kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: I தீமோத்தேயு 6:9-11


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
I தீமோத்தேயு 6:9-11


I தீமோத்தேயு 6:9. ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 11. நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.

ஐசுவரியவான் என்றாலே தனக்கு போதும் என்று இல்லாமல் இன்னும் அதிகம் என்கிற சிந்தனையில் இருக்கும் ஒரு மனிதன் தானே!! வேதம் கூறுகிறது, இப்படி ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்களுக்கு பலவிதமான சோதனைகள் நிச்சயம் உண்டு, அந்த சோதனைகள் அவன் விழும்படீயாக இருக்கும் கண்ணிகளாகும். ஐசுவரியத்தின் ருசியை கண்ட எந்த‌ ஒரு மனுஷனுக்கும் எப்படியாகிலும் இன்னும் அதிகமாக சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற என்னம் தான் மனதில் வரும். அந்த என்னங்களை உண்மைப்படுத்த அவன் எப்படியாகிலும் ஐசுவரியத்தை சேர்க்க பிரயாசப்படுகிறான். அதற்கென்று என்ன என்ன கீழ்த்தரமான யோசனைகள் இருக்கிறதோ அனைத்தையும் நிறைவேற்றியாவது பணம் சேர்க்க பிரயாசப்படுகிறான். இப்படி இருக்க அவன் தன் மதியை இழந்து, உலகத்தில் பார்க்க ஒரு வேளை பெரிய மனுஷன் என்று இருப்பான், ஆனால் உண்மையில் அவன் எப்படி இருக்கிறான் என்றால், அவன் விழுந்தவனாக இருக்கிறான் என்கிறது வேதம். தேவைக்கு ஏற்ப வசதிகள் தேவை தான், அதை தேவனே வாய்க்க செய்கிறார், இங்கு சொல்லப்பட்டிருப்பது, "ஐசுவரியவானாவது" குறித்தே!! அடுத்த வசனம் சொல்லுகிறது, இந்த பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. இந்த பலனாக விசுவாசத்தைவிட்டு வழுவி போகிறார்களாம்! இன்று அநேக ஊழியர்கள் இந்த வரிசையில் தான் இருக்கிறார்கள்!! தங்களை பெரிய தேவ மனுஷர்கள் என்று நிலைநாட்டி கொள்ள இவர்கள் எடுக்கும் பிரயாசங்களுக்கு அளவே இல்லை. பல விதமான கணவுகளாள் தங்களின் போதனைகளை நிறப்பிக்கொண்டு, தேவன் தந்திருக்கும் உண்மையான விசுவாசத்தை விட்டு விலகி போய், பிறரையும் விலகச்செய்த்துக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறதே!!

சிலர் ஒரு படி மேலே போய், இந்த வசனங்களை மறுத்து, ஐசுவரியவானாக இருப்பது தான் தேவனின் சித்தம் என்று போதிக்கிறார்கள். ஆகவே தான் பவுல் தீமோத்தியுடன் சொல்லும் போது, இப்படி பட்ட துற்போதனை செய்பவர்களிடம் இருந்து விலகி ஓட சொல்லி உபதேசிக்கிறார்.இப்படிப்பட்டவர்கள் ஐசுவரியத்திற்காக எந்த விதமான கள்ள போதனைகளை கொண்டு வர தயங்க மாட்டார்கள், அதற்கு தேவன் தான் இதை என்னிடம் சொன்னார் என்றும் கதை கட்டுவார்கள். நேர்மையாகவும் உழைப்பினாலும் தேவையான ஐசுவரியம் ஒருவனிடம் இருக்கும் போது நிச்சயமாக நல்ல ஒரு விசுவாசம் அவனிடம் இருக்கும். அதுவே ஐசுவரியம், பணம் பெயர் புகழ் தேவைக்கு அதிகமாக சேர்க்க நினைப்பவர்கள் "கண்ணியில்" சிக்குபவர்கள் என்று வேதம் கூறுகிறது. கண்ணியில் சிக்குபவன் தான் சிக்கிக்கொண்டு இருக்கிறான் என்று தெரியாது, இறுதியில் தான் அவன் முற்றிலுமாக மாட்டி விட்டான் என்பது புரிய வரும்.

பிரியமானவர்களே, தேவன் நமக்கு தேவையானது அனைத்தையும் நாள்தோறும் தந்துக்கொண்டு தான் இருக்கிறார். நேர்மையாக உழைத்து, அதிகமாக ஆசைப்படாமல், பிறர் மேல் அன்பு செலுத்து, வேதம் போதிக்கும் விசுவாசத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு வாழ்வதே சிறந்தது என்பது தான் இந்த வசனங்கலில் சாரம்.  முயற்சிக்கலாமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

//நேர்மையாகவும் உழைப்பினாலும் தேவையான ஐசுவரியம் ஒருவனிடம் இருக்கும் போது நிச்சயமாக நல்ல ஒரு விசுவாசம் அவனிடம் இருக்கும். அதுவே ஐசுவரியம், பணம் பெயர் புகழ் தேவைக்கு அதிகமாக சேர்க்க நினைப்பவர்கள் "கண்ணியில்" சிக்குபவர்கள் என்று வேதம் கூறுகிறது.//

வசனங்களுக்கு நல்லதொரு விளக்கம் தந்துள்ளீர்கள், நன்றி.

தேவைக்கு அதிகமாக ஐசுவரியம், பணம், பெயர், புகழ் சேர்க்க நினைப்பவர்கள் “கண்ணியில்” சிக்குவார்கள் என்கிறீர்கள். கண்ணியில் சிக்குவதால் அவர்களுக்கு என்ன கேடு உண்டாகும்? அதையும் சொன்னால் பயனாக இருக்கும்.

ஐசுவரியவான்களாக விரும்புபவர்கள், கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற இச்சைகளில் விழுவார்கள் என 9-ம் வசனம் கூறுகிறது. இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள கேடு எது, அழிவு எது என்பதையும் விளக்கினால் நலமாக இருக்கும்.




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard