kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எசேக்கியா பிரான்ஸிஸ் சளைத்தவனல்ல‌...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
எசேக்கியா பிரான்ஸிஸ் சளைத்தவனல்ல‌...


எசேக்கியா பிரான்ஸிஸ் சளைத்தவனல்ல‌...

ஸ்கூல் ஆப் ஹோலி ஸ்பிரிட் க்கு 7000 ரூபாய். ஷார்ட் டர்ம் கோர்ஸ் வெறும் 1000ரூபாய்தான்.

பரிசுத்த ஆவி விற்பனைக்கு 7000ரூபாய்.

தீர்க்கதரிசன பயிற்சிக்கு ஆயிரம் ரூபாய் மட்டும்.

எங்கே போய் முட்டிக்கொள்ள‌.....


 

Berachah Training Programs

SPONSORSHIP

 One person for STC ( Rs1000/- )
 One person for the School of the Holy Spirit ( Rs7000/-)


-- Edited by soulsolution on Sunday 15th of August 2010 11:28:10 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

On Going Projects

Our Poondi Camp site Building Project

God has given us a very beautiful and scenic landscape very close to Poondi reservoir approx 80 Km from Chennai 5 Acres of Land and the area under construction is 20,000 sqft approx

You can sponsor One sq. ft. for Rs.1000/- or USD 25/- or One sq. mt. for Rs.10000/- or USD 250/-

You can sponsor a room by donating Rs.1,00,000/- or USD 2500/-

We need Architects, Landscape specilists, Engineers and other technicians on short term and long term basis to help us. For the first phase our estimated cost is around Rs.1,00,00,000/-

We are arranging regular visits from Chennai for prayer groups who would like to visit our campsite. If the Lord is stirring your heart to be a part of our ministry sow right now to reap the harvest.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

தீர்க்கதரிசனத்திற்கும் பயிற்சியா? எத்தனை துணிகர மோசடி?

கொடிய கடைசி நாட்களில் மனுஷர்கள் துணிகரமுள்ளவர்களாய் இருப்பார்கள் எனும் பவுலின் வார்த்தைக்கு (2 தீமோ. 3:4), எசேக்கியா பிரான்சிஸ் ஓர் ஆதாரமாய் விளங்குகிறார்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பெரிய கொடுமை என்னவென்றால், பால் தினகரன் நடத்திய‌ பவர் மினிஸ்டிரி (வல்லமை ஊழிய முகாம்) மற்றும் எசேக்கிய ஃப்ரான்சிஸ் நடத்த்திய தீர்க்கதரிசன பள்ளிக்கு நானும் ஒரு காலத்தில் மாணவனாக சென்று வந்திருக்கிறேன். ஆனால் கர்த்தரோ இப்படி பட்ட பயங்கரமான உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுத்து என்னை காத்துக்கொண்டார் (சங். 40:2). இந்த கூட்டங்களில் நடக்கும் அக்கிரமங்களும், அந்நிய பாஷை என்கிற ஒரு வெறித்தனமும், எதற்கு கைத்தட்டுகிறோம் என்றுகூட தெரீயாமல் கை தட்டுவதும் (ஏதோ வசியம் நடக்கும் போல்), குதிக்க சொன்னால் குதிப்பதும், பக்கத்தில் இருப்பவரை பார்த்து சிரிக்க சொன்னால் சிரிப்பதும், கை கொடுக்க சொன்னால் கை கொடுப்பதும் போன்ற நிறைய ட்ரில் நடக்கும். இப்படி பட்ட ஒரு மாய உலகத்திலிருந்து தேவன் தான் என்னை விடுவித்தார். ஆனால் இன்று பலர் சொல்லுவது போல் அவர் என்னிடம் வந்து நேரடியாக பேசவில்லை, என்னை பரலோகத்திற்கோ, நரகத்திற்கோ கூட்டி கொண்டு காண்பிக்கவில்லை, மாறாக மாறாத அவரின் வார்த்தைகளினால் பேசினார். "உமது வசனமே சத்தியம்". இது தான் தேவனை புரிந்துக்கொள்ள கொடுக்கப்பட்டுள்ள மந்திரம். மாணவனாக இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, இங்கு நடக்கும் காரியங்களை பார்க்க மாத்திரமாவது போய் வர வேண்டும். கடைசி காலம், இது எல்லாம் நடப்பது தெரிந்ததே!! ஆனால் இது எல்லாம் சரி என்று சொல்லும்படியும் இவர்களை (இந்த கள்ள தீர்க்கதரிசிகளை) தேவன் அளவிற்கு உயர்த்தும் நம் "சாதாரன விசுவாசிகள்" இருக்கிறார்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.பெரியன்ஸ் அவர்களே!

தீர்க்கதரிசன பள்ளியில் எவ்வாறு பயிற்சி கொடுத்தார்கள் என்பதை தாங்கள் விரும்பினால், தளத்தில் பகிர்ந்து கொள்ளும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இந்த எசேக்கியா பிரான்ஸிஸ் பக்கெட் கொடுத்து ஜனங்களை வாந்தியெடுக்க வைத்ததும். முதலில் தேவன் என்னை பிரம்மச்சாரியாக இருக்கச்சொன்னார் என்று தனக்கு 'தீர்க்கதரிசனம்' சொல்லிவிட்டு பின் ஜெர்மன்காரியை மணந்துகொண்டது என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த நாய்களுக்குத்தான் விவஸ்தையே கிடையாதே. அவ்வளவு பெரிய சுனாமி வந்ததையே ஒரு நாயும் சொல்லவில்லை. இந்த பிசாசுகள் இப்போதே 2011க்கு தீர்க்கதரிசனம் எழுதிவைத்திருப்பார்கள். வசன காலண்டர்களும் கூட ரெடியாக இருக்கும். எல்லாமே கூட்டுக் களவாணிகள்தானே!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

எசேக்கிய ஃபரான்சிஸ் கூட்டம் வசியப்பட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு கூட்டம். மேடையிலிருந்து அவரும் அவரின் மொழிப்பெயர்ப்பாளரும் பேசுவார்கள். பேசுவார்கள் என்றால் என்ன, வசிய வார்த்தைகள் தான். தங்களின் வாழ்க்கை அனுபவத்தை வசனமாக மாற்றி சொல்லுவது. எல்லாரும் வாய் பிளந்து வசியபட்டு உட்கார்ந்திருப்போம், நானும் தான்! அதன் பின் அந்நிய பாஷை என்கிற ஒரு கொடுமை. நான் அப்படி பட்ட ஒரு மட்டமான அனுபவத்தில் அப்பொழுது வரவில்லை, ஆகவே அந்த அறங்கமே அந்நிய பாஷையில் புகுந்து விளையாடியது, பெரும்பாளுமானோர் பெந்தகோஸ்தே பாஸ்டர்மார்களும், விசுவாசிகளும் தானே அங்கே வந்திருந்தார்கள், அந்நிய பாஷை பேசினால் தான் பரிசுத்த ஆவியை பெற்ற அடையாளம் என்று நம்பும் கூட்டத்தார் அவர்கள்!!. நான் பலரிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்டதறு, அர்த்தம் சொல்ல தெரியாது, ஆனால் தேவனே வந்து அவர்களின் நாவில் அவ்விதமான பாஷைகளை வைத்து போவாராம்!! என்ன கொடுமை இது. அர்த்தம் தெரியாமல் எல்லாம் ஒரு மொழியா! வேதம் சொல்லுகிறது, உலகத்தில் பேசப்படும் மொழிகளுக்கு அர்த்தம் இருக்கிறதே, அது எப்படி அர்த்தம் இல்லாத ஒரு மொழியை இவர்கள் பேசுகிறார்கல்! அங்கு தங்கி இருந்த நான்கு நாட்களும், வந்திருந்தோர் அனைவரும் (என்னை தவிர என்று தான் நினைக்கிறேன்) பல பாஷைகளில் துள்ளி குதித்தார்கள்,மேடையிலிருந்து கைகளை தட்ட சொன்னால் கைத்தட்டுவார்கள், பக்கத்தில் இருப்பவரை பார்த்து ஏதாவது ஒன்றை சொல்ல சொல்லுவார்கள், "பிரதர், நீங்கள் ஒரு தீர்க்கதரிசி' என்று சொல்ல சொல்லுவார்கல் (வசியம்) என் பக்கத்தில் இருப்பவர் அப்படி இல்லாவிட்டாலும், மேடைக்கு கட்டுபட்டு நானும் அப்படியே சொன்னேன் (என் பக்கத்தில் இருந்த நபர் அதன் பின் ஒரு பாஸ்டராக மாறி, இப்பொழுது ரெவெரெண்ட் என்கிற அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெந்தெகோஸ்தே நபர்). அந்த கூட்டங்களில் 1 கொரி. 12ம் அதிகாரத்தை மாத்திரமே மைய்யமாக வைத்து தங்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான (!!) சம்பவங்களை சொல்லி எங்களை போன்ற (மேடையில் பேசுபவர் தேவ மனுஷன் என்கிற நம்பிக்கையில் இருப்போர் கூட்டம்) மக்கள் வாயை பிளந்து தான் உட்கார்ந்திருபோம். பிறகு தான் உச்சமே வந்தது. பரிசுத்த ஆவியில் சிரியுங்கள் என்று ஒரு கட்டளை மேடையிலிருந்து வர, எனக்கு அழுகை தான் வந்தது. அங்கே இருக்கும் ஒவ்வொரு நபரும் பேய் தனமாக சிரிக்க ஆரம்பித்தார்கள். இது தான் பரிசுத்த ஆவியில் சிரிப்பதாம். வசியப்பட்டவர்களாக அவர்கள் சிரித்துக்கொண்டு இருப்பதை மேடையில் இருப்பவர்கள் ரசிப்பார்கள் (இவனுங்களை போல் கிறுக்கன்களை எப்படி வேண்டுமென்றாலும் நடத்தலாம் என்று பார்ப்பார்கள் போல்).

இயேசு பண்னை என்கிற அந்த இடத்தில் தங்கி இருந்த அந்த 4 நாட்களும் இப்படி தான். பரிசுத்த ஆவியில் சிரியுங்கள், நடனமாடுங்கள், அந்நிய பாஷையில் பேசுங்கள் என்பது மாத்திரமே. ஹிப்னாடிசம் செய்யும் ஒருவர் செய்யும் அனைத்தையும் ஊழியக்காரர்கள் என்கிற போர்வையில் இவர்கள் செய்கிறார்கள். அன்பு மாத்திரமே அங்கு மிஸ்ஸிங். அவர்களின் முகங்களில் ஒரு போலி சிரிப்பு இருப்பதை மாத்திரம் உணர முடிந்தது. சகோ ஆத்துமா எழுதியது போல், முன்பெல்லாம் பக்கெட் எடுத்து வாந்தி எடுக்க வைப்பார்கள், நானும் அப்படி நினைத்து தான் சென்றேன், நல்ல வேலை, என் வயிற்றை அவர்கள் கழுவிவிடவில்லை. தப்பித்தேன். ஆனால் அந்த கூட்டத்தில் கலந்து விட்ட பிறகு அவர்களை போல் அந்நிய பாஷையில் பேச வேண்டும் என்கிற என்னம் எனக்குள்ளும் வித்து விட துவங்கியது. அது பால் தினகரன் நடத்திய பவர் மினிஸ்டிரி கூட்டத்தில் நிறைவேறியது. அதை அடுத்த பதிவில் தருகிறேன்.

இந்த பதிவு வெளிவர ஊக்கப்படுத்திய சகோ அன்புக்கு நன்றி. (எழுத்து பிழைகளை கண்டுக்கொள்ளாதீர்கள்!!)



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37659968

இப்படி பரிசுத்த ஆவியின் விற்பனையாளர்கள் நடத்தும் கூட்டத்திற்கு சென்று வருவதை ஒரு லாட்ஜில் தங்கி வரும் அனுபவத்தோடு ஒப்பீட்டிருப்பதும் வித்தியாசமாக தான் இருக்கிறது. சகோ சந்தோஷ் அவர்கள் கூட்டத்திற்கு ஒரு முறையாக சென்று வந்த பின்பு இந்த விமர்சனத்தை எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்!!  ஆனால் விஷயம் தங்கி வருவதற்கு பணம் செலவு செய்வதலில்லை, அங்கே தங்குவதற்கான நோக்கம் தான். "இலவசமாக பெற்றீர்கள், இளவசமாக தாருங்கள்" என்பதை எத்துனை ஊழியர்கள் பின் பற்றுகிறார்கள்!

ஒரு மணி நேரம் மேடையில் இருந்தால் இத்துனை, பத்து பாடல்களை பாடினால் இத்துனை என்று பணத்தை தானே குறியாக வைத்திருக்கிறார் இவர்கள்!! எனக்கு தெரிந்து பெரிய (!!) தேவ மனிதர்களில் ஒருவர் மாத்திரம் ஊழியத்தை தன் செலவில் வைத்துக்கொள்வார், திரு ஜட்ஸன் ஆபிரகாம் மற்றும் திருமதி ப்ரீத்தா ஜட்ஸன். ஆனால் அவர்கள் மேடையில் வேறு கூத்து நடக்கும். அது வேறு விஷயம்.

எப்படி தான் இவர்களை எல்லாம் சகோ என்று எழுத தோன்றுகிறதோ, திரு சில்சாம் இறைவன் தளத்தில் சொல்லியது போல் இந்த சுய விளம்பர ஊழியர்களை இனிமேல் இந்த தளத்திலும் திரு (வயதிற்கு மரியாதை குடுத்து தான், தகுதிக்கு அல்ல) என்று அழைக்கலாம். அவர்களில் நிருபிக்கப்பட்ட ஓநாய்களாக இருந்தால் அந்த மரியாதை கூட அவர்களுக்கு தேவை இல்லை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard