kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மேதை நியூட்டன் கணித்த கிபி:2060


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
மேதை நியூட்டன் கணித்த கிபி:2060


”கோள்களில் நிகழும் நகர்வுகளுக்கெல்லாம் ஈர்ப்புவிசையே காரணம், ஆனால் அந்த கோள்களையே நகரவைப்பது அந்த விசையல்ல. இறைவனே சகலத்தையும் ஆளுகிறவர்,அவரே எல்லாம் அறிந்தவர், அவருக்கே எல்லாம் தெரியும்”-சர் ஐசக் நியுட்டன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்த படியாக நவீன உலகின் மிகப் பெரிய அறிவியல் மேதையாக கருதப்படுபவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஐசக் நியுட்டன் (1643-1727). புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்ததன் மூலம் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியானார். ஆனால் இதே ஐசக் நியூட்டன் வேதாகமப் பிரியராகவும் அதிலும் குறிப்பாக தானியேலின் புத்தகத்திலும் வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்திலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் நாம் பலரும் அறியாதது. ஏன் உலகுக்கே சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிய வந்தது.

விஞ்ஞானியாய் இருந்த காலத்திலேயே அவர் பல வருடங்கள் வேத ஆராய்ச்சியில் செலவிட்டுள்ளார். வேதாகம தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதை உணர்ந்த அவர், வேதபுத்தகமானது உலக வரலாற்றை முன்கூட்டியே தன்னில் எழுதிவைத்திருக்கின்றது என முழுவதுமாக நம்பினார். இதனால் பைபிள் புத்தகத்தின் படி நடக்கக்போகும் சம்பவங்களையும் அது நடைபெறப்போகும் காலங்களையும் வெகுவாக ஆராய்ந்து எழுதினார். யூதர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிவருதல், மூன்றாவது எருசலேம் தேவாலயம் கட்டப்படுதல், அந்திக்கிறிஸ்துவின் வருகை, அர்மகெதோன் யுத்தம் போன்றவற்றை பற்றியும் அவை நடைபெறப்போகும் காலங்களை பற்றியும் தனக்கு தெரிந்த அளவில் அலசி ஆய்ந்து எழுதியிருக்கிறார். அவர் வாழ்ந்த காலங்களில் ஒருவேளை தனது பிற விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு வரவேற்பு இல்லாமல் போய் விடும் என்று பயந்தும், அக்கால சபைத் தலைவர்களுக்கு பயந்தும் அந்த ஆய்வுகளை அவர், அவர்காலத்திலேயே வெளியிடவில்லை.

அந்த கையெழுத்து கோப்புகள் யாருக்கும் தெரியாமல் கடந்த இரு நூற்றாண்டுகளாக ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சமீப ஆண்டுகளில் அவைகள் ஏலத்துக்கு வர அவர் எழுதிய வேதாகம தீர்க்கதரிசன குறிப்புகளும் வெளிஉலகுக்கு தெரியவந்தன. சர் ஐசக் நியூட்டனின் இந்த குறிப்புகள் மூலம் அவர் கிபி:2060-ல் உலகம் ஒரு முடிவுக்கு வரும் என நம்பியதாக தெரிகிறது. உலகத்தை படைத்த இறைவனே அதை அழிக்கவும் வருவதாக அவர் நம்பினார். அவர் கணக்கிட்ட காலக்கணக்கின் படியே 1940களில் இஸ்ரேல் தேசம் உருவானது இங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலியர் ஒருவரே நியூட்டனின் கையெழுத்துக் கோப்புகளை ஏலம் எடுத்ததால் இன்றைக்கு அவை நியூட்டன் எதிர் காலத்தில் உருவாகும் என நம்பின இஸ்ரேல் தேசத்திலேயெ இருப்பது ஒரு ஆச்சரிய பொருத்தம்.

மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.



-- Edited by Dino on Saturday 2nd of April 2011 11:42:03 PM



-- Edited by Dino on Saturday 2nd of April 2011 11:55:02 PM

Attachments
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard