ‌ர் எது வ‌ரை செய்து வ‌ந்தார்? வாக்குதத்தம் (அபிரகாமுக்கு தான்) செய்யப்பட்ட வித்து (அந்த வித்து கிறிஸ்துவே, என்கிறார் பவுல், கலா. 4ம் அதிகாரத்தில்) வரும் மட்டும்.

அவ‌ரின் ஒரே பேரான‌ குமார‌னாகிய‌ இயேசு கிறிஸ்துவின் மூல‌ம், ப‌லிக‌ளை ஓய‌ப்ப‌ன்னும் ம‌ட்டும். அத‌ன் பின் ப‌லிக‌ளும் காணிக்கைக‌ளையும் அவ‌ர் ஒய‌ செய்துவிட்டார், ஏனென்றால், தேவ‌னை திருப்ப்தி ப‌டுத்தும் அந்த‌ உன்ன‌த‌மான‌ ப‌லியாக‌ இயேசு கிறிஸ்து, மீட்கும் பொருளாக த‌ம்மையே, இந்த‌ உல‌க‌த்தின் பாவ‌ங்க‌ளுக்காக‌ செலுத்து விட்டார்.

இவை எல்லாம் ஒய்ந்து விட்ட‌ பிற‌கு இன்னும் பிடிவ‌த‌மாக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் அன்று யூத‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ கற்ப‌னைக‌ள், க‌ட்ட‌ளைக‌ளை பின் ப‌ற்ற‌ வேண்டும் (அதுவும், த‌ங்க‌ளுக்கு ஆதாய‌ம் தரும் தசமபாகம் போன்றவைகள் மாத்திர‌மே) என்ப‌து எப்ப‌டி தான் சாத்திய‌ம் என்ப‌து விள‌க்குங்க‌ளே! இப்ப‌டி க‌ட்ட‌ளைக‌ளை காண்பித்து த‌ச‌மபாக‌ம் கேட்ப‌வ‌ர்க‌ளை முத‌லில் "நுனி தோல்" வெட்டியவ‌ர்க‌ளா என்று சொல்ல‌ட்டும், அதாவ‌து விருத்த‌சேத‌ன‌ம் செய்த‌வ‌ர்க‌ளா என்று? அது ம‌ட்டும் யூத‌னுக்கு என்றால், த‌ச‌ம‌பாக‌ம் கூட‌ யூத‌னுக்கு தான் ஆனால் இயேசு கிறிஸ்துவின் மரணம் ம‌ட்டும் தான்.


ராஜ் எழுதிய‌து:

"புதிய ஏற்பாட்டு சபையில் சுவிசேஷம் சொல்பவர்கள் அதனால் பிழைக்கலாம் என்று கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது.
I கொரிந்தியர் 9:14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்."

சுவிசேஷ‌ம் சொல்லுவ‌தால் நல்லா பிழைக்கட்டும், ஆனால் அத‌ற்காக‌ ப‌வுலை போல் இவ‌ர்க‌ளும் சுற்றி திரிய‌ட்டுமே. ஆட‌ம்ப‌ர‌மான‌ வாழ்க்கை, கார் ப‌வ‌னிக‌ள், மாளிகைக‌ள் போன்ற‌ வாழ்க்கையை ப‌வுலை போல் துற‌ந்து வந்து பின்பு கேட்க‌ட்டுமே. அவ‌ர்க‌ள் கேட்டு தானே இதை எல்லாம் ச‌ம்பாதிக்கிறார்க‌ள்.

சாதார‌ன‌ அர‌சு வேளையினால் வ‌ராத‌ வ‌ருமான‌ம், இப்ப‌டி வ‌ருவ‌து யாருக்கு தான் க‌ஷ்டத்தை த‌ரும்? என்ன‌ த‌ன்மான‌த்தை விட்டு கேட்க‌ வேண்டும். வேத‌த்தை திரிச்சி கேட்க‌ வேண்டும். தேவ‌ன் சொல்லாதை, சொன்ன‌தாக‌ பேச‌ வேண்டும். இது சுல‌ப‌ம், ஆனால் இது சரியா என்பதை ஆறாய‌ தான் நமக்கு வ‌ச‌ன‌ங்க‌ள் உண்டு.

ராஜ் எழுதிய‌து:
"ஆண்டவர் பெயர் சொல்லி காணிக்கை வாங்கும் அவர்கள்  அதற்க்கு ஆண்டவரிடத்தில் பதில் சொல்லட்டும். "

ஆண்ட‌வ‌ரிட‌ம் தான் இத‌ற்கு ப‌தில் சொல்ல‌ வேண்டும் என்றால், நீங்க‌ள் ஏன் வேத‌ம் வாசிக்க‌வேண்டும். ப‌வுல் இதை தெரியாம‌ல் தான் எல்லாருக்கும் முன்பாக‌ பேதுருவுட‌ன் க‌டும் வாக்கு வாத‌த்தில் ஈடுப‌ட்டானோ. இதை எல்லாம் பார்த்தும் இது த‌வ‌று தான் என்று தெரிந்தும் இதை ஆத‌ரிப்ப‌து ச‌ரியா? க‌டிந்துக்கொள்ள‌வும், சீர்த்திருத்த‌வும் வச‌ன‌ம் இருக்கிற‌து.

த‌வ‌று செய்தால் தான் த‌வ‌று என்றில்லை, த‌வ‌றை ஆத‌ரித்தாலும் த‌வ‌று தான்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ wrote:
//நான் ஒரு தசமபாகம் வாங்கும் உழியக்காரன் அல்ல. அவர்களின் செயல் சரியானது என்றும் நான் வாதிட விரும்பவில்லை அதே நேரத்தில் தவறு என்று சொல்லவும் எனக்கு தகுதியில்லை. ஏனெனில் காலம் வரும்வரை எந்த ஒன்றை குறித்தும் நியாயம் தீர்க்கவேண்டாம் என்று வேதம் சொல்கிறது.//

ஒருவரின் செயலை தவறு என்று சொல்வதற்கும் ஒருவரை நியாயந்தீர்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது சகோதரரே!

நியாந்தீர்த்தல் என்பது சிலவேளைகளில் ஒருவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பதோடு நின்று விடும், சிலவேளைகளில் அக்குற்றத்திற்கான தண்டனையை வழங்குவதும் அடங்கிவிடும். ஆனால் ஒருவரின் செயலை தவறு அல்லது குற்றம் எனச் சொல்வது அப்படியல்ல.

பிறரது தவறுகளைச் சுட்டிக்காட்டி உணர்த்தும்படி பல வேத வசனங்கள் கூறுகின்றன.

மத்தேயு 7:5 முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

1 தீமோ. 5:20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.

சகோதரன் கண்ணிலுள்ள துரும்பை எடுக்க முயலத்தான் வேண்டும். ஆனால் அதற்கு முன் நம் கண்ணில் உத்திரம் இல்லாதிருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

மூத்த ஊழியரான பேதுருவின் தவறை பவுல் கடிந்துகொள்வதை கலா. 2:11-ல் பார்க்கிறோம்.

மற்றொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். ஒருவனின் செயலால் உண்டாகும் விளைவு அவனோடு நின்றால் பரவாயில்லை; ஆனால் அச்செயல் பிறரையும் பாதிப்பதாக இருந்தால் அது கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

தசமபாகத்தைக் குறித்த தேவனின் நோக்கத்திற்கு மாறாக, தங்கள் சுயஆதாயத்திற்காக தசம பாகத்தை வாங்கும்போது, அதைக் கொடுப்பவர்கள் தேவனின் நோக்கத்திற்கு மாறாக செயல்படுவோராகின்றனர். எனவே இவ்விஷயத்தில் நாம் மவுனமாயிருந்தால் நாமும் குற்றவாளிகளாகிவிடுவோம்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ wrote:
//ஒரு விசுவாசியாக நோக்கினால், இயேசு சொல்லியுள்ள கட்டளைகள் மகா உயர்ந்தவைகள் அவைகளை நாம் சரியாக கைகொண்டால் நியாயபிரமாணம் பற்றி யோசிக்க வேண்டிய தேவையே இல்லை.

ஆனால் இங்கு யாரும் தங்களுக்குண்டனவற்றை விற்று பிச்சை கொடுப்பதும் இல்லை, ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை கொடுப்பதும் இல்லை, இரண்டு அங்கி வைத்திருப்பவன் ஒரு அங்கியை இல்லாதவனுக்கு கொடுப்பதும் இல்லை. கேட்பவனுக்கு எல்லாம் முகம் கோணாமல் கடன் கொடுப்பதும் இல்லை.

அப்படியிருக்கையில், தேவன் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச நீதியாகிய நியாயபிரமாணத்தயாவது கைகொள்ளலாமே எனதுதான் எனது கருத்து!//

தேவன் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச நீதியாகிய நியாயப்பிரமாணத்தில், நீதியும் இரக்கமும் விசுவாசமும் இருந்தது (மத்தேயு 23:23). எனவே நீதி, இரக்கம், விசுவாசம் இல்லாமல் தசமபாகக் கட்டளை போன்ற நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்வதால் தேவனின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிடமுடியாது.

நீங்கள் இயேசுவின் கற்பனையான: இருப்பதை விற்று பிச்சை கொடுத்தலையும், நியாயப்பிரமாணத்தின் தசமபாகக் கட்டளையையும் அளவின் அடிப்படையில் ஒப்பிடுகிறீர்கள். ஆனால் பவுல் கூறுவதென்ன?

நமக்குண்டான எல்லாவற்றையும் அன்னதானம் பண்ணினாலும் அன்பு இல்லாவிடில் அதில் பயன் எதுவுமில்லை என்பதே (1 கொரி. 13:3). ஆம், கட்டாயத்திற்காக, நியாயப்பிரமாண சட்டதிட்டத்திற்காக குறைவாகவோ/அதிகமாகவோ என்ன செய்தாலும் அதில் பயனில்லை.

தசமபாகத்தை கொடுத்த வேதபாரகர் பரிசேயரிடம் இயேசு சொன்னது என்ன? முதலாவது இரக்கத்தைக் கற்றுக்கொள், நீதியைக் கற்றுக்கொள், விசுவாசத்தைக் கற்றுக்கொள் என்பதுதானே?

அன்பு, இரக்கம் இல்லாமல் தசமபாகம் மட்டுமின்றி, இருக்கிற அனைத்தையும் கொடுத்தால்கூட அதில் பயன் எதுவுமில்லை என்பதே வேதாகம்த்தின் தெளிவான போதனை.

உண்மையில், தேவன் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் தெரியுமா?

மீகா 6:8 மனுஷனே நன்மை இன்னதென்று தேவன் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதையல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

மெய்யான இரக்கமுள்ளவன் அளவைப் பார்க்கமாட்டான். தன்னால் முடிந்தவரை கொடுத்துக் கொண்டேயிருப்பான்.

தேவன் தசமபாகத்தைக் கொடுக்கச் சொன்னது, ஆகாரத்திற்கு வழியில்லாத லேவியர், பரதேசி, திக்கற்றவர், விதவை ஆகியோருக்கே. எனவே இரக்கத்தின் அடிப்படையிலேயே தசமபாகக் கட்டளையை தேவன் கொடுத்தார். அந்த இரக்கம் இல்லாமல், வெறுமனே கட்டளைக்காக தசமபாகத்தைக் கொடுத்த வேதபாரகர் பரிசேயரைத்தான் இயேசு கண்டித்தார்.

எனவே நியாயப்பிரமாணத்தின்படியானாலும் சரி, கிறிஸ்துவின் பிரமாணத்தின்படியானாலும் சரி, நீங்கள் தசமபாகம் கொடுக்கநினைத்தால் உங்களிடம் இரக்கம் கட்டாயம் இருக்கவேண்டும். இரக்கத்தின் அடிப்படையில் தசமபாகம் கொடுக்கும் நீங்கள் யாருக்கு அதைக் கொடுப்பீர்கள்? கர்த்தருடைய ஊழியரானாலும் சரி, மற்றவற்களானாலும் சரி, அவர்கள் ஆகாரத்தேவையைக்கூட சந்திக்க வழியில்லாத நிலையிலுள்ளோராக இருக்கவேண்டும்.

ஆனால் இன்று தசமபாகம் கேட்போரில் பலர் பெரும்ஆடம்பரவாழ்வு நடத்துகின்றனர். தசமபாகம் கொடுக்கிற விசுவாசிகளும் இரக்கத்தின் அடிப்படையில் கொடாமல், மல்கியா 3:10-ல் கூறப்பட்டுள்ள இடங்கொள்ளாத ஆசீர்வாதத்தை எதிர்பார்த்தே கொடுக்கின்றனர். இதையா தேவன் விரும்புகிறார்? இதையா இயேசுவின் உபதேசம் நமக்குப் போதிக்கிறது?

-- Edited by anbu57 on Sunday 11th of October 2009 08:16:10 AM

-- Edited by anbu57 on Sunday 11th of October 2009 08:16:44 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:
//அப்படி பழைய ஏற்பாட்டை பின்பற்ற விருப்பமிருந்தால் அதிலுள்ள எல்லாவற்றையும் கைக்கொள்ள வேண்டியதுதானே? ஏன் இந்த தசமபாகம் மட்டும்? முதலில் 'நுனித்தோலை' அறுத்துவிட்டு பின்பு தசமபாகம் பற்றி பேசலாமே. யூதனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளை அவனே பின்பற்றவில்லை./// சகோதரர்,"சோல்" அவர்களே புதிய ஏற்பாட்டு காலத்தில் விருத்தசேதனம் என்பது இருதயத்தின் நுனி தோலை நீக்கிபோடுதல் என்று கர்த்தராகிய தேவனே மாற்றியிருக்கிறார் 
 
உபாகமம் 10:16 ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்.

எரேமியா 4:4 யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.

இந்த வசனங்கள் மூலம் மாமிசத்தின் நுனித்தோல் அல்ல இருதயத்தின் நுநித்தொலே நீக்கப்பட வேண்டும் என்று கர்த்தரின் கட்டளை மாற்றப்பட்டுள்ளது.  என்பதை நான் முன்னமே பதிவிட்டிருக்கிறேன்.


////நியாயப்பிரமாணத்தை கொண்டு தண்டனை கொடுக்கலாமன்றி 'இரட்சிப்பு' கொடுக்கமுடியாதென்பதால்தான் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார்.////

வெறும் நியாயபிரமாணத்தால் இயேசுவின்
இரத்தம் இல்லாமல்    இரட்சிப்பில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் 

ஆனால்
மத்தேயு 5:18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ள தெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 
 
என்ற வசனத்தையும் சற்று தியானியுங்கள்.

"இயேசு நியாயபிரமாணத்தின் முடிவா யிருக்கிறார்" என்று சொன்ன பவுல் சொல்லும் கீழ்க்கண்ட வசனத்தை பாருங்கள்      
 
கொரிந்தியர் 6:9 வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
10. திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

இதில் பட்டியலிட்டுள்ள  அனேக பாவங்கள் 
நியாயபிரமாணத்தால் பாவம்
என்று தீர்க்கப்பட்டவைகளே அப்படியிருக்க ஏன் பவுல் நியாயபிரமாணம் முடிந்தது என்று சொன்னார் என்பதை சற்று ஆழமாக யோசித்து பாருங்கள்.   




 

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சகோதரர் அன்பு அவர்களே

தசமபாகம் கோடுப்பதன்  பிரதான  நோக்கம் ஏழை எளியவர்கள் பயனடையவேண்டும் என்பது மட்டுமல்ல.  தேவனுக்கு உழியம் செய்பவர்கள் 
வாழவேண்டும் என்பதுதான்
 
நியாயபிரமாணம்/ தசமபாககட்டளை வரும் முன்னேயே  ஆபிரகாம் சலேமின் ராஜாவுக்கு தசமபாகம் கொடுத்துள்ளான்
 
ஆதியாகமம் 14
18. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
19. அவனை ஆசீர்வதித்து, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.
20௦. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
 
இங்கு தேவனுடைய மனிதர்களிடம் பெரும் ஆசீர்வாதத்துக்காகவே தசமபாகம் கொடுக்கப்பட்டதாக வசனம் சொல்கிறது.   
 
மேலும்
  
லேவியராகமம் 27:30 தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
எண்ணாகமம் 18:21 இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
எண்ணாகமம் 18:24 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்


பழைய ஏற்பாட்டு காலத்தில் கர்த்தருக்கு பணிவிடை செய்யும் லேவியர்கள் வேறு எதுவும் தொழில் செய்வதில்லை அவர்கள் வாழ்க்கை நடத்தவே தசமபாகம் பிரதானமாக கொடுக்கப்பட்டது.
 
புதிய ஏற்ப்பட்டு காலத்தில் நிலைமை மாறிவிட்டது. தேவனை எல்லா இடங்களிலும் தொழும் நிலை வந்துவிட்டது    
 
21.  நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்
.
 
 
இக்காலத்தில் தேவனை எங்கும் தொளுதுகோள்ளலாம் ஆனால் ஆவியோடும் உண்மையோடும் தொளுதுகோல்லவேண்டும் அவ்வளவுதான். நம் மனதுக்கு அப்படி ஒரு தொழுகை நடக்கிறது என்று ஐயமற தெரிந்த இடத்தில் 
அந்த தேவஊழியருக்கு தசமபாகம் கொடுப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
 
நீங்கள் சொல்வதுபோல் தசமபாகத்தை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் விரும்பியவர்களுக்கு  கொடுப்பது நிலத்தின் வருவாயை பொறுத்தவரை ஏற்றதல்ல என்றே கருதுகிறேன்.  அது நிச்சயம் தேவனின் பணிவிடைகாரர்களுக்கு கொடுக்கபடவேண்டியது. உங்கள் மனதுக்கு சரியான உழியம் அல்லது ஆலயம் எதுவென்று  நீங்கள் கருதுகிறீர்களோ அவர்களுக்கு கொடுக்கலாம்        
 
அடுத்ததாக அன்பையும் இரக்கத்தையும் பற்றி எழுதியுள்ளீர்கள்அது எல்லோருக்கும் பொதுவானது  அன்பையும் இரக்கத்தையும் அளக்கும் அளவுகோல் யாரிடமும் இல்லை. நீங்கள் அதிகம் இரக்கம் உள்ளவரா அல்லது நான் அதிகம் இரக்கம் உள்ளவனா என்று தேவன் ஒருவரே தீர்மானிக்க முடியும்.
நீங்கள் தசமபாகத்தை விட அதிகமாக கொடுக்க விரும்பினால்  கொடுக்கலாம் ஆனால் குறைந்தபட்சம் தசமபாகத்தையாவது கொடுக்க வேண்டும் என்பதுதான் தேவனின் நியதி.
 
மூன்றாவதாக  நியாயம் தீர்ப்பதற்கும் குற்றவாளி என்று தீர்ப்பதற்கும் பெரிய வேறுபாடு எனக்கு தெரியவில்லை. வேதத்திலுள்ள சரியான உண்மை என்னவென்பது ஒருவராலும் நிதானிக்க முடியாது அது தேவன் ஒருவரே அறிய முடியும். அவ்வாறிருக்கையில் ஒருவரின் செயலை தவறு என்று தீர்க்க நான் விரும்பவில்லை.    
 
மத்தேயு 7:1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
ரோமர் 14:4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி
ரோமர் 14:13 இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக
 
போன்ற பல வசனங்கள் பிறரை குற்றவாளி என்று தீர்க்கவேண்டாம் என்று போதிக்கிறது எனவே ஒருவர்  செய்வது பாவம் என்று சரியாக தெரியாத பட்சத்தில்    அதுவும் தேவ ஊழியத்துக்காக  தங்கள் வாழ்நாளை 
அற்ப்பனித்தவர்களை     நான் யாரையும்  குற்றவாளி என்று தீர்மானிக்க விரும்பவில்லை.

உங்களுக்கு ஆண்டவரின் சரியான புரிதல் வழி நடத்துதல் இருக்குமானால் நீங்கள் செய்வதை குறைகூறவும் விரும்பவில்லை.
 


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஒருவன் வேலை செய்யாவிட்டால் சாப்பிடவும் கூடாது என்று பவுல் சொன்னது ஊழியக்காரர்களுக்குத்தான். புதிய ஏற்பாட்டின் சபையில் ஊழியன் விசுவாசி என்ற பிரிவு இல்லை. ஏன் ஊழியக்காரனுக்கு இருக்கும் 'பரிசுத்த ஆவி'தானே விசுவாசிகளூக்கும் இருக்கிறது.

புதிய ஏற்பாட்டின் படி ஒரே பிரதான ஆசாரியர் கிறிஸ்து மட்டுமே. அடுதவர் பணத்தை என்ன காரணம் சொல்லி வாங்கினாலும் அது தவறாகும்.

"நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும், என்னுடனேகூட இருக்கிறவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலை செய்தது".அப்20:34




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

 

"எழுத்தோ (நியாயப்பிரமானம், சட்டம்) கொல்லும், ஆவியோ (இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்) உயிர்ப்பிக்கும்"  என்று வாசித்திருப்பீர்களே.  /////



"எழுத்து கொல்லும் ஆவியோ உயிர்ப்பிக்கும்" என்பதற்கான சரியான பொருள் வேறு.

அதாவது இயேசு கிறிஸ்த்து ஊழியம் செய்த நாட்களில் பரிசேயரும் சதுரெயரும் அவர்மேல் அனேக குற்றங்களை சுமத்திகொண்டே இருந்தார்கள் ஏனெனில் அவர்கள் கையில் எழுத்தாக வைத்திருந்த நியாயபிரமாணத்துக்கும் இயேசுவின் செய்கைகளுக்கும் பல வேறுபாடு தெரிந்ததால் அந்த எழுத்தின் அடிப்படையில் தேவனுடைய குமாரனையே குற்றம் சுமத்திக்கொண்டு இருந்தனர்.

இன்று புதிய ஏற்ப்பட்டு என்பது நமக்கு எழுத்து வடிவில்தான் இருக்கிறது. இன்றும் தேவனே நேராக வந்து புதிதாக சில  காரியங்களை செய்தால்கூட  நாம் கையில் இருக்கும் புதிய ஏற்ப்பாடு என்ற எழுத்தை  வைத்துக்கொண்டு தேவனை  குற்றம் கண்டுபிடித்துகொண்டுதான் இருப்போம்.  எனவே வெறும் எழுத்தை மாத்திரம் நம்பி போகாதீர்கள்.  உங்களுக்கு அருளப்பட்ட, சத்யத்தை போதித்து  வழிநடத்தும்  பரிசுத்த  ஆவியானவரை பெற்றுக்கொண்டு அவர் காட்டும் வழியில் நடவுங்கள், வெறும் எழுத்தை நம்பினவன் எமாந்துபோவான்  என்பதற்க்க்காகதான் எழுத்து கொல்லும் ஆவி உயிர்ப்பிக்கும் என்ற வார்த்தைகள் உள்ளது.

மூல பாஷைஇலிருந்து இன்றைய மொழி பெயர்ப்பில் அனேக மாறுதல்கள் ஏற்ப்பட்டுவிட்டது என்று கருதும் நீங்கள் மூல பாஷையை எழுதியவர்கள் மட்டும் அப்படியே தேவன் சொன்னதை எழுதிவிடார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. குழப்பம் வேரவேண்டுமானால் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். 
 
எனவே ஒரு வார்த்தை உண்மையாக தேவனிடமிருந்து வந்ததுதானா என்பதை அறிய அது யாரிடமிருந்து வந்ததோ அவர் ஒருவரையே விசாரிக்க முடியும். எனவே தேவனுடைய ஆழங்களை அறிந்த பரிசுத்த ஆவியானவர் ஒருவரே ஒரு வசனத்தின் உண்மை தன்மையை ஒருவருக்கு புரியவைக்க முடியும். அவரிடமிருந்து உண்மையை அறியாமல் நீங்கள் எந்த மொழியை ஆராய்ச்சி பண்ணினாலும் பலனேதுமில்லை என்றே நான் கருதுகிறேன்

 

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ wrote in Topic - Watchman!!:
//இன்று அனேக உழியர்கள் எதற்கெடுத்தாலும் "பவுல் இப்படி எழுதியிருக்கிறார்" என்று அவருடைய வார்த்தைகளாலே சாட்சிக்கு எடுக்கின்றனர். அனால் அவரைபோல ஒரு எல்லாம் துறந்து, உழைத்து சம்பாதித்து வாழ்க்கை வாழ்கிறார்களா என்றால் இல்லை!

பவுல் அவர்களின் வார்த்தைகளை பிரசங்கிப்பவர்கள் "நான் கிறிஸ்த்துவை பின்பற்றுவதுபோல் நீங்கள் என்னை பின்பற்றுங்கள்" என்று சொன்ன அவரைபோல ஒரு வாழ்க்கை நிலையில் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து.//

வேதத்தின்படியான சரியானதொரு கருத்தைச் சொல்லியுள்ளீர்கள் சகோதரரே!
ஆனால் இன்றைய ஊழியர்கள் பவுலைப் போல் வாழாமல் போவதற்கு இன்றைய விசுவாசிகளும் ஒரு காரணமாயுள்ளனர். ஓர் ஊழியர் அல்லது பாஸ்டர் காணிக்கை கேட்டாலோ, தசமபாகம் கேட்டாலோ அவர்கள் கேட்பது வேதாகம ஊழியரின் மாதிரியாயுள்ளதா, வேதபோதனைக்கு உட்பட்டதா என்றெல்லாம் சிந்தியாமல், ஊழியருக்குப் பணம் கொடுத்தால் நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கும், கொடாவிட்டால் சாபம் கிடைக்கும் என்ற கோணத்தில் மட்டுமே சிந்திக்கின்றனர்.

நீங்களுங்கூட நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் கொடுக்கவேண்டுமென்றும், அதை இன்றைய ஊழியர்களில் யாருக்காவது கொடுக்கவேண்டுமென்றும் சொல்கிறீர்கள். அப்படி கொடாவிட்டால், அது தேவ கட்டளையை மீறுவதாகும் என்றும் கருதுகிறீர்கள்.

புதிய ஏற்பாட்டு ஊழியர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை watchman!! பகுதியில் நீங்களே தெளிவாகக் கூறிவிட்டீர்களே! அப்படியிருக்க, இன்றைய ஊழியர்களுக்கு தசமபாகம் கொடுத்தால் அவர்கள் இடறுவதற்கு நாமே காரணமாகிவிடுவோமே!

ஊழியராயிருந்தாலும் சரி, விசுவாசியாயிருந்தாலும் சரி, அடிப்படைத் தேவைகளான உணவு, உடை இல்லாதிருக்கையில் அதைப் பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருக்கவேண்டியதில்லை; கட்டாயம் அவர்கள் தேவைகளைச் சந்திக்கத்தான் வேண்டும். அப்படிச் செய்கையில் அதற்கு தசமபாகம் என்ற எல்லையை நிர்மாணிக்க வேண்டியதில்லை. ஆனால் ஒருவர் தேவ ஊழியம் செய்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, அவரது வசதி வாழ்வு எப்படியுள்ளது என்பதையெல்லாம் நிதானிக்காமல், நான் தசமபாகம் கொடுத்தாகவேண்டும், அதை இந்த ஊழியருக்குக் கொடுக்கிறேன் என செயல்படுவது, அந்த ஊழியர் இடறுவதற்குக் காரணமாகிவிடும்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

Raaj Wrote: ...எனவே வெறும் எழுத்தை மாத்திரம் நம்பி போகாதீர்கள்.


'உமது வசனமே சத்தியம்' என்ற மிகப்பெரிய வசனத்துக்கு விரோதமாக எழுதியிருக்கும் உங்களை என்னவென்று சொல்வது...

ஆவிதான் உங்களுக்கு இருக்கிறதே பின்னர் ஏன் வேதம் வாசிக்கிறீர்கள். போங்கள், உங்கள் ஆவியக்கொண்டு 'மரித்தோரை உயிர்ப்பியுங்கள், வியாதியஸ்தர்களை சுகமாக்குங்கள், அற்புத அடையாளத்தோடு அப்போஸ்தலர்கள் போல முழுமூச்சாக ஒரு நிமிடம் கூட விடாமல் சுவிஷேசத்தைப் பிரசங்கித்து முழு இந்தியாவை வேண்டாம் குறைந்த பட்சம் உங்கள் முழு தெருவையாவது கிறிஸ்துவுக்கு ஆதாயப்டுத்துங்களேன்!
"உங்களிடத்திலுள்ள 'ஆவி' இன்னதென்று சோதித்தறியுங்கள் சகோதரரே"

வெறும் எழுத்தை (மொழிபெயர்ப்பை நம்பி நரகம், நித்தியவாதை, அக்கினி, பாதாளம் போன்ற 'எழுத்துக்களை) நம்பி நீங்கள்தான் மோசம் போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்றெண்ணுகிறேன்.




இனிமேலாவது 'சத்தியத்தை அறியுங்கள் ஏனென்றால் 'உமது வசனமே சத்தியம்'.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

anbu57 wrote:ஊழியராயிருந்தாலும் சரி, விசுவாசியாயிருந்தாலும் சரி, அடிப்படைத் தேவைகளான உணவு, உடை இல்லாதிருக்கையில் அதைப் பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருக்கவேண்டியதில்லை; கட்டாயம் அவர்கள் தேவைகளைச் சந்திக்கத்தான் வேண்டும். அப்படிச் செய்கையில் அதற்கு தசமபாகம் என்ற எல்லையை நிர்மாணிக்க வேண்டியதில்லை. ஆனால் ஒருவர் தேவ ஊழியம் செய்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, அவரது வசதி வாழ்வு எப்படியுள்ளது என்பதையெல்லாம் நிதானிக்காமல், நான் தசமபாகம் கொடுத்தாகவேண்டும், அதை இந்த ஊழியருக்குக் கொடுக்கிறேன் என செயல்படுவது, அந்த ஊழியர் இடறுவதற்குக் காரணமாகிவிடும்.

ஒரு உழியர் தவறான முறையில் காணிக்கைகளை செலவு செய்கிறார் என்று நம் மனதுக்கு உணர்த்தப்ப்படுமாயின் அவருக்கும் கொடுக்கப்படும் பாகத்தை நாம் நிறுத்தி வேறுஒருவருக்கு கொடுக்கலாம், அதக்காக தேவனின் கட்டளையை கையில் எடுத்து நமது இஸ்டபடி செய்வது தவறு என்றே நான் கருதுகிறேன்.

நமக்கு நியமிக்கப்பட்டதை நமது மனசாட்சிக்கு பங்கம் வராமல் நாம் செய்வோம் அதற்க்கு மிஞ்சியதை எல்லோருடைய உள்ளிருதயங்களையும் சோதித்தறியும்  தேவன் பார்த்துக்கொள்வார் என்பதுதான் எனது எண்ணம்.    

ஆடம்பர வாழ்க்கை வாழும் தவறான தேவ உழியர்களுக்கு நான் பல அறிவுருத்துதல்களை கூறியுள்ளேன் அதற்காக எல்லோரும் தவறு என்று என்னால்  முடிவு எடுக்க முடியாது. உண்மை தேவ உழியர்களும் பலர் உலகில் உண்டு அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்.


 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:
'உமது வசனமே சத்தியம்' என்ற மிகப்பெரிய வசனத்துக்கு விரோதமாக எழுதியிருக்கும் உங்களை என்னவென்று சொல்வது...


சகோதரர் "சோல்" அவர்களே "உமது வசனமே சத்தியம்" என்ற வார்த்தையில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆனால் எது தேவனின் வசனம் என்பதில்தான் குழப்பம் வந்துள்ளது. இப்படி எழுத்தின் மேல் சந்தேகம் வர வைத்ததே உங்களை போன்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள்தான்.

ஒரே வேதத்தை/எழுத்தை  நான் உண்மை என்று மனதார நம்பினேன்! ஆனால்  நீங்கள் அதில் அனேக தவறுகள் இருக்கிறது மூல பாஷையை ஆராய வேண்டும் என்று சொல்கிறீர்கள்.  சரி!  அனால் அந்த மூல பாஷையில் உள்ளது சரியாக தேவனின் வார்த்தைகள்தானா என்று எப்படி அறிவது? என்று கேட்டால் அதற்க்கு சரியான பதிலில்லை.

நீங்கள் தமிழ் எழுத்தை நம்பாத போது நான் எபிரேயு எழுத்தை எப்படி நம்ப? எனவே எல்லாவற்றயும் தேவனிடமே கேட்டு கன்பார்ம் பண்ணுவது நல்லது என்று கூறுகிறேன்.  ஏனெனில் அவர் ஜீவனுள்ளவர் அல்லவா? நாம் மற்றாடி  கேட்டால் தேவையானதை தெரிவிக்க அவருக்கு வல்லமை இல்லையா என்ன?     
 

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நீங்கள் வாசிக்கும் உங்கள் மொழிப்பெயர்ப்பில் தேவனுக்கு அவர் செய்லகளுக்கும் அன்பு என்று அர்த்தம் புரிந்தால் அது சரியாந்து என்றே நினைக்கிறேன்.

வேதாகமம் தேவனை அன்புள்ளவராகவும், அவரின் திட்டங்கள் அன்பு நிறந்தவைகள் என்று அர்த்தம் வந்தால் அது சரியே.

இதை தவிற அவர் அக்கினி கடலில் போட்டு சதா காலமும் வாட்டி எடுக்கும் ஒரு குரூர தேவன் என்று அர்த்தம் வருவதால் தான் இந்த ஆராய்ச்சி தேவையாக இருக்கிறது. பிரசங்கிமார்களின் உபதேசங்கள், சபையின் உபதேசங்கள் எல்லாம் வித்தியாசமாக அனுபுவத்தில் சொல்லப்படுபவைகளாக இருப்பதினால் ஆராய்ச்சி தேவையாக இருக்கிறது. இந்த ஆராய்ச்சி தேவனை குறித்து சரியாக புரியவைக்கிறது, ஆனால் அது பெருமபாளுமான பிரசங்கியார்கள் சொல்லுவதற்கு மாறாக இருப்பதினால் தான் பலரால் இந்த சத்தியத்தை ஏற்று கொள்ள முடியவில்லை. ஏனென்றால், பெரும்பாளுமானவர்கள் நம்புவது தான் சத்தியம் என்று நம் மனதில் பதிந்து விட்டதால் தான் இந்த குழப்பம்.

இந்த குழப்பங்களில் இருந்து மீள்வதற்கே ஆராய்ச்சி தேவையாக இருக்கிறது. இது நல்ல பலனையும் தந்திருக்கிறது.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

Raaj wrote

ஏனெனில் அவர் ஜீவனுள்ளவர் அல்லவா? நாம் மற்றாடி  கேட்டால் தேவையானதை தெரிவிக்க அவருக்கு வல்லமை இல்லையா என்ன?







நான் மன்றாடிக் கேட்டேன் சகோதரரே 'வேதத்தை ஆராய்ந்து பார்' என்று உணர்த்திவிட்டார். அதன்படி ஆராய்வதால்தான் சத்தியத்தையும் அறிந்து கொண்டேன், சத்தியம் விடுதலையாக்கியது.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

நீங்கள் வாசிக்கும் உங்கள் மொழிப்பெயர்ப்பில் தேவனுக்கு அவர் செய்லகளுக்கும் அன்பு என்று அர்த்தம் புரிந்தால் அது சரியாந்து என்றே நினைக்கிறேன்.

வேதாகமம் தேவனை அன்புள்ளவராகவும், அவரின் திட்டங்கள் அன்பு நிறந்தவைகள் என்று அர்த்தம் வந்தால் அது சரியே.

 

I யோவான் 4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

என்று சொல்லும் வேதமே

எபிரெயர் 12:29 நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

என்றும் சொல்கிறது. தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பதை நானும் ஏற்க்கிறேன் ஆனால் பாவம் செய்யும் மனிதர்களை பட்சிக்கும் அக்கினியாகவும் இருக்கிறார் என்பதை நீங்கள்  ஏற்க்கவேண்டும். ஒரே பக்கத்தை பிடித்துக்கொண்டு போனால் இன்னொரு பக்கத்தை பார்க்கும்பொது பரிதாபம்தான் மிஞ்சும்.

எப்படி ஒரு குழந்தையை அரவணைப்பது ஒரு தாயின் கடமையோ அதுபோல் அது தவறு செய்யும்போது கண்டிப்பதும் தன மகனை நல்லவனாக வளர  வைப்பதற்க்காக செய்யும் தாயின் கடமைதான் தவறு செய்தவரை தண்டிப்பதும் ஒரு அன்பின் வெளிப்பாடுதான்.       

நமது தவேன் அன்பானவர்தான் அதே நேரத்தில், 

யாத்திராகமம் 34:7 ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் .

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard