kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தசமபாகம்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
தசமபாகம்


புதிய ஏற்பாடு சபைக்கு தசமபாகம் கட்டளையாக கொடுக்கப்பட்டதா?

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:33:24 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

It's very simple. Follow Christ, teachings of Apostles and the Holy scripture to be a Christian. Follow the old testaments and what ever the law given to the jews and consider yourself a JEW. Christian or JEW God gives you a choice.

People Tithe or ask for tithe is for the worldly blessings. Even the Jews did for the worldly blessings. In Christ your blessings are spiritual (Eph 1:3). Tithing is entirely a Jewish Law which they had to follow. Their way of showing sincereity to God was by following the law, but in Christ every thing is New, the old things gone. I don't know why those who claim for Tithe do not do the same for circumcission. Because adopting this law would not make them rich (worldly blessing). The one after money and worldly blessing (unlike Apostles) is sure to practice Tithing, irrespective of the denomination he belongs to. The one who writes on Tithing is the one who is much worried about money and the blessings (!!) that come out of it.

I know of a Pastor who claims tithing even from widows. Even the Law which Jews were following, the tithe was used for the Widows and not collected from them. These modern day Christians (so called) are not even a perfect Jew.


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சகோதரரே,
 
புதிய ஏற்பாட்டு புத்தகமாகிய மத்தேயு லூக்கா போன்றவற்றில் " நீதி விசுவாசம் இரக்கத்தோடு தசமபாகம் கொடுப்பதையும் விடக்கூடாது" என்றுதானே  இயேசு கூறியிருக்கிறார். 

மாயக்காரராகிய வேதபாரகரே  பரிசேயரே  உங்களுக்கு ஐயோ! நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி  நியாயபிரமாணத்தில் கற்ப்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள். இவைகளையும் செய்ய வேண்டும் அவைகளையும் விடாதிருக்க வேண்டும்!

அப்படியிருக்க எந்த வசனத்தின் அடிப்படையில்  புதிய ஏற்ப்பாட்டில் தசமபாகம் கொடுக்கவேண்டிய தேவையில்ல என்று தாங்கள் கருதுகிறீர்கள் என்று நான் அறிந்துகொள்ளலாமா?      



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தாராளமாக‌ சகோதரரே,

     நீங்கள் எழுதிய இந்த வசனம் யாரிடம் சொல்லப்பட்டது என்பதையும் தயவு செய்து பார்க்க வேண்டும். வேதத்தில் உள்ள எந்த ஒரு வசனத்தையும் வாசித்து விட்டு அது அனைவருக்கும் பொருந்தும் என்றால் அதை விட பெரிய அபத்தம் ஒன்றும் இல்லை. இந்த வசனம் இறுகி போன யூத வேதபாரகர், மற்றும் பரிசேயர்களுக்கு சொல்லப்பட்டது, ஏனென்றால் அவர்கள் யூதர்களாக இருந்தும் யூத நியாயப்பிரமானத்தையும் முழுமையா பின் பற்றாமல் இருந்தார்கள். கிறிஸ்துவம் என்கிற மார்கம் துவங்குவதே இயேசு கிறிஸ்து உயிர்த்த பிறகே. அதற்கு முன்பு இயேசு கிறிஸ்துவே யூதனாக தான் வாழ்ந்தார். புதிய ஏற்பாட்டில் யூதர்களுக்கு மாத்திரம் சொல்லப்பட்ட வசனங்கள் நிறைய இருக்கிறது. யூதர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்னானம் எடுக்க சொல்லுகிறார் பேதுரு, அப்படி என்றால் நீங்களும் இப்படி தான் ஞானஸ்னானம் எடுத்தீர்களா?


    தசமபாகம் என்பது குறிப்பாக யூதர்களுக்கு கட்டளையாக கொடுக்கப்பட்டது, அதற்கு காரணங்கள் இருந்தது. தசமபாகம் வாங்கி தங்கள் குடும்பங்களை வளர்க்க அது கொடுக்கப்படவில்லை, தங்கள் பிள்ளைகளை அமேரிக்கா, ஆஸ்த்ரேலியாவில் படிக்க வைக்க அது பயன் பட வில்லை. கிறிஸ்தவர்கள் கொடுக்க வேண்டும் என்றால், மனந்திறந்து குலுங்க குலுங்க கொடுக்க சொல்லப்படுகிறார்கள். அனனியா, சப்ப்ரியால் கதை தெரியும் அல்லவா. அவர்கள் 50% கொடுத்தும் மரித்து போனார்களே!!. கொடுப்பதில் என்ன 10% என்று கஞ்சத்தனம். முழுமையாக கொடுங்களேன். ஏன் யூதர்களுக்கு சொன்னதை பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். மேலும் அப்போஸ்தலர்கள் எங்குமே இதை குறித்து சொல்லவில்லையே!. நாம் எல்லோரும் கிறிஸ்துவை மூலக்கலாக கொண்டு, அப்போஸ்தலர்களை அஸ்திவாரகற்களாக் கொண்டு, அவர்கள் மேல் கட்டிடமாக கட்ட படுகிறோம் (சபையாக) Denominationஆக இல்லை. இந்த நவீன கால பிரசங்கிமார்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நமக்கு நல்லது தான். விசுவாச மார்கத்தை விட்டு வெகு தூரம் கூட்டி சென்று விடுவார்கள். கிறிஸ்தவர்களுக்கு தேவை இல்லாத தசமபாகத்தை தேவன் தன்னிடம் நேரடியாக வந்து அதை கிறிஸ்தவர்கள் கொடுக்க வேண்டும் என்றும், 12 மாதங்கள் வரை இப்படி தசமபாகம் கொடுத்து தேவனை சோதித்து பாருங்கள் என்று தேவனே அவரிடம் வந்து சொன்னதாக பிரபலமான ஒரு டீ.வீ ஊழியர் சொல்லி வருகிறார். கடைசி காலம் நெருங்கி விட்டது, வேதத்தை வாசித்து நாம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.



-- Edited by bereans on Thursday 14th of May 2009 04:32:53 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

அன்பு சகோதரரே நான் தங்களுக்கு ஒன்றே ஒற்றை விளக்க விரும்பிகிறேன்.

இந்திய வருமான வரி சட்டம்  1961ம் வருடம் இயற்றப்பட்டது. அப்பொழுது வாழ்ந்த அநேகர் இந்த ௫௦ வருடங்களில் மரித்து போயிருக்கலாம். அதற்க்காக அந்த சட்டம் அவர்களுக்காக உருவாக்கப்பட்டது நமக்கு இல்லை என்று பொருள்படாது.

ஒவ்வொரு வருடமும் அந்த சட்டத்தில் அனேக பிரிவுகள் மாற்றப்படுகின்றன நீக்கப்படுகின்றன புதியதாக சேர்க்கப்படுகின்றன அனால் மாற்றம் செய்யப்படாத அல்லது நீக்கப்படாத எல்லா செக்சன்களும் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது

அதுபோல

தேவனால் இயேசுவால் சொல்லப்பட்ட ஒரு கட்டளையோ அல்லது நீதி நியாயமோ பிறகு தேவனாலோ இயேசுவாலோ மாற்றவோ நீக்கவோபடாவிட்டால் அவைகள் இன்றுவரை நடை முறையில் இருக்கிறது என்றுதான் பொருள்படும்.

ஏனெனில்

வேத புத்த்தகம் எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த யாரும் இப்போது இல்லை 
வேதத்தில் எந்த எந்த பகுதி யார்யாருக்கு என்று எங்கும் பிரித்து கூறப்படவில்லை நாமாக கற்ப்பனை பண்ணி சிலதை யூதருக்கு என்றும் சிலதை புதிய ஏற்ப்பட்டு காலத்துக்கு என்று எடுத்துகொண்டால்,

எல்லாரும் தங்களுக்கு கைகொள்ள கடினமாக உள்ளதை எல்லாம் அது நமக்கல்ல என்று விட்டுவிட்டு, சார்ச்சுக்கு போவது, திருவிருந்து, ஜெபம் போன்ற சுலபமாக செய்யக்கூடியதை மாட்டும்  தனக்கு சொன்னது என்று எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இன்று கிறிஸ்த்தவத்தில் அதுதான் நடக்கிறது   

கைகொள்ள கடினமானவைகள் எல்லாம் தனக்கல்ல என்று ஒதுக்கப்படுகின்றன தேவையற்ற சடங்காச்சாரங்கள் சிரத்தையுடன் கைக்கொள்ளப்படுகின்றன. அதானால் தான் அநேகர்  கிறிஸ்த்தவர்களின் என்றாலே இப்படித்தான் என்று முடிவுகட்டி வாடகைக்கு கூட வீடு கொடுப்பது இல்லை.

எப்படி அரசாங்கள் உருவாகிய சட்டத்தை மாற்ற அரசாங்கத்துக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறதோ, அதுபோல் தேவன் சொன்ன வார்த்தைகளை மாற்ற தேவனுக்கும் அவர் குமாரனாகிய இயேசுவுக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது என்பது எனது கருத்து.

நீங்கள் எதை வேண்டுமானாலும் பின்பற்றுங்கள் அனால் நாளை தேவன் உங்களை பார்த்து "நான் கொடுத்த கட்டளைகளை "இது அவருக்கு இது இவருக்கு" என்று உன்னை பிரிக்க சொன்னது யார்? என்றோ "என் வார்த்தைகளை கைக்கொள்ளுங்கள் என்று நான் திரும்ப திரும்ப சொல்லியிருக்கும் பட்சத்ததில், இவையெல்லாம் கைகொள்ள தேவையில்லை என்று ஒதுக்கசொன்னது யார்? என்றோ கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் என்பதை மட்டும் முன் கூட்டி தீர்மானித்து வைத்துக்கொள்ளுங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

 

 



-- Edited by RAAJ on Monday 25th of May 2009 04:01:09 AM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"நீங்களே அந்த ஆலயம்" என்று வேதம் சொல்வதால் நமக்கு நாமே தசமபாகம் கொடுத்துக்கொள்ளலாமே, எந்த பிரச்சனையுமே வராதே. நாம் யூதருமல்ல தற்கால "முழுநேர" ஊழியர்கள் ஆசாரிய‌ர்களுமல்ல. இந்த உழைக்க விரும்பாத சோம்பேறிகளுக்கு கொடுப்பதை யாருமற்ற அநாதைகளுக்குக் கொடுக்கலாம். இது ஒரு நூதனப் பிச்சையாகிவிட்டது. ஜாக்கிரதை!!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ Quoted:
இந்திய வருமான வரி சட்டம்  1961ம் வருடம் இயற்றப்பட்டது. அப்பொழுது வாழ்ந்த அநேகர் இந்த ௫௦ வருடங்களில் மரித்து போயிருக்கலாம். அதற்க்காக அந்த சட்டம் அவர்களுக்காக உருவாக்கப்பட்டது நமக்கு இல்லை என்று பொருள்படாது.
ஒவ்வொரு வருடமும் அந்த சட்டத்தில் அனேக பிரிவுகள் மாற்றப்படுகின்றன நீக்கப்படுகின்றன புதியதாக சேர்க்கப்படுகின்றன அனால் மாற்றம் செய்யப்படாத அல்லது நீக்கப்படாத எல்லா செக்சன்களும் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது
அதுபோல தேவனால் இயேசுவால் சொல்லப்பட்ட ஒரு கட்டளையோ அல்லது நீதி நியாயமோ பிறகு தேவனாலோ இயேசுவாலோ மாற்றவோ நீக்கவோபடாவிட்டால் அவைகள் இன்றுவரை நடை முறையில் இருக்கிறது என்றுதான் பொருள்படும்.

சகோ.ராஜ் அவர்களே,
இந்தியருக்கு வகுக்கப்பட்ட சட்டம் இந்தியரை எக்காலத்திலும் கட்டுப்படுத்தும் என்பது மெய்தான். ஆனால் அமெரிக்க சட்டம் அமெரிக்கரை மட்டுமே கட்டுப்படுத்துமேயொழிய இந்தியரையோ பிற நாட்டினரையோ ஒருபோதும் கட்டுப்படுத்தாது.
அவ்வாறே இஸ்ரவேலருக்கு தேவனிட்ட தசமபாகக் கட்டளை இஸ்ரவேலரை மட்டுமே  கட்டுப்படுத்துமேயொழிய பிறரை ஒருபோதும் கட்டுப்படுத்தாது.

தசமபாகக் கட்டளையை தேவனோ இயேசுவோ மாற்றவுமில்லை நீக்கவுமில்லை என்பது மெய்தான். ஆனால் தேவனோ இயேசுவோ மாற்றாத/நீக்காத பல நியாயப்பிரமாணக் கட்டளைகள் உள்ளனவே. தசமபாகக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய

வேண்டுமெனில், விருத்தசேதனம் உள்ளிட்ட பல நியாயப்பிரமாண கட்டளைகளுக்கும் நாம் கீழ்ப்படிதல் அவசியமாகிவிடுமே?

இயேசு தமது சீஷர்களிடம் இறுதியாக என்ன கட்டளையிட்டார்? தாம் கட்டளையிட்டவற்றைக் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணவே கட்டளையிட்டார் (மத்தேயு 28:20). எனவே இயேசு தமது சீஷர்களிடம் உபதேசித்தவற்றைப் போதித்தலும்

கைக்கொள்தலுமே போதுமானது..

மத்தேயு 23:23-ல் தசமபாகம் குறித்து இயேசு சொல்வது வேதபாரகரிடமும் பரிசேயரிடமும்தானேயொழிய சீஷர்களிடம் அல்ல.

இயேசுவின் போதனைகளை முழுமையாகக் கைக்கொள்கையில் தசமபாகக் கட்டளையின் நோக்கம் தானாகவே நிறைவேறிவிடும். அது எவ்வாறென்பதைப் பார்ப்போம்.

உபாகமம் 14:22-29 வசனங்களைக் கூர்ந்து படித்துப்பார்த்தால், லேவியன், பரதேசி, திக்கற்றவன், விதவை போன்றோரின் ஆகாரத் தேவை சந்திக்கப்பட வேண்டுமென்பதே தசமபாகக் கட்டளையின் நோக்கம் என எளிதில் புரிந்து கொள்ளலாம். அதாவது

மனிதனின் மிகமிக அவசியத் தேவையான ஆகாரம் கிடைக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு ஆகாரம் கிடைக்க வேண்டும் என்பதே தசமபாகக் கட்டளையின் நோக்கமாகும். எனவேதான் தமது ஆலயத்திலுள்ள பண்டசாலையில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி

தசமபாகத்தைக் கொண்டுவரும்படி மல்கியா 3:10-ல் தேவன் கூறுகிறார். தசமபாகக் கட்டளையின் நோக்கம் இயேசுவின் எந்தக் கட்டளையில் அடங்கியுள்ளது? பின்வரும் வசனத்தைப் படிப்போம்.

லூக்கா 12:33 உங்களுக்கு உள்ளவைகளை விற்று பிச்சை கொடுங்கள்.

பிறருக்குக் கொடுத்தல், நன்மை செய்தல், இரக்கமாயிருத்தல் பற்றிய பல போதனைகளை இயேசு கூறியுள்ளார். அப்போதனைகளில் ஆகாரத் தேவையுள்ளோருக்கு ஆகாரம் கொடுத்தலும் அடங்கிவிடுகிறது. அவ்வாறு கொடுக்க முற்படுகையில்,

நமக்குள்ளவைகளை விற்றுக்கொடுக்கவும் தயங்கக் கூடாது என்றுதான் லூக்கா 12:33-ல் இயேசு கூறியுள்ளார். எனவே தசமபாகம் மட்டுமின்றி, நம்மிடமுள்ள அனைத்தையும் தேவையுள்ளோருக்குக் கொடுக்கவேண்டுமென்பதே இயேசுவின் போதனை.

பழைய ஏற்பாட்டுக் கட்டளைப்படிதான் தசமபாகம் கொடுக்கவேண்டுமென நாம் நினைத்தால், அதை தேவனின் ஆலயத்தில் அல்லது தேவன் தெரிந்து கொள்ளும் ஸ்தலத்தில் மட்டுமே படைக்கவேண்டும். தேவன் தெரிந்து கொள்ளும் ஸ்தலம் எவ்வளவு

தூரத்தில் இருந்தாலும் அங்குதான் படைக்கவேண்டுமென உபாகமம் 14:24-26 கூறுகிறது. ஆனால் எருசலேம் தேவாலயத்தை மட்டுமே தேவனின் ஆலயம் என வேதாகமம் கூறுகிறது (வேதாகமத்தை நன்கு படித்துப் பார்க்கவும்). எனவே தசமபாகத்தை

தேவாலயத்தில்தான் படைக்க வேண்டுமென நினைப்பவர்கள் எருசலேம் தேவாலயம் சென்றுதான் அதைப் படைக்க வேண்டும்.
அந்த எருசலேம் தேவாலயம்கூட தேவன் வாசமாயிருப்பதற்கான தகுதியை என்றோ இழந்துவிட்டது (எரேமியா 7:4). தற்போதைக்கு பார்த்தால், நாம்தான் தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் (யோவான் 14:23; 1 கொரி. 3:16). அந்த ஆலயத்தின்

பண்டசாலையில் (பிறருக்குக் கொடுக்கும்படி) ஆகாரம் இருக்கத்தக்கதாக, நமக்குநாமே தசமபாகம் மட்டுமின்றி அதற்கு மேலாகவும் கொடுத்து வைப்பதுதான் புதியஏற்பாட்டின் போதனைப்படி சரியானதாகும் என்பது எனது கருத்து.





-- Edited by anbu57 on Saturday 26th of September 2009 06:11:09 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

    அப்படியே, தசமாபாகம் கொடுக்க தான் வேண்டும் என்றால், அதன் நோக்கத்தையும் சேர்த்து பார்க்க வேண்டும். இன்று கிறிஸ்தவத்தில் லேவியரோ இன்னும் பிற 11 கோத்திரங்கள் இல்லை. அந்த தசமபாகம் எதற்காக வாங்கப்பட்டது என்பதையும் சேர்த்து வாசியுங்கள். இன்றோ, இந்த தசமபாக அதர்காக பயன்படாமல் தனது சொந்த குடும்பத்தின் வளர்சிக்காகவும், ஹோண்டா அக்கார்ட் போன்ற கார்களை வாங்கவும் (சாதாரன கார் வைத்தால் ஸ்டாடஸ் குறைந்து போகிவிடும்), தங்களது பிள்ளைகளை அமேரிக்கா, ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் மேற்படிப்பிற்காகவும் தான் பெரும்பாளும் பயன் படுகிறதே தவிர வேற் ஒன்றுக்கும் இல்லை. வேலை செய்ய சோம்பல் பட்டுக்கொண்டு, பிறர் பணத்தில் வாழ்ந்து தான் தேவன் இவர்களை ஊழியம் செய்ய சொன்னதா. தன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பாடுப்பட்டு இவர்கள் தங்கள் குடும்பங்களை எப்படி வேண்டுமென்றாலும் உயர்த்திக்கொள்ளட்டும், தசமபாகம் என்கிற பேரில் அப்பாவி விசுவாசிகளை மிரட்டி, தசமபாகம் கொடுக்காவிட்டால் தேவனின் சாப்ங்களுக்கு ஆளாக நேரிடும் போன்ற மிரட்டல்கள் மூலமாகவும், இன்னும் 12 மாதங்கள் தேவனுக்கு (அதாவது இப்படி பட்ட ஊழிய‌க்காரர்கள் (!) தங்களையே தேவன் என்று உயர்த்துவது, ஏனென்றால் இந்த தசம பாகங்களை தேவனா வந்து எடுத்து செல்ல போகிறார், இவர்கள் வயிற்று பிழைப்புக்கென்று தங்களயே தேவனாக்கி கொள்கிறார்கள்) கொடுத்து தேவனை சோதித்து பாருங்கள் என்று ஒரு பிரபலமான டீ.வி ஊழியரிடம் தேவன் தசமபாகத்தை குறித்து சொல்லியிருப்ப‌தாய் பிர‌ச‌ங்கித்து வ‌ருகிறார். என்ன‌ ஒரு அவ‌ல‌நிலை.

     ப‌வுல் போல் அப்போஸ்த‌ல‌ர்க‌ள் த‌ங்க‌ள் கைக‌ளினால் வேலை செய்து ஊழிய‌ம் செய்து வ‌ந்தார்க‌ள், ம‌க்க‌ள் பிரிய‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ளின் ஊழிய‌த்திற்கு (சபைகள் கட்டி எழுப்ப‌) கொடுத்து உத‌வி செய்தார்க‌ள். இயேசு கிறிஸ்துவால் தெரிந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ளே இப்ப‌டி துனிச்ச‌லாக‌ கேட்ட‌து இல்லை, இன்று இருக்கும் க‌ள்ள‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ளுக்கும் க‌ள்ள‌ தீர்க்க‌த‌ரிசிக‌ளுக்கும் என்ன‌ துனிச்ச‌ல், ச‌ற்றும் தேவ‌ பைய‌ம் இல்லாம‌ல் ம‌க்க‌ளை முட்டாள்க‌ளாக்கி வ‌ருகிறார்க‌ள், தேவ்ன‌ பெய‌ரில் ப‌ய‌த்தை வ‌ள‌ர்க்கிறார்க‌ள். இவ‌ர்க‌ள் போன்ற‌ ஊழிய‌ர்க‌ள் (!!) ஒரு விஷ‌ய‌த்தை தெளிவாக‌ உண‌ர்ந்துக்கொள்ள‌ட்டும்:

   தேவ‌ன் அன்பான‌வ‌ர்
  உழைத்து ஊழிய‌ம் செய்யுங்க‌ளேன், தேவ்ன‌ இன்னும் அதிக‌மாக‌ ஆசீர்வ‌திப்பார்.
     தேவ‌ன் பெய‌ரை சொல்லி த‌ய‌வு செய்து உங்க‌ளையே தேவ‌ன் ஸ்தான‌த்திற்கு உய‌ர்த்திக்கொள்ளாதீர்க‌ள்.
      ப‌த்மு தீவில் க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்ட‌ யோவ‌னை பாருங்க‌ள், அத்த‌னை பாடுக‌ளுக்கு ம‌த்தியிலும் அவ‌ர் அவ‌ரை ஒரு அப்போஸ்த‌ல‌ர் என்று உய‌ர்த்தாம‌ல், த‌ன்னையும் பிற‌ருட‌ன் ஒரு ச‌கோத‌ர‌ன் என்கிற‌தை வெளிப்ப‌டுத்துகிறார். ஊழிய‌ன் (Priestly), விசுவாசி (laity) என்கிற‌ பிரிவினை உண்டுப்ப‌டுத்தாதீர்க‌ள்.
    த‌ச‌ம‌பாக‌ம் என்கிற ஒரு ச‌ட்ட‌த்ம் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு இல்லை, அது யூத‌ர்க‌ளுக்கு தான் என்று வேத‌த்திலிருந்து தெளிவு பெறுங்க‌ளேன். அப்ப‌டியே ச‌பையிட‌ம் கேட்ட்க‌ வேண்டும் என்றால், ஏன் 10%உட‌ன் நிறுத்துக்கொள்கிறீர்க‌ள், தேவை என்றால் கூட‌வே கேட்கவேண்டிய‌து தானே.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

anbu57 wrote:

 ///சகோ.ராஜ் அவர்களே,

இந்தியருக்கு வகுக்கப்பட்ட சட்டம் இந்தியரை எக்காலத்திலும் கட்டுப்படுத்தும் என்பது மெய்தான். ஆனால் அமெரிக்க சட்டம் அமெரிக்கரை மட்டுமே கட்டுப்படுத்துமேயொழிய இந்தியரையோ பிற நாட்டினரையோ ஒருபோதும் கட்டுப்படுத்தாது.
அவ்வாறே இஸ்ரவேலருக்கு தேவனிட்ட தசமபாகக் கட்டளை இஸ்ரவேலரை மட்டுமே  கட்டுப்படுத்துமேயொழிய பிறரை ஒருபோதும் கட்டுப்படுத்தாது.////


சகோதரர் அன்பு அவர்களே!
அமெரிக்காவுக்கு ஒரு ஜனாதிபதி இந்தியாவுக்கு ஒரு ஜனாதிபதி என்று இருப்பதுபோல் நமக்கு ஒரு தேவன் இஸ்ரவேலருக்கு ஒருதேவன் போன்ற பல தேவன் இல்லை எனவே தேவன் எங்கு கட்டளைகள்  சொன்னாலும் அது எல்லோருக்கும் பொருந்தும் 
என்றே நான் கருதுகிறேன்.  ஏனெனில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் என்று கர்த்தர் கூறியுள்ளார்.
  
///தசமபாகக் கட்டளையை தேவனோ இயேசுவோ மாற்றவுமில்லை நீக்கவுமில்லை என்பது மெய்தான். ஆனால் தேவனோ இயேசுவோ மாற்றாத/நீக்காத பல நியாயப்பிரமாணக் கட்டளைகள் உள்ளனவே. தசமபாகக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய
வேண்டுமெனில், விருத்தசேதனம் உள்ளிட்ட பல நியாயப்பிரமாண கட்டளைகளுக்கும் நாம் கீழ்ப்படிதல் அவசியமாகிவிடுமே?////

உபாகமம் 10:16 ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்.

எரேமியா 4:4 யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.
இந்த வசனங்கள் மூலம் மாமிசத்தின் நுனித்தோல் அல்ல இருதயத்தின் நுநித்தொலே நீக்கப்பட வேண்டும் என்று கர்த்தரின் கட்டளை மாற்றப்பட்டுள்ளது. ஆனால்  
உங்கள் மனதுக்கு இது சரியான வார்த்தை இல்லை என்று கருதினால்  விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள வேண்டுமே தவிர, இதை செய்ய முடியவில்லை அதற்காக அதை செய்யவேண்டுவதில்லை என்ற கூற்று சரியானதல்ல என்றே நான் கருதுகிறேன்.
 

///இயேசு தமது சீஷர்களிடம் இறுதியாக என்ன கட்டளையிட்டார்? தாம் கட்டளையிட்டவற்றைக் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணவே கட்டளையிட்டார் (மத்தேயு 28:20). எனவே இயேசு தமது சீஷர்களிடம் உபதேசித்தவற்றைப் போதித்தலும்

 

கைக்கொள்தலுமே போதுமானது..////
நான் முன்பே கூறியுள்ளபடி இயேசு தனது பிரசங்கத்தில் பெரும்பகுதியை இஸ்ரவேலரிடமே
செய்துள்ளார் எனவே அது எதுவும் நமக்கு பொருந்தாது என்று விட்டுவிடுவது நியாயமா? 
"நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கர்ப்பனையை கைகோள்" என்ற வார்த்தையும் இயேசு போதித்ததுதானே?
 

////பழைய ஏற்பாட்டுக் கட்டளைப்படிதான் தசமபாகம் கொடுக்கவேண்டுமென நாம் நினைத்தால், அதை தேவனின் ஆலயத்தில் அல்லது தேவன் தெரிந்து கொள்ளும் ஸ்தலத்தில் மட்டுமே படைக்கவேண்டும். தேவன் தெரிந்து கொள்ளும் ஸ்தலம் எவ்வளவு////

எல்லா தசமபாகமும்  ஆலயத்துக்கு வரவேண்டும் என்று வேதம் போதிக்கவில்லை. தசமபாகத்தில் இரண்டு வகை  உண்டு    
 
உபாகமம் 26:12 தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திருப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு,  (இந்த தசமபாகம் ஆலயத்துக்கு கொண்டுவரவேண்டிய தேவயில்லை)
லேவியராகமம் 27:30 தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது(இந்த தசமபாகம் கர்த்தருடய ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி  ஆலயத்துக்கு கொண்டுபோக படவேண்டும்)
 
உங்களுக்கு வயற்காடு இருந்தால் வருஷா வருஷம்  அதிலுள்ள தசமபாகம் ஆலயத்துக்கு கொண்டுபோகபட வேண்டும். வயற்காடு எதுவும் இல்லை என்றால் முற்று வருடத்துக்கு ஒருமுறை அந்த வருடத்தில்  உங்கள் எல்லா வரவிலும் (அது எந்த வரவானாலும் சரி) தசமபாகத்தை  கர்த்தர் பட்டியலிட்டுள்ள யாருக்காவது கொடுக்கப்பட வேண்டும்.
 
வெளி 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

 

 

 

 



-- Edited by RAAJ on Wednesday 30th of September 2009 01:51:37 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"எழுத்தோ (நியாயப்பிரமானம், சட்டம்) கொல்லும், ஆவியோ (இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்) உயிர்ப்பிக்கும்"  என்று வாசித்திருப்பீர்களே. தேவன் முன்பு இஸ்ராயேல் மக்களிடம் கொடுத்த கட்டளைகள் புறஜாதிகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் தான் புறஜாதிகளும், தேவனை அப்பா, பிதாவே என்று கூப்பிடும் தைரியம் பெற்றார்களே. பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் (யூதர்கள்) மக்கள் நம் தேவனை, "தேவன்" என்றே தெரிந்து இருந்தார்கள். கிறிஸ்தவர்கள் தான் அவரை அப்பா பிதா என்று கூப்பிடும் அதிகாரம் பெற்றார்கள். இப்படி இருக்க இன்னும் ஏன் இஸ்ராயேல் மக்களை போல் இருக்கனும் என்றே இருக்கீங்க.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"உங்களுக்கு உள்ளவைகளை விற்று பிச்சை கொடுங்கள்" லூக்12:33,

"உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்கிறவனிடத்தில் அதை திரும்பக்கேளாதே" லூக்6:30

"கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்" லூக்6:35, "இவளோ தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்" லூக் 21:4, "நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்குண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்போழுது பரலோகத்தில் உனக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னை பின்பற்றி வா" மத்19:21


ஏன் இதுபோன்ற வசனங்கள் நம் போதகர்(?)களுக்கோ, விசுவாசிகளுக்கோ கண்களுக்குத் தெரிவதில்லை, தசமபாகத்துக்காக இத்தனை வரிந்துகட்டிக் கொண்டு வாதாடும் இவர்களில் யாராவது தனக்குண்டானவைகளை விற்று தரித்திரருக்குக் கொடுப்பார்களா?




"உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும்" என்று சொல்வதால் இப்போது நான் கேட்கிறேன் எனக்கு தருவார்களா?




ஆக, நமக்கு நஷ்டம் வரும்போல வசனம் இருந்தால் அது எனக்கல்ல, என்னை அதிகம் பாதிக்காத மற்றும் எனக்கு லாபம் தருகிற வசனங்கள் மட்டும் எனக்கு! மேற்கண்ட வசனங்கள் யாருக்கென்று வேதத்தை ஆராயவிரும்பாத சகோதரர் சொன்னால் நமக்கு பிரயோஜனமாக இருக்குமே?


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ quoted:
உங்களுக்கு வயற்காடு இருந்தால் வருஷா வருஷம் அதிலுள்ள தசமபாகம் ஆலயத்துக்கு கொண்டுபோகபட வேண்டும். வயற்காடு எதுவும் இல்லை என்றால் முற்று வருடத்துக்கு ஒருமுறை அந்த வருடத்தில் உங்கள் எல்லா வரவிலும் (அது எந்த வரவானாலும் சரி) தசமபாகத்தை கர்த்தர் பட்டியலிட்டுள்ள யாருக்காவது கொடுக்கப்பட வேண்டும்.


நல்லது சகோ.ராஜ் அவர்களே!
எனக்கு வயற்காடு இருந்தால் அதிலுள்ள தசமபாகத்தை நான் எங்கு கொண்டு செல்லவேண்டும்? உபாகமம் 14:23-ன்படி தேவன் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலா? அல்லது மனிதர்கள் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலா?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"கர்த்தர் பட்டியலிட்டுள்ள" என்பது புரியவில்லை. பட்டியலை வெளியிட்டால் இன்னும் நலமாக இருக்கும். வேதத்தை ஆராய்ச்சி செய்யவிரும்பாத இன்றைய "கிறிஸ்தவர்கள்" இந்தப் பட்டியலையா ஆராயப்போகிறார்கள். மேலும் தமிழ் வேதாகமம் ஏறக்குறைய 150 ஆண்டுகளாகத்தான் புழக்கத்திலுள்ளது. அதன் முன் வாழ்ந்த தமிழர்களுக்கு வேதத்தைப்பற்றி எதுவுமே தெரியாது அவர்கள் கதி என்னவோ?




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ ராஜ் அவர்களே,

  தாங்கள் பழைய ஏற்பாட்டிலிருந்து காண்பிக்கும் அனைத்துமே யூதர்களுக்கு கட்டளையாக வந்தது என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். "நீங்கள்" என்று தாங்கள் வாசிக்கும் வசனங்கள், இஸ்ராயேல் மக்களை தான் குறிப்பிடுகிறது.

"உபாகமம் 10:16 ஆகையால் நீங்கள் இனி "

"எரேமியா 4:4 யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய "

 இப்படி யூதா மனுஷர் என்றும் எருசலேம் குடிகள் என்றும் உள்ளது போல், தசமாபாகம் என்பது இஸ்ராயேலில் உள்ள 11 கோத்திரங்களும் சேர்ந்து லேவி எனும் கோத்திரத்திற்கு தரும் படியாக நியமிக்க பட்ட ஒரு சட்டம் தான் தசமபாகம். ஏனென்றால் உழுது, விழைவித்து சாப்பிடும் படியாக லேவி கோத்திரத்தாரிடம் நிலமோ, ஆடு மாடுகளோ கிடையாது. அவர்கள் தேவனின் ஆலயத்தில் பணி செய்யும் கோத்திரமாக இருந்தபடியால் இப்படி ஒரு சட்டம் அன்று இந்த‌ 11 கோத்திர‌ங்க‌ளுக்கு மாத்திர‌மே க‌ட்ட‌ளையிட‌ப்ப‌ட்ட‌து. இது எந்த‌ வித‌த்திலும் உல‌க‌த்தில் இருக்கும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு சேராது, இதை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பின்ப‌ற்ற‌ வேண்டிய‌ அவ‌சிய‌மும் இல்லை. யாரிட‌ம் விஷ‌ய‌ங்க‌ள் சொல்ல‌ படுகின்ற‌து என்ப‌தையும் ஆராய‌ வேண்டும்.

ம‌ரியாளிட‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌ "ஸ்திரிக‌ளுக்குள் நீ ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌வ‌ள்" என்ப‌து அவ‌ளுக்கு மாத்திர‌ம் தான் சொந்த‌ம், உல‌க‌த்தில் உள்ள‌ எல்லா ஸ்திரிக‌ளையும் இது குறிக்காது. ஏனென்றால், இயேசு கிறிஸ்துவை பெற்றெடுக்க‌ தெரிந்துக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ஸ்திரி என்ப‌தால் அப்ப‌டியாக‌ ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்டாள்.

யூதாஸ் நாண்டு கொண்டு செத்தான் என்ப‌தால், இதை வாசிப்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் இதை பின்ப‌ற்ற‌ வேண்டிய‌து இல்லை.

இப்ப‌டி இன்னும் சொல்லிக்கொண்டே போக‌லாம். பைபிளை வாசிக்கும் போது, என்ன விஷயம், அதை யாரிட‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை எல்லாம் க‌வ‌ணிக்க‌ வேண்டும். "நீ சாக‌வே சாவாய்" எனன்ப‌து ஆதாமிட‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌லும், "ஆதாமுக்குள் எல்லோரும் ம‌ரிக்கிறார்க‌ள் என்ப‌து வேத‌ம் ந‌ம‌க்கு சொல்லியிருப்ப‌தால், அது எல்லா ம‌னித‌ர்க‌ளுக்கும் பொருந்தும் என்று ஏற்றுக்கொள்ள‌லாம். இது போன்று எல்லாருக்காக‌வும் வ‌ச‌ன‌ங்க‌ளும் இருக்கிற‌து, த‌னிப்ப‌ட்ட‌ ந‌ப‌ர்க்கான‌ வார்த்தைக‌ளும் உண்டு. இதை வேற்ப்ப‌டுத்து பார்த்தாலே புரிந்துக்கொள்ள‌ முடியும். எல்லாவ‌ற்றுக்கும் மேல், தேவ‌னின் த‌ன்மை புரிந்துக்கொள்ள‌ வேண்டும். அது தான் தேவ‌னின் ஆவி உங்க‌ளிட‌த்தில் இருப்ப‌த‌ற்கு எடுத்துக்காட்டு.

இதை எல்லாம் ஆராயமல் இருப்பதால் தான் இன்னும், கிறிஸ்தவ மண்டலத்தில் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், அற்புத அடையாளம் செய்பவர்கள் தோன்றிக்கொண்டும், தசமபாகம் போன்ற தேவையில்லாத காணிக்ககளை மக்களை பயமுறுத்தி வாங்கிக்கொண்டு ஒரு கூட்டம் தாங்கள் வேலைக்கு போகாமல் பிழைத்துக்கொண்டிருக்கிறது.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ wrote:
//அமெரிக்காவுக்கு ஒரு ஜனாதிபதி இந்தியாவுக்கு ஒரு ஜனாதிபதி என்று இருப்பதுபோல் நமக்கு ஒரு தேவன் இஸ்ரவேலருக்கு ஒருதேவன் போன்ற பல தேவன் இல்லை. எனவே தேவன் எங்கு கட்டளைகள் சொன்னாலும் அது எல்லோருக்கும் பொருந்தும் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் என்று கர்த்தர் கூறியுள்ளார்.//

சகோ.ராஜ் அவர்களே!
தேவன் சொன்ன கட்டளைகள் எல்லோருக்கும் பொருந்தும் என்கிறீர்கள். ஆனால் தேவகட்டளைகள் யாவும் எபிரெய மொழியில் அல்லவா எழுதிவைக்கப்பட்டிருந்தன. அவற்றை புறஜாதியார் எப்படி அறியமுடியும்? இஸ்ரவேலரிடம் பேசியதுபோல் புறஜாதியாரிடம் தேவன் பேசவுமில்லை, கட்டளைகளை எழுதிக் கொடுக்கவுமில்லை.

பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் என்று கர்த்தர் கூறியுள்ளதாகக் கூறுகிறீர்கள். இது சம்பந்தமான வசனங்களைச் சற்று கவனமாகப் படித்துப் பாருங்கள் சகோதரரே.

யாத். 12:49 சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது.
(இஸ்ரவேலரிடத்தில் தங்கும் பரதேசிக்கு மட்டுமே இக்கட்டளை கூறப்பட்டுள்ளது.)

லேவி. 24:22 உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்.

எண். 9:14 ஒரு பரதேசி உங்களிடத்தில் தங்கி ..... பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும்.

இஸ்ரவேலரிடையே தங்கியுள்ள பரதேசிகளுக்கு மட்டுமே இக்கட்டளைகள் கூறப்பட்டுள்ளன.




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ wrote:
//நான் முன்பே கூறியுள்ளபடி இயேசு தனது பிரசங்கத்தில் பெரும்பகுதியை இஸ்ரவேலரிடமே
செய்துள்ளார் எனவே அது எதுவும் நமக்கு பொருந்தாது என்று விட்டுவிடுவது நியாயமா?
"நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கர்ப்பனையை கைகோள்" என்ற வார்த்தையும் இயேசு போதித்ததுதானே?//

இஸ்ரவேலரிடம் பிரசங்கித்த இயேசு, தாம் உபதேசித்தவற்றை சகல ஜாதிகளுக்கும் போதிக்கும்படி சீஷரிடம் கூறியுள்ளதால் (மத். 28:20) இயேசுவின் போதனைகள் நமக்குப் பொருந்தும்தான்.

நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் எனக் கூறிய இயேசு, எந்தக் கற்பனைகளை என அவ்வாலிபன் கேட்ட கேள்விக்கு இயேசு சொன்ன பதிலை மத். 19:18,19 வசனங்களில் சற்று படித்துப் பாருங்கள் சகோதரரே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//"கர்த்தர் பட்டியலிட்டுள்ள" என்பது புரியவில்லை.//

RAAJ wrote:
//வயற்காடு எதுவும் இல்லை என்றால் மூன்று வருடத்துக்கு ஒருமுறை அந்த வருடத்தில் உங்கள் எல்லா வரவிலும் (அது எந்த வரவானாலும் சரி) தசமபாகத்தை கர்த்தர் பட்டியலிட்டுள்ள யாருக்காவது கொடுக்கப்பட வேண்டும்.//

சகோ.ராஜ் இங்கு குறிப்பிடுவது, உபா. 14:29-ல் கூறப்பட்டுள்ள பட்டியலில் அடங்கியுள்ள பரதேசி, திக்கற்றவன், விதவை ஆகியோர்களே எனக் கருதுகிறேன். சரிதானா ராஜ் அவர்களே?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

anbu57 wrote:

soulsolution wrote:
//"கர்த்தர் பட்டியலிட்டுள்ள" என்பது புரியவில்லை.//

 சகோ.ராஜ் இங்கு குறிப்பிடுவது, உபா. 14:29-ல் கூறப்பட்டுள்ள பட்டியலில் அடங்கியுள்ள பரதேசி, திக்கற்றவன், விதவை ஆகியோர்களே எனக் கருதுகிறேன். சரிதானா ராஜ் அவர்களே?



        ஆம் தங்களின் கருத்து சரியானதே!

லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும்


இதில் "லேவியன்" என்பவன் தேவனுக்கு பணிவிடை செய்யும் ஒரு  உழியக்காரனாக  எடுத்துகொள்ளலாம் என்று நான் கருதுகிறேன்.



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

anbu57 wrote:

 
நல்லது சகோ.ராஜ் அவர்களே!
எனக்கு வயற்காடு இருந்தால் அதிலுள்ள தசமபாகத்தை நான் எங்கு கொண்டு செல்லவேண்டும்? உபாகமம் 14:23-ன்படி தேவன் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலா? அல்லது மனிதர்கள் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலா?



எனக்கு வயற்காடு இல்லாத காரணத்தால் அதைப்பற்றி அதிகம் சிந்திக்கவில்லை ஆகினும் கீழ்க்கண்ட வசனப்படி 

உபாகமம் 12:11 உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசம பாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து

கர்த்தரின் நாமம் விளங்கும் ஸ்தலம் அதாவது  கர்த்தரை பிரஸ்தாபபடுத்தும்  ஸ்தலம்   எதுவாக இருந்தாலும் நமது மனதுக்கு சரிஎன்று படுகிற இடத்தில் கொடுக்கலாம் என்று கருதுகிறேன்  

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard