kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புதுவருட "வாக்குத்தத்தங்கள்" ஜாக்கிரதை!


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
புதுவருட "வாக்குத்தத்தங்கள்" ஜாக்கிரதை!


புதுவருட "வாக்குத்தத்தங்கள்" ஜாக்கிரதை!

அனேகமாக எல்லா கிறிஸ்தவ பிரிவுகளாலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ல் தவறாமல் கடைபிடிக்கும் "புதுவருட வாக்குத்தத்த" முட்டாள்தனம் கண்டிப்பாக இவ்வருடமும் இருக்கும். யாருக்கோ எப்போதோ கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை தங்களுக்கு என்று எண்ணவைத்து வசன வியாபாரம் செய்வது வழக்கமாகிவிட்டது.
சென்றவருடம் "களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்" என்ற வாக்குத்தத்தம், இந்த வருடம் "உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்" என்ற வாக்குத்தத்தம். ஆக சென்றவருடத்தில் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பியதால் ஏற்பட்ட துக்கம் இவ்வருடம் சந்தோஷமாக மாறும் என்றுதான் அர்த்தமாகும். சபைக்கு ஒரு வாக்குத்தத்தம், தனிநபருக்கு ஒன்று, குடும்பத்துக்கு ஒன்று என்று இதில் ஏகப்பட்ட பிரிவுகள் வேறு.

இவ்வருடமாவது திருந்துவோமா?


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:36:46 PM

__________________
"Praying for your Success"


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:

புதுவருட "வாக்குத்தத்தங்கள்" ஜாக்கிரதை!
 



இதில் ஜாக்கிரதையாக இருக்கவோ திருந்தவோ  
என்ன இருக்கிறது?
 
 II கொரிந்தியர் 1:20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.

வசனம் இவ்வாறு கூறும் பட்சத்தில், பழைய வசனங்களை நமது வக்குத்த்தமாக எடுத்துகொள்ள கூடாது என்று எதன அடிப்படையில் சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை.
 
வேதவசனங்கள் எல்லாமே எல்லோருக்கும் 
எக்காலத்திலும் பொருந்தக்கூடியது.  அது அவருக்கு சொன்னது இது இவருக்கு சொன்னது என்று பிரித்து   பார்த்தால் எல்லாமே வேறு  யாருக்காவது ஒருவருக்கு  சொல்லப்பட்டதுதான் நமக்கு  இல்லை  என்று ஆகிவிடும்.  
 
எல்லாவற்றையுமே விகர்ப்பமாக யோசனை செய்து பதிவிடுவது ஆச்சர்யத்தை அளிக்கிறது.
 

 

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ராஜ் எழுதுகிறார். //வேதவசனங்கள் எல்லாமே எல்லோருக்கும்
எக்காலத்திலும் பொருந்தக்கூடியது.  அது அவருக்கு சொன்னது இது இவருக்கு சொன்னது என்று பிரித்து   பார்த்தால் எல்லாமே வேறு  யாருக்காவது ஒருவருக்கு  சொல்லப்பட்டதுதான் நமக்கு  இல்லை  என்று ஆகிவிடும்.//


"இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்...." இந்த வசனம் நிச்சயம் உங்களுக்கு  இல்லை என்று நினைக்கிறேன்.   வசனத்தை சுதந்தரித்துவிடாதேயும் விவகாரமாகிவிடும்.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:

ராஜ் எழுதுகிறார். //வேதவசனங்கள் எல்லாமே எல்லோருக்கும்
எக்காலத்திலும் பொருந்தக்கூடியது.  அது அவருக்கு சொன்னது இது இவருக்கு சொன்னது என்று பிரித்து   பார்த்தால் எல்லாமே வேறு  யாருக்காவது ஒருவருக்கு  சொல்லப்பட்டதுதான் நமக்கு  இல்லை  என்று ஆகிவிடும்.//


"இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்...." இந்த வசனம் நிச்சயம் உங்களுக்கு  இல்லை என்று நினைக்கிறேன்.   வசனத்தை சுதந்தரித்துவிடாதேயும் விவகாரமாகிவிடும்.



முதலில் சுட்டிக்காட்டப்பட்ட வசனத்துக்கு பதில் தாருங்கள் சகோதரரே!  
 
ஏன் நீங்கள் சொல்லும்  வசனம் நமக்கு பொருந்த கூடாதா  என்ன?
 
"நான் மாமிசமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் என்னால் செய்யமுடியாத அதிசயமான  காரியம் ஒன்றுண்டோ"
 
என்று சொல்லும் கர்த்தர்  எதை வேண்டுமானாலும் செய்ய வல்லவர். ஆணின் வயிற்றில் கூட குழந்தைகள்   உருவான செய்தி கேட்டதில்லையோ?  அண்டவர் சொன்னால் நடக்காத காரியமும் ஒன்றுண்டோ? 
 
தேவனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்! அவர் நினைத்தால் கழுதையையும் தீர்க்கதரிசனம் பேச வைப்பார் என்பது தெரியுமல்லவா?

 

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வேதவசனங்கள் எல்லாமே எல்லோருக்கும்
எக்காலத்திலும் பொருந்தக்கூடியது
.  அது அவருக்கு சொன்னது இது இவருக்கு சொன்னது என்று பிரித்து   பார்த்தால் எல்லாமே வேறு  யாருக்காவது ஒருவருக்கு  சொல்லப்பட்டதுதான் நமக்கு  இல்லை  என்று ஆகிவிடும். 

என்று பதித்துவிட்டு சமாளிக்கப்பார்க்கிறீர்கள். நீர் இந்தப் புதுவருடத்தில் இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்து 2010 ல் ஒரு ஆண் தாயாக ஆகுங்களேன் பார்க்கலாம். தேவ நாமம் 'மகிமை'ப்படுமல்லவா?


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:36:33 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

The so called Ministers in christiandom are nothing more than stomachs yearning for money and money even if it is possible to collect showing a dead body. Such is the case of the modern ministers. And I further add to this that they loose their moral right to compare themselves with Paul the chosen apostle.

The promises made to Israelites can never be inherited in Christian life. You may show some crazy example of someone getting rich or someones disease gone. But where it doesn't happen. I mean whether what you so called ministers testify doesn't happen in other religions, those who have better love than these crack ministers. And I wonder who gave them the right to announce themselves Ministers who can never even lick the mud of Pauls heel.

These New Year promises are nothing but another means to fill in their (ministers) pockets so that they along with their generations can eat the filth which they beg and store in their store houses, the hard earned of innocent people.

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:36:21 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

chillsam wrote:

தயவுசெய்து தமிழில் கூறவும்;எனக்கு ஆங்கிலம் தெரியாது;எனவே சற்று விளக்கமாகவும் கூற வேண்டுகிறேன்;Thank you so much..!




மேற்படி கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் பிணத்தைக் காட்டியாவது பணம் பண்ணுவார்கள். இதில் அப். பால் போன்றவர்களோடு தங்களை ஒப்பிட இவர்களுக்கு எள்ளளவும் தகுதியில்லை.

இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் ஒரு கிறிஸ்தவனுக்கு ஒருபோதும் கிடைக்காது. யாரோ ஒரிருவர் பணக்காரனானதையும், ஒரு சிலர் சுகமடைந்ததையும் ஏற்கலாகாது. ஏனென்றால் அத்தகைய சம்பவங்கள் எல்லா இடங்களிலும் புறமதஸ்தாரிடத்திலும் நடக்கிறது. இவர்களைக் காட்டிலும் அவர்களிடத்தில் அன்பு அதிகம் உண்டு. அப்.பவுல் கால் தூசியை நக்கக்கூட அருகதையற்ற இவர்களுக்கு யார் "ஊழியர்"  பட்டம் கொடுத்தார்களோ?

இந்த புதுவருட 'வாக்குத்தத்தங்கள்' தங்கள் பணப்பைகளை நிரப்பவும்,
பாடுபட்டு சம்பாதித்த மற்றவர் பணத்தில் தானும் தன் குடும்பமும் ஆடம்பர வழ்வு வாழ  இவர்கள் கையாளும் ஒரு தந்திரமே.

(ஓரளவு சரியாக மொழி பெயர்த்துள்ளேன்)


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அருமையான மொழிப்பெயர்ப்பு. இப்படி வேதத்தை சரி வர மொழிப்பெயர்த்திருந்தால் இத்துனை குழப்ப சபைகளும் அதிலும் சுயமாக உருவாக்கப்பட்ட குழப்பும் ஊழியர்களின் கூட்டம் நிச்சயம் குறைந்திருக்கும், ஆனால் இப்படி நடப்பது தான் தேவ சித்தம் என்றால், நாம் ஆசைப்பட்டு என்ன லாபம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard